search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "showing handcuffs to"

    • தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.

    பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.

    இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.

    இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.

    2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.

    அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.

    ×