என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shivam Mavi"
- ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
- ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
புதுடெல்லி:
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சாவில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 40 விளை யாட்டுகள் 481 பிரிவுகளில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டியும் ஆசிய விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீரர் ஷிவம்மவி விலகியுள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ்தீப் இடம் பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, பிரப் சிம்ரன்சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஆகாஷ்தீப்.
- ஐ.பி.எல். போட்டியில் ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசுவதை பார்த்து இருக்கிறேன்.
- நான் அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தேன்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த ஷிவம் மாவியை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார்.
இது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
இந்த போட்டியில் நாங்கள் தோற்று விடும் நிலை உருவானது. கடைசி ஓவரை அக்ஷர் படேல் அபாரமாக வீசினார். நாங்கள் பலமுறை விவாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசுவதை பார்த்து இருக்கிறேன். நான் அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தேன். மாவியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக பந்து வீசினார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தோல்வி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறும் போது, 'ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டிய போட்டி யாகும். 163 ரன் இலக்கு எடுக்க கூடியது. நாங்கள் அடுத்த ஆட்டத்தில் பதிலடி கொடுப்போம்' என்றார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஆட்டம் புனேயில் நாளை நடக்கிறது.
இதனால் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.
- முதல் விக்கெட் எனக்கு மிகவும் முக்கியமானதாகும்.
- ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் பதற்றத்தை கொஞ்சம் குறைத்தது.
மும்பை:
இலங்கைக்கு எதிரான பரபரப்பான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. இதனால் இலங்கைக்கு 163 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தீபக் ஹூடா 23 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர்), இஷான் கிஷன் 29 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 20 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
மதுஷனகா, தீக்சனா, கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, ஹசரங்கா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 160 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்னில் வெற்றி பெற்றது.
கேப்டன் தசுன் ஷனகா 27 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), குஷால் மெண்டீஸ் 25 பந்தில் 28 ரன்னும் (5 பவுண்டரி), கருணாரத்னே 16 பந்தில் 23 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர்.
24 வயதான ஷிவம் மாவி தனது அறிமுக போட்டியிலேயே அசத்தினார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அவர் 4 விக்கெட் வீழ்த்தினார். உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. அக்ஷர் படேல் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசினார். அவர் 10 ரன்களை கொடுத்தார். கடைசி ஓவரில் இலங்கை அணியின் 2 வீரர்களும் 'ரன் அவுட்' ஆனார்கள்.
தனது முதல் ஆட்டத்தி லேயே 4 விக்கெட் வீழ்த்திய ஷிவம் மாவி கூறியதாவது:-
இந்திய அணியில் இடம் பெறுவதில் மிகவும் தாமதம் ஆகிவிட்டது. 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடி 6 ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த 6 வருடங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. காயமும் ஏற்பட்டது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் பதற்றத்தை கொஞ்சம் குறைத்தது. முதல் விக்கெட் எனக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்