search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simranjit Singh Mann"

    • விவசாயிகள் போராட்டம் குறித்து பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்தன.
    • பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை கங்கனா ரனாவத் இன்று சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

    இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.யான கங்கனா ரனாவத் சமீபத்தில் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    அதில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும் என தெரிவித்திருந்தார்.

    விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன்ஜித் சிங் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அவருக்கு கற்பழிப்பு அனுபவம் அதிகம். அதனால் அவர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். கற்பழிப்பு எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் அவரிடம் கேட்கலாம். மக்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது போலவே, அவருக்கு இதேபோன்ற பலாத்கார அனுபவம் உண்டு என காட்டமாக தெரிவித்தார்.

    ×