search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi fire works"

    சுப்ரீம் கோர்ட் பட்டாசு உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் சிவகாசியில் கடந்த நவம்பர் மாதம் முதல் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டு, பட்டாசு உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக இந்த வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று ஆலைகளை உடனே திறக்க வலியுறுத்தி சிவகாசியில் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்றும் 2-வது நாளாக சிவகாசியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதலே சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். பட்டாசு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 3 மாதமாக வேலையின்றி தவித்து வருகிறோம். பலர் பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர்.

    இதே நிலை நீடித்தால் பட்டாசு தொழில் நலிவடையும். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுத்து பட்டாசு ஆலைகளை திறக்க வேண் டும் என வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது.
    ×