என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sewer facility"
- திருப்பரங்குன்றம் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
- இது சம்பந்தமாக குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர். முகாமில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அவல நிலை உள்ளது. திருநகர் 5-வது பஸ் நிறுத்தத்தில் இருந்து 3-வது பஸ் நிறுத்தம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்கள் கொடுத்தனர்.
கூட்டத்தில் நகர பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர் முஸ்தபா கமால், மாமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, சுவேதா சத்யன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.