என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » six arrested in rajapalayam
நீங்கள் தேடியது "Six Arrested In Rajapalayam"
தாயை கொன்றதற்கு பழிக்குப்பழியாக கார் டிரைவரை மகன் வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் பொன்னகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம் (வயது34). கடந்த 2015-ம் ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட ரமணி என்ற பெண் கொலை வழக்கில் சங்கர சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளி ஆவார்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக உள்ளார்.
நேற்று மாலை சங்கர சுப்பிரமணியம் தனது தாயார் இந்திராணியுடன் மலையடிப்பட்டி வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்து வழி மறித்தது.
அவர்கள் சங்கரசுப்பிரமணியத்தை ஆட்டோவில் இருந்து இழுத்து போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர சுப்பிரமணியம் தாய் கண் முன்பே பரிதாபமாக இறந் தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் இந்திராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பழிக்குப்பழியாக சங்கரசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரமணியின் மகன் ரெங்கராஜன் (30) அடிக்கடி சங்கரசுப்பிரமணியத்தை சந்தித்து எனது தாயை கொலை செய்த உன்னை பழி தீர்ப்பேன் என மிரட்டி உள்ளார்.
தற்போது அவர்தான் நண்பர்களுடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெங்கராஜன், அவரது நண்பர்கள் காளீஸ்வரன் (22), கிருஷ்ணமூர்த்தி (28), பாண்டியராஜன் (30), விகாஷ்ராஜ் (26), சந்திர பிரகாஷ் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மலையடிப்பட்டியை சேர்ந்த சசிஆனந்த் (29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

×

X