search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shop Fired In Coimbatore"

    கோவையில் இன்று அதிகாலை பா.ஜனதா பிரமுகர் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் புவனேஷ்வரன்(வயது 35). இவர் பா.ஜனதா கட்சியின் கணபதி மண்டல பொதுச் செயலாளராக உள்ளார்.

    காந்திபுரம் 7-வது விரிவாக்க வீதி, டாக்டர் ராதா கிருஷ்ணன் ரோடு சந்திப்பு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை 3.20 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் சென்று இவரது கடையின் ‌ஷட்டர் கதவை லேசாக உயர்த்தி கடைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் கடை தீ பிடித்து, கண்ணாடிகள் வெடித்து சிதறியது.

    ஜவுளிக்கடையில் இருந்து பெரும் புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் புவனேஷ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் கடையில் பிடித்த தீ அணைந்து விட்டது. இதில் கண்ணாடி உடைந்தும், ஜவுளிகள் எரிந்தும் நாசமாயின.

    சம்பவ இடத்தில் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். மற்றொருவர் ‘மங்கி குல்லா’ அணிந்து முகத்தை மறைத்துள்ளார். அவர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ வைத்தவர்கள் கடையில் இருந்து சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வந்துள்ளனர். கடைக்கு தீ வைத்த பின்பு மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்கின்றனர். இந்த காட்சிகளை வைத்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத் துக்கு தடய அறிவியல் நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ரத்தினபுரியை சேர்ந்தவர் மோகன். பா.ஜனதா வார்டு பொறுப்பாளரான இவர் காந்திபுரம் 100 அடி சாலை யில் வெல்டிங் கருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு மர்மநபர்கள் 2 பேர் தீ வைத்துள்ளனர்.

    இந்த கடை முன்பு இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இந்த கடைக்கு தீ வைத்த அதே நபர்கள் தான் புவனேஷ்வரனின் கடைக்கும் தீ வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் களை போலீசார் தேடி வருகின்றனர்.  #Fireaccident

    ×