என் மலர்
நீங்கள் தேடியது "Silambam"
- மாணவ- மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்தும் 14-வது ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது.
இந்த கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பெண்கள் செயற்களம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமை தாங்கினார்.
தமிழக பெண்கள் செயற்களம் அமைப்பாளர் மங்கைநம்பி மற்றும் குமரவேல் முன்னிலை வகித்தனர்.
தமிழக பெண்கள் செய ற்களம் செயற்குழு உறுப்பினர் சாரதா,
தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகி யுவராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழர் வரலாறு, தொன்மை குறித்த புத்தகத்தில் வினா, விடை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊக்கத் தொகையுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த கண்காட்சியை பார்வையிட வரும் மாணவ, மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நா.மு வேங்கடசாமி நாட்டார் கல்லூரி இயக்குனர் விடுதலை வேந்தன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் துணைப் பொது மேலாளர் ரவிக்குமார், தமிழக பெண்கள் செயற்களம் நிர்வாகிகள் சீர்த்தி,வெண்ணிலா, தாமரை ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர்களின் வரலாறு, தமிழர் மரபு மற்றும் உணவு வகைகள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களுடைய இசைக்கருவிகள், சிலம்பம் உள்ளிட்ட மரபு விளையாட்டுகள், தமிழர்களின் 64 கலைகள், தமிழர்களின் மரபு விழாக்கள், நாட்டுப்புறக்கலைகள், இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள், தமிழர்க ளின் தொன்மையான இசை வாத்தியங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் நடைபெ ற்றது.
இன்று 2-வது நாளாக கண்காட்சி நடைபெற்றது. ஏராளமானோர்பார்வை யிட்டனர். இந்த கண்காட்சி யானது நாளை வரை நடைபெறுகிறது.
- மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாளை வ.உ.சி. மைதான உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
- போட்டியில் சுமார் 400 வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 42-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. போட்டிகளை நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் உலகுராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிலம்பாட்ட கழக செயலாளர் சிலம்பு சுந்தர் முன்னிலை வகித்தார்.
சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர்களுக்கான இந்த போட்டியில் 11 வயது முதல் 17 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 400 வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் இன்று மாலை வழங்கப்படுகிறது.
- மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான சிலம்ப போட்டிகள் தென்காசியில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 9 மாணவ -மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
அதில் முதலிடத்தில் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி, 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர்குமார், 8-ம் வகுப்பு மாணவன் ராகுல் ராகவன், 2-ம் இடத்தில் 6-ம் வகுப்பு மாணவன் சங்கர் சர்மா, 7-ம் வகுப்பு மாணவன் யோகேஷ், மாணவி பிரவீணா, 3-ம் இடத்தில் 9-ம் வகுப்பு மாணவன் நரேஷ் ஆகிய மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றோருக்கு சிலம்பம் கிரான்ட் மாஸ்டர் அருணாசலம் பரிசுகள் வழங்கினார். மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- நெல்லையில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
- போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
களக்காடு:
நெல்லையில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் தலைமை தாங்கினார். ஒய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை, திமுக நகர செயலாளர் மணிசூரியன், வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர். யூசுப் அலி வரவேற்றார்.
இதில் மீரானியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் பீர்முகம்மது, செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி தலைவர் தமிழ்செல்வன், ஏர்வாடி மாடன் ஸ்கூல் தாளாளர் ஹாஜாமுகைதீன், சிங்கம்பத்து இமாம் யூசுப், நகர திமுக துணை செயலாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினர்.
மேலப்பாளையம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜமால் முகம்மது நன்றி கூறினார்.
- 10 மணி நேரம் 10 நிமிடங்கள் 10 வினாடிகள் சிலம்பம் சுற்றுவதற்காக விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன.
- சாதனை இலக்கை எட்டியவர்களின் பெயர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் என்கிற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆறுமுகநேரி:
சிலம்ப கலையில் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி கடந்த மாதம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பங்கேற்க கூடிய இந்த போட்டியில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 125 பேர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தொடர்ந்து 10 மணி நேரம் 10 நிமிடங்கள் 10 வினாடிகள் சிலம்பம் சுற்றுவதற்காக விதிமுறைகள் நிர்ண யிக்கப்பட்டன. இதன்படி சாதனை இலக்கை எட்டியவர்களின் பெயர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் என்கிற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த ஆறுமுகநேரியை சேர்ந்த 2-ம் வகுப்பு பயிலும் மாணவர் நிகித் நாத், மாணவி சிவஹரித்ரா ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கேடயங்களை பரிசாக வழங்கினர்.
ஸ்ரீ ஆரியா மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியின் சிலம்ப பயிற்சியாளர் மாரிமுத்து உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- மதுரையில் சிலம்பம்-வளரி கருத்தரங்கு நடந்தது.
- மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ் இயல் துறை மற்றும் மருது வளரி சங்கம், இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து கேரள மாநிலம், கொழிஞ்சாம் பாறையில் சிலம்பம்- வளரி தொடர்பாக 2 நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது.
இதில் தமிழ் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவ இயக்குனர் சத்தியமூர்த்தி, இண்டர்நேஷனல் மார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ்- மதுரை மருது வளரி சங்க மதுரை மாவட்ட செயலாளர் முத்துமாரி, கொழிஞ்சாம்பாறை பாரதமாதா கல்லூரி முதல்வர் பவுல் தேக்கநாத், பயிற்சியாளர்கள் விஜயன், ரதிஸ், நந்தகுமார், விக்னேஷ்வரன், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கேரள மாநில உணவு வழங்கல் கழக மேலாண்மை இயக்குநர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறார்.
- இதில் 4 மாணவிகள் 5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களை கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் சுப்பிரமணியன் பல்வேறு பள்ளி மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம் வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு, பழகல்லெறிதல், முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கலை சங்கமம் 2022 விழா தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். காளிசரண், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளு க்கு கேடயங்கள்பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலம்பாட்டமாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த 7 மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.4 மாணவிகள் 5 மணிநேரம் 5வகை ஆயுதங்களைக் கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.மணிகண்டன் என்கிற மாணவர் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதம் தொடர்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தார்.பிரவீன் என்ற மாணவர் கற்கால போர்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணிநேரம் தொடர் சாதனை செய்தார்
அதேபோல் ராஜே ஷ்குமார் என்ற மாணவர் 5 கிலோ கரலாக்கட்டை 3565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டார்.உலக சாதனை செய்த மாணவ மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.அக்கழகத்தின் நிறுவனர் ஆசான் டாக்டர் பி சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.
- ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்
- அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாகை அவுரி திடலில் கின்னஸ் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது விறுவிறுப்பான சினிமா பாடல்களுக்கு ஏற்ப உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் சிலம்பு சுற்றியது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் ெமய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சிலம்பம் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
விளையாட்டுத் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் சிலம்பம் பயிற்றுநர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் .சிலம்ப கலையை ஊக்குவிக்கும் 100 ஆசாங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.