search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholavaram"

    சோழவரம் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே ஆத்தூரில் உள்ள பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

    அப்பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் கடையின் பின்புறம் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

    உடனே டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். கடையை திறந்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை ஊழியர்கள் மறைவான இடத்தில் வைத்ததால் தப்பியது.

    இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்.

    புழல் அருகே மேக்கரா மார்வெல் நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் புழல் பாலாஜி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறந்தபோது ‌ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது ரூ.10 ஆயிரம் பணம், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

    சோழவரத்தில் ரவுடி கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் திவாகர் (36) ரவுடி. கடந்த 30-ந்தேதி இரவு அவர் சோழவரம் ஏரிக்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த பாலகணஷ் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற பாபா சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக திவாகரை தீர்த்து கட்டியதாக கூறி உள்ளார். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி-சோழவரம் பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மொத்தம் 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகவேகமாக வாகனம் ஓட்டி வந்தது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ், ஹெல் மேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என விதிமுறை மீறிய மொத்தம் 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களி டம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
    சோழவரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சோழவரம் சோலையம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் லதா (வயது 17).

    இவர்களது வீட்டுக்கு புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த எழிலரசன் (26) அடிக்கடி வந்து சென்றார். அப்போது லதாவை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    கடந்த 7.4.2011 அன்று, ஆறுமுகம் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் லதாவும், அவரது தங்கையும் இருந்தனர்.

    அப்போது வீட்டுக்கு வந்த எழிலரசன், லதாவிடம், நான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். லதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன், லதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் தீர்ப்பு அளித்தார். அதில், கொலை, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் எழிலரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் எழிலரசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #tamilnews
    சோழவரம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.19 ஆயிரம் கொள்ளைபோனதாக நாடகமாடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.

    இங்கு சோழவரத்தை அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்த முருகன், சுரேஷ் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர்.

    இந்தநிலையில் நள்ளிரவு அவர்கள் சோழவரம் போலீசுக்கு போன் செய்து, ‘‘மர்மகும்பல் கண்ணாடி கதவை உடைத்து புகுந்து ரூ.19 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்’’ என்று பதட்டத்துடன் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்கள் முருகன், சுரேஷ் இருவரும் கொள்ளை நடந்ததாக நாடகமாடி ரூ.19 ஆயிரத்தை சுருட்டியது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    ×