என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "should abandon the"
- சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரில் மண்வளம் பாதுகாப்பு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
- இதில் காவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரில் மண்வளம் பாதுகாப்பு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் காவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை பூ நறுமண ஆலை அமைக்க வேண்டும். குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளை ஏற்றுமதி நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட ஏற்றுமதி முனையத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும்
வாழை மற்றும் பழங்கள் வகைகள் அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
உரத்தட்டுப்பாடு மிக தீவிரமாக உள்ளது. உரம் விலை ஏற்றம் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இணை ஈடுபொருட்கள் கிடைத்தால் மட்டுமே யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைக்கும் என நிலை தொடர்கிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த கூட்டுறவு நிறுவனம் மத்திய அரசு அறிவித்ததை வரவேற்கி றோம். அதை விரைவில் நடைமுறை ப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.