என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Settlement of cases"
- ரூ.2 கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
- வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சுஜாதா, கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (32), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சவுந்தரி (26). தம்பதியருக்கு 5வயதில் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மோகன் மாமண்டூர் - புதூர் சாலையில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மோகனின் மனைவி சவுந்தரி ராணிப்பேட்டை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரம் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.37 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான ஆணையையும் வழங்கினார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 22 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்பட மொத்தம் 31 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியே 62 லட்சத்து 70ஆயிரத்து 209 வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதில் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா்.
- ஜி.பழனிகுமாா், பி.முருகேசன் மற்றும் வக்கீல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் 7 அமா்வுகளாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா். இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்பநல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1,625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 323 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. மேலும், ரூ. 17.71 தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதியுமான பாலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாய நீதிபதி எஸ்.ஸ்ரீகுமாா், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் வி.புகழேந்தி, முதன்மை சாா்பு நீதிபதி பி.செல்லதுரை, குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் ஜி.பழனிகுமாா், பி.முருகேசன் மற்றும் வக்கீல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- திருவண்ணாமலை கோர்ட்டில் மக்கள் நீதி மன்றம் நடந்தது
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3.76 கோடி நஷ்டஈடு
வண்ணாமலை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்த மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணி ஆணைக்குழு தலைவருமான இருசன் பூங்குழலி மேற்பார்வையில், தலைமை குற்றவியல் நடுவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் பார் அசோசியேசன் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 368 எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 69 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக 3 கோடியே 76 லட்சத்து 95 ஆயிரத்து 38 ரூபாய் வழங்கப்பட்டது.
- அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி துவக்கி வைத்தார்,
- அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 748 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி துவக்கி வைத்தார்,
அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா, நீதித்துறை நடுவர்கள் அரியலூர் செந்தில்குமார், கற்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டத்தில் சார்பு நீதிபதி லதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர் ஆகியோரும், செந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அக்னேஷ்ஜெயாகிருபா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, மற்றும் வக்கீல் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 748 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 21 சிவில் வழக்குகளும், 6 மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், 445 சிவில் குற்ற வழக்குகளும், 4 செக் வழக்குகளும், 1 பண மீட்பு வழக்கும், 12 நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்குகளும், 85 வங்கிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் 14,815 போக்குவரத்து காவல்துறை விதிமீறல் வழக்குகளுக்கும், கொரோனா காலத்தில் அரசு விதிமுறைகளை மீறிய 2587 வழக்குகளும், ஆக மொத்தம் 17 ஆயிரத்து 976 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்