search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shops auction"

    • ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும்
    • ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஏலம் மற்றும் பொது ஒப்பந்த புள்ளியில் குத்தகை இனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடைகள் ஏலம் 2-வது மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுதா தலைமையில் இன்று நடந்தது.

    இதில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

    2023-24 ஆம் ஆண்டு முதல் 26-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கான குத்தகை ஏலம் நடந்தது.

    இதில் பழைய மீன் மார்க்கெட் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கடைகள், இருசக்கர வாகன வசூல் உரிமம், பொருள் பாதுகாப்பு பெட்டகம், அருகில் உள்ள கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய பொருள் வைப்பு பாதுகாப்பு அறை உரிமம், பழைய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பைக் நிறுத்துமிடம் பஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ஏலம் நடந்தது.

    குத்தகை விடப்பட்ட கடைகளுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • வேலூரில் பயணிகள் அவதி
    • முறைகேடாக குலுக்கல் நடத்தியாக குற்றம் சாட்டியுள்ளனர்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படாததால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.ஏற்கனவே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் 4 முறை ரத்து செய்யப்பட்டது.

    புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த 12 வியாபாரிகள் தங்களுக்கு கடை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

    அவர்களுக்கு கடை ஒதுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் 3 பேருக்கு கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் தனித்தனியாக குலுக்கல் முறையில் கடை ஒதுக்கும்பணி நடந்தது. ஆனால் 3 பேருக்கும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கான எண்கள் குலுக்களில் வந்தது.

    இதற்கு வியாபாரிகள் தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை. முறைகேடாக குலுக்கல் நடத்தியாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீண்டும் குலுக்கள் நடத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    ஆனால் அவர் கடைகளை ஏற்க மறுத்தால் பொது ஏலத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    கோர்ட்டு அறிவுறுத்தல் படி பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குலுக்கல் நடத்தப்பட்டது‌. குலுக்கல் தொடங்கி முடிந்த பிறகு முறைகேடு மோசடி என குற்றம் சாட்டுகின்றனர்.

    அவர்கள் மீண்டும் வேறு சீட்டை எடுக்க அனுமதித்தால் குலுக்கலுக்கான அடிப்படையே தவறாகிவிடும்.ஒரு முறை தான் அனுமதிக்கப்படும் மற்றவர்களுக்கு தான் அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். தரைத்தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் கடைகள் வேண்டும் என அவர்கள் செயல்படுகின்றனர்.

    அவர்களுக்கு ஒரு வாரம் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கடைக்கான தொகையை மாநகராட்சியில் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கலில் விழுந்த கடைகளும் பொது ஏலத்திற்கு கொண்டுவரப்படும். விரும்பிய கடை தான் வேண்டும் என கேட்பவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளோம் என்றார்.

    புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விழுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×