என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slipped"
- ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
தற்போது தனது மகன் ரிஷி கிருஷ்ணனுடன் தென்காசி அருகே உள்ள குடியிருப்பு சர்ச் தெருவில் வசித்து வந்தார். சமீப காலமாக அகரக்கட்டு பகுதியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மறுநாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரமேஷ் கழிவறையில் பிணமாக கிடந்தார்.
அவர் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து இறந்துள்ளார் என்பதை அறிந்த அவரது மகன், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் தேவசேனா (வயது1½). நேற்று தேவசேனா வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் நிரம்பிய பானையில் கைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவரது தாயார் வெளியே சென்றதாக தெரிகிறது.
இந்த நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த தேவசேனா திடீரென்று தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாயார் மகளை மீட்டார். அப்போது தேவசேனா சரியாக மூச்சுவிட முடியாமல் திணறினாள்.
உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி தேவசேனா பரிதாபமாக இறந்தாள்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் டெல்லிகணேஷ் (வயது 11). நீலகண்டன் இறந்து விட்டார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் டெல்லிகணேஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று கோமதி 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து டெல்லிகணேசும், அவரது சித்தப்பா பலராமனின் மகன் உமாபதி (10) என்பவரும் அந்த ஊரில் உள்ள ஏரியில் விளையாடச் சென்றனர். அப்போது திடீரென இருவரும் தண்ணீரில் தவறி விழுந்தனர்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி டெல்லிகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். உமாபதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்தி. இவருடைய மகள் சிவதர்ஷினி (வயது 2½). நேற்று அன்புச்செல்வனின் வீட்டின் முன்பு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி எந்திரம் மூலமாக நடந்தது.
15 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மதியம் 2 மணி அளவில் கிணறு தோண்டிய பணியாளர்கள் சாப்பிட சென்றனர். அப்போது பலகையால் ஆழ்துளை கிணறு மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிவதர்ஷினி, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கதறி அழுதனர். இதுதொடர்பாக உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குழந்தையை காப்பாற்ற முதலில் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட குழாயை வெட்டி எடுத்த தீயணைப்பு படைவீரர்கள், 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து குழந்தை நலம் அடைந்தது.
முன்னதாக மீட்பு பணிகளை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர்.
குழந்தையை மீட்கும் பணி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. மீட்கப்படும் வரை ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையின் நிலை என்ன என்பதை அறிய முடியாமல் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த பதற்றத்துக்கு ஆளானார்கள். மீட்பு பணி நடந்த நேரம் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது. குழந்தையை மீட்ட பின்னரே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகரன் (வயது23). இவர் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது பிளாக்கில் வசித்து வந்தார்.
நேற்று இரவு 7 மணி அளவில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிக் கொண்டே பால்கனி பகுதிக்கு வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தனசேகரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னிவாடி அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). இவர் அம்மாபட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரெட்டியபட்டியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையாவுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
அன்னவாசல் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்தவர் சோலையன். இவரது மகன் பார்த்தசாரதி (வயது27). இவர் மலேசியாவில் இருந்து விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு காலாடிப்பட்டி சத்திரத்திற்கு பார்த்தசாரதி சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே செங்கப்பட்டி பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பார்த்தசாரதி படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்