என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sickle"
- பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
- பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.
பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
- மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
- உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.
அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
- குடும்ப பிரச்சினையில் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் கணவனை சரமாரியாக வெட்டினார்.
- படுகாயமடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கோம்பை துரைசாமிபுரம் 2-வது வார்டை சேர்ந்தவர் ஈஸ்வரன்(36). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஈஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ஈஸ்வரனின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்து கொடுக்குமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சாப்பாடு தயாரிக்காமல் இருந்து ள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி தனது கணவன் என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடு த்தார். படுகாயமடைந்த ஈஸ்வரன் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோம்பை சப்-இன்ஸ்பெ க்டர் முத்துச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர்.
- உடையார் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே அந்த காரில் இருந்த நபரை சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியை சேர்ந்த உடையார் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆயுதத்தை பதுக்கி வைத்திருந்ததாக உடையார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
- அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்ததனரா?
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக தமிழ் பல்கலைக்கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் தஞ்சை அடுத்த திருக்கானூர் பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 22), வல்லத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (19), கிஷோர் (29), மேலூரை சேர்ந்த முரளிதரன் (19) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் என்பதும், அரிவாளுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
மேலும் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்ததனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அய்யப்பன் தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- ஆத்திரம் அடைந்த சிறுவன், அய்யப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 50). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
அய்யப்பன் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சேது(18), தாழையூத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யப்பனுக்கும், சேதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சேது வேலையை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சேதுவும், சிறுவனும் அய்யப்பன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி வேலையை முடித்துவிட்டு நிறுவனத்தின் அருகே அய்யப்பனும், 15 வயது சிறுவனும் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது என்னை மதிக்காமல் சேது என்னை பற்றி அவதூறாக பேசிவிட்டான். அவனை தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சிறுவனிடம் அய்யப்பன் கூறி உள்ளார். இதனை அந்த சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிறுவன், அங்கிருந்த அரிவாளால் அய்யப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அய்யப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவன் மற்றும் அவன் இந்த சம்பவத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்த சேது ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலைவழக்காக மாற்றம் செய்தனர்.
- சிவராத்திரி விழாவில் நடந்த குல தெய்வ வழிபாட்டில் அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர்.
- இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் ஆண்டி முனீசுவரர் கோவில் வீட்டில் சிவராத்திரியின் 3-ம் நாளில் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். ஆண்டி முனீசுவரர் கோவிலில் பக்தர்கள் தட்ட பயறு, மொச்சை, சுண்டல், பச்சரிசி, தேங்காய், பழம், அவல், மாவிளக்கு உள்ளிட்டவைகள் வேகவைத்து சாமிக்கு படையலிட்டனர். மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான சின்ன கருப்பர், வெள்ளாளங்கருப்பர், முனீசுவரர், சன்னாசி உள்ளிட்ட சாமியாடிகளின் சாமியாட்ட நிகழ்ச்சி நடந்தது.
கருங்காலி கம்பு, சாட்டை எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பெண்கள் குலவையிட சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறினர்.இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து அருள்வாக்கு கேட்டு சென்றனர். பின்பு அவித்த பயறு வகைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பிறகு கோவில் வீட்டு வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.
- 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது
மதுரை
மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக தகராறு செய்து ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக ரமேஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
இதில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ரமேசை வெட்டியதாக முருகன், அவரது மனைவி செல்வி, மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ், தமிழரசன் ஆகிய 4 பேரையும் கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி வழங்கல்.
- வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்றார்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருவெண்காட்டில் ரூ.38 லட்சம் செலவில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாநந்தினிபிரபாகரன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவைத் தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்று பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய வேளாண்மை விரி வாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து விவசாயி களுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி, பாறை வழங்கி பேசினர்.
விழாவில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜிஎன்.ரவி மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், துணை வேளாண்மை அலுவலர்கள் ரவிச்சந்திரன், வேதை ராஜன், அலெக்சாண்டர், விஜய்அமிர்தராஜ், விதை அலுவலர் அசோக், கிடங்கு மேலாளர்கள் சரவணன், ரம்யா, வெங்கடேசன் மன்சூர் கலந்து கொண்டனர். ஒப்பந்தக்காரர் பழனிவேல் நன்றி கூறினார்.
இதேபோல் காரை மேடு பகுதியில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை கட்டிடத்தையும், கொள்ளிடம் வடகால் பகுதியில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண் மையக் கட்டிடங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்ணை கம்பு மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
- பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை பார்வ திபுரம் அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வமேரி (வயது 40). கடந்த.2012 ம் வருடத்தில் செல்வமேரி வீட்டு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்ட பழைய துணிகளை யாரோ போட்டு சென்று விட்டதாக செல்வமேரி திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகில் குடியிருந்து வந்த அந்தோணி தாஸ் (வயது 48) அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செல்வ மேரியை கம்பால் மற்றும் அருவாளால் வெட்டி தாக்கி உள்ளனர்.
இதனை தடுக்க வந்த ஸ்டாலின் மற்றும் சார்லஸ் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செல்வமேரி கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தோணி தாஸ், அர்விஸ் ஆகிய இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்ப ட்டனர்.
இந்நிலையில் பாபநாசம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி, அந்தோணி தாஸ், அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அர்விஸ்க்கு ரூ.1,500, அந்தோணி தாஸ் க்கு ரூ.1000 அபராத தொகை விதிக்கப்பட்டது.
- யுவராஜ் குழந்தைகளை பார்க்க அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு வந்து செல்வார்.
- தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் செயின்ட் மேரீஸ் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது38). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா மகேஷ்வரி என்பவருக்கும், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மகேஷ்வரி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் யுவராஜ் குழந்தைகளை பார்க்க அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு வந்து செல்வார்.
நேற்று அதேபோல் குழந்தைகளை பார்க்க வந்த போது செல்வத்திற்கும், யுவராஜிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
நேற்று மாலை இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யுவராஜ் அரிவாளால் செல்வத்தை வெட்டினார். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.
- நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் இன்று ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார்.
- பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு உரிமையியல், குற்றவியல், நிரந்தர மக்கள் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன.
முக்கியமான கொலை உள்ளிட்ட வழக்குகளின் போது இங்கு அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். மற்ற நேரங்களில் குறைந்த அளவு போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள்.
அரிவாளுடன் நுழைந்த நபர்
இந்நிலையில் இன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் அரிவாள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவர் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் எதற்காக நீதிமன்றத்திற்குள் அரிவாள் கொண்டு வந்தார்? ஏதேனும் சதி திட்டத்துடன் கொண்டு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்