search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seythunganallur"

    • வியாக்ரபாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    • நெல்களத்தில் விவசாயம் செழிக்க வேண்டி விநாயகர் முகத்தில் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயமான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயம் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வரை திருப்பணி இன்றி கிடந்தது. உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் வி.கோவில் பத்து, செய்துங்கநல்லூர் ஆன்மிக பேரவை சார்பில் இந்த கோவிலில் திருப்பணி நடந்தது. கொடி மரம் வைக்கப்பட்டது. பள்ளிஅறை கட்டப்பட்டது.

    63 நாயன்மார்கள் சிலைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டது. 100 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அனைத்து திருவிழாக்களும் மீண்டும் நடத்தப்பட்டது. தற்போது திருப்பணி செய்து கும்பாபி சேகம் நடந்தது, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து ள்ளது. இந்த கோவிலை தென் தில்லை எனும் தென் சிதம்பரம் என்றும் அழைப்பர். இந்த கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் சஷ்டி திருவிழா நடந்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த வருடம் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக கடந்த 6 நாள்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடந்து வந்தது. அதன் பின்னர் சூரசம்காரத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் மாலையில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அருகே உள்ள நெல்களத்தில் விவசாயம் செழிக்க வேண்டி விநாயகர் முகத்தில் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன் பின்னர் விநாயகர் கோவில் முன்பு வந்து சூரபத்மனை வதம் செய்தார். பின்னர் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அலங்கார பூஜை நடந்தது. பின்னத் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.

    • தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், காய்கறி மற்றும் வாழை சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.
    • உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டம் குறித்து விவசாயி களுக்கு கூறினார்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான தெற்கு காரசேரி, கீழப்புத்தனேரி ஆகிய கிராமங்களில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழுவிற்கான முன்பருவத்திற்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

    இப்பயிற்சிக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கி யப்பன் தலைமை தாங்கி தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல், விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.

    கருங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், காய்கறி மற்றும் வாழை சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கீழப்புத்த னேரி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாரதி, தெற்கு காரசேரி பஞ்சாயத்து தலைவர் பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தோட்டக்கலைத் துறையில் கலைஞர் திட்ட செயல்பாடுகள் குறித்து துணை தோட்டக்கலை அலுவலர் கமலேஷ் விளக்கமளித்தார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் உலகநாதன் தேசிய வேளாண்சந்தை திட்டம் மற்றும் நெல்சாகுபடியில் மதிப்பு கூட்டுதல் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றினார்.உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டம் குறித்து விவசாயி களுக்கு கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத், உதவி வேளாண்மை தோட்டக்கலை அலுவ லர்கள் சிவபெருமாள், கோபாலகிருஷ்ணன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துசங்கரி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • டி.பி.எஸ்.5 என்ற ரகமானது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கார் மற்றும் பிந்தைய பிசான பருவங்களில் பயிரிடலாம்.
    • இப்பயிர் ரகமானது தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, புகையான் போன்ற நெல் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மிக விரும்பி பயிரிடப்படும் அம்பை 16 நெல் ரகமானது சுமார் 32 வருடங்களுக்கு முன்பாக வெளியிட்ட நெல் ரகமாகும். தற்பொழுது இந்த ரகத்துக்கு மாற்றாக டி.பி.எஸ்.5 என்ற ரக மானது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கார் மற்றும் பிந்தைய பிசான பருவங்களில் பயிரிடலாம். மேலும் இப்பயிர் ரகமானது தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, புகையான் போன்ற நெல் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. இந்த ரகத்தின் வயது 115 முதல் 118 நாட்கள் கொண்டது. மேலும் நல்ல அரவைத் திறன் கொண்டது. அம்பை 16 ரகத்தை விட 14 சதவீதம் அதிக விளைச்சல் தரக்கூடியது. சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 6000 முதல் 6300 கிலோ வரை தரக்கூடியது.

    பிசான பருவத்தில் மற்றொரு ரகமான கோ51 ரகத்தை விவசாயிகள் பரவலாக பயிரிட்டு வருகின்றனர். 2013 -ம் ஆண்டில் அறிமுகமான இந்த ரகம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ரகத்தில் குலை நோய், இலை உரை கருகல் நோய், வெள்ளை தத்துப்பூச்சி நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. அதாவது சராசரி மகசூல் ஹெக்டருக்கு 6500 முதல் 11,500 கிலோ வரை தரக்கூடியது. இந்த ரகத்தின் வயது 105 முதல் 110 நாட்கள் கொண்டது.

    தற்போது கருங்குளம் மற்றும் வல்லநாடு ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவு விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நெல் ரகங்களை மானியத்தில் பெற்று சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமை மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகராஜா தொடங்கி வைத்தார்.
    • முகாமில் 4 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழசெக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    இதனை மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகராஜா தொடங்கி வைத்தார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் 23 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 4 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், இருட்டறை உதவியாளர் எட்டையா, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, அரி பால கிருஷ்ணன், அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவினர் செய்திருந்தார்கள்.

    செய்துங்கநல்லூர் அருகே வாலிபரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்குகாரசேரியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் தங்கபாண்டி (வயது 27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான ராமசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் உள்ளது. தங்கபாண்டியின் உறவினர் பெண்ணை கேலி செய்ததாக ராமசுப்பிரமணியனை, தங்கபாண்டி எச்சரித்துள்ளார்.

    இதற்கிடையில் தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வதிலும் இவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தெற்கு காரசேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அவர் வல்லகுளம் சாஸ்தா கோவில் விலக்கு அருகே வந்த போது ராமசுப்பிரமணியன் தனது நண்பர்களான சுந்தரம், முருகன், ஊய்க்காட்டான் ஆகியோருடன் சேர்ந்து அவரை வழி மறித்து சராமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம், முருகன், ஊய்க்காட்டான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொலையில் முக்கிய குற்றவாளியான ராமசுப்பிரமணியனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் ராமசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ராமசுப்பிரமணியன் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    எனக்கும், தங்கப்பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து பல இடங்களில் நாங்கள் சந்திக்கும் போது அவர் என்னை முறைத்து கொண்டு வாக்குவாதம் செய்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்கு எனது நண்பர்கள் சுந்தரம், முருகன், ஊய்க்காட்டான் ஆகியோரை சேர்த்துக் கொண்டேன்.

    இதையடுத்து தங்கபாண்டியை கண்காணித்து வந்தோம். சம்பவத்தன்று அவர் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதை சாதகமாக்கி கொண்டு நாங்கள் அரிவாளால் அவரை சரமாரி வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டி மீது சேரகுளம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×