என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sleeping late"
- சீக்கிரம் படுத்து தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை அதிகம் இருக்கும்.
- தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.
தூக்கத்திற்கும், மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமன் இல்லாதவர்களாகவும், சோம்பல் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.
9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன்படி இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் எடை கச்சிதமான அளவில் இருந்ததாம்.
`சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்' என்கிறார், இந்த ஆய்வை நடத்திய கரோல் மகேர்.
மேலும், `தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும். தாமதமாகத் தூங்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி. பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்' என்கிறார் டாக்டர் கரோல். ஆகவே 'முன் தூங்கி முன் எழுவதே உடலுக்கு நல்லது' என்கிறார் கரோல்.
சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும்.