என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sirumalai"
- திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதிகளில் விவசாயிகள் பலா,எலுமிச்சை,மிளகு, வாழை, அவகோடா, சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
- நீண்ட நாட்களுக்கு பிறகு பலா விற்பனை களை கட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சிறுமலை வனப் பகுதியான பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், தென்மலை, தாழக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பலா,எலுமிச்சை,மிளகு, வாழை, அவகோடா, சவ்சவ் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டது.இதனால் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. விவசாயிகளும் மழை இல்லாமல் மிகவும் நஷ்டத்தை சந்தித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்தது.இதனால் விவசாயிகள் ஆர்வமாக விவசாய பணிகளை தொடங்கினர்.
இப்பகுதியில் முக்கியமாக பலா அதிகமாக விளைவிக்கப்படுகிறது.இங்கிருந்து திண்டுக்கல் நாகல்நகர் பாலம் அடியில் உள்ள சிறுமலை செட்டிற்கு அனுப்பப்படுகிறது.அங்கு வரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பலாப் பழங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
தற்போது பலாப்பழங்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் அமோகமாக உள்ளது.எனவே சிறுமலை செட்டிற்கும் அதிக அளவில் பலாப்பழங்கள் வரத்தொடங்கி உள்ளன.ஒரு பழம் 5 கிலோ முதல் 50 கிலோ வரை உள்ளது.இந்த பழங்கள் ரூ.50-ல் இருந்து தரத்திற்கேற்ப ரூ.700 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து பலாவை விற்பனைக்காக வாங்கிச் செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பலா விற்பனை களைகட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள சிறுமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் மலை கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த சாலையில் தென்மலை, தாழைக்கடை, வேளாண்பண்ணை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்த சாலை 3 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் இருந்ததால் ஒரே மாதத்தில் சாலை பெயர்ந்து கற்கள் தெரிய ஆரம்பித்தன. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது கஜாபுயலின் தாக்கத்தினால் இந்த சாலை மேலும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக உள்ளது.
ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மலைச் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் ராஜேஸ்வரி, வனத்துறை ரேஞ்சர் மனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வி.ஏ.ஓ. பிரதாப், ஊராட்சி செயலர் முத்துக்குமார் உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக மண் சாலை அமைத்து விரைவில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சிறுமலை வனப் பகுதியில் விவசாயிகள் பலா, எலுமிச்சை உள்ளிட்ட வைகளை விளைவித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டது.
இதனால் வன விலங்குகள் தண்ணீர் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. விவசாயிகளும் மழை இல்லாமல் மிகவும் நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வமாக பணிகளை தொடங்கினர்.
இப்பகுதியில் முக்கியமாக பலா விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து திண்டுக்கல் நாகல்நகர் பாலம் அடியில் உள்ள சிறுமலை செட்டிற்கு அனுப்பப்படுகிறது. அங்கு வரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பலாப் பழங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
தற்போது பலாப்பழங்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் அமோகமாக உள்ளது. எனவே சிறுமலை செட்டிற்கும் அதிக அளவில் பலாப்பழங்கள் வரத்தொடங்கி உள்ளன. ஒரு பழம் ரூ.70-ல் இருந்து தரத்திற்கேற்ப ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பலா விற்பனை களைகட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்