என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "siruvani anai"
- வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கோவை
கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை . இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகளுக்கும், நகரை யொட்டிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில், பாதுகாப்பு கருதி கேரள அரசு 45 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கிறது. இதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டாமல் உள்ளது.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட்டு மாதங்கள் வரை தென்மேற்கு பருவ மழை நன்றாகப் பெய்ததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் சென்றது.
அதன் பிறகு, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நீர்மட்ட ம் குறைக்க ப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிறுவாணி நீர்மட் டம் 35 அடி முதல் 40 அடி வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த வாரங்களில் 20 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது, 15.90 அடியாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து எடுக்கப்ப டும் நீரின் அளவு 6.30 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.