search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sesame bag fraud in"

    • வியாபாரி வந்து எள் மூட்டையை எடுக்கும் போது ஒரு எள் மூட்டை மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
    • இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மைலம்பாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகின்றது.

    இங்கு மைலம்பாடி, அம்மாபேட்டை, நால்ரோடு, அந்தியூர், ஒலகடம், பூனாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள எள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

    பின்னர் சனிக்கிழமை அன்று ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் ஈரோடு, சங்ககிரி, சேலம், சிவகிரி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் எடுத்து செல்வார்கள்.

    இந்த நிலையில் சனிக்கிழமை 100 எள் மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சிவகிரி பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் 10 எள் மூட்டை ஏலத்தில் எடுத்துள்ளதாகவும்,

    அந்த வியாபாரி எள் மூட்டைகள் அனைத்தும் மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்துவிட்டு பிறகு வந்து எடுத்து சென்று விடலாம் என்று சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்த வியாபாரி வந்து எள் மூட்டையை எடுக்கும் போது 9 மூட்டைகள் மட்டும் அங்கு இருப்பு இருந்தது. ஒரு எள் மூட்டை மட்டும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கனிமொழி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து மாயமான எள் மூட்டையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார்.

    இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைத்தும், கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×