search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skill Develpment Training"

    • பயிற்சியில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் சரவணன், நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி பற்றி எடுத்துக் கூறினார்.
    • இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் இருக்கும் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள அகரம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் முன்னிலையில் அனைத்து துறையின் பங்களிப்புடன் சமூக நிலை மாற்ற மேலாண்மை குழுவிற்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    இந்த பயிற்சியில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன், நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.மேலும் இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். இணை பேராசிரியர் ஆல்வின், தேனீ வளர்ப்பு வழி முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் எளிய முறைகளை எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் சுத்தமல்லியில் அமைந்துள்ள வாழைநார் பொருட்கள் தயாரிப்பாளர் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா மற்றும் சுதா ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் வாழைநாரில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட கைவினைப் பொருட்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி செய்முறை செய்து காட்டினர். நிகழ்ச்சியினை நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக் குமார் ஏற்பாடு செய்தனர்.

    ×