search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100067"

    திருமங்கலம் நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி காணிக்கை செலுத்தப்படுகிறது.

    இதையொட்டி திண்டுக்கல் பெரியகடை வீதியில் உள்ள நாடார்கள் பேட்டையில் நாளை மதியம் 12 மணிக்கு கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அப்போது மாரியம்மனுக்கு மாவிளக்கு, படையல், நைவேத்தியம், முளைப்பாரி காணிக்கை செலுத்தி பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதையடுத்து மாலை 4 மணி முளைப்பாரி ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாதர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுக்கிறார்கள். இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோட்டை குளத்தை சென்றடைகிறது. பின்னர் அங்கு முளைப்பாரி செலுத்தப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாரியம்மனுக்காக பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த பால்குட ஊர்வலம் பெரியகடை வீதி நாடார் பேட்டையில் உள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுகிறது. இதில் 4 ரதவீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை பால்குட ஊர்வலம் சென்றடைகிறது. அங்கு கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    பின்னர் கோவில் முன் மண்டபத்தில் மாதர் சங்கத்தினரால் பூக்கோலம், மாக்கோலமிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு சுமார் 8½ அடி உயரத்தில் நாமக்கல் நரசிம்மர் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் கோட்டை மாரியம்மனுக்கு சந்தனகாப்பு, நைவேத்தியம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக சுண்டல், புளியோதரை வழங்கப்படுகின்றன.

    இரவு 9 மணிக்கு நண்பர்கள் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணைத்தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்துள்ளனர். 
    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 8-ந் தேதி தொடங்குகிறது.
    குமரி மாவட்டம் சாட்டுபுதூரில் வெள்ளாளர் சமுதாயத்துக்கு சொந்தமான சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    காலை 6 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம், தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகளும், 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 9-ந் தேதி 3-ம் கால யாக சாலை பூஜையும், 10-ந் தேதி காலையில் 4-ம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    11-ந் தேதி காலையில் யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 12 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் டாக்டர் இசக்கியாபிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    திண்டுக்கல் பக்தர்களின் கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. மறுநாள் 1-ந் தேதி பூச்சொரிதல் விழா, 3-ந் தேதி சாட்டுதலும் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துபடி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துபடி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை சாத்துபடி, திருமாங்கல்யம் சாத்துபடி செய்தல் நடந்தது.

    அதேபோல் திண்டுக்கல் டவுண் மார்க்கெட் குமரன் தெரு சாம்பன் குலத்தார் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி வந்து கோவிலை அடைந்தது. அதன்பிறகு பாலக்கொம்பு ஊன்றப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெண்கள் பாலகொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர்.

    கோவிலுக்கு மஞ்சள்நீர் எடுத்து வந்த பெண் பக்தர்கள்.

    அதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் கொடியில் உள்ள அம்மன் படத்துக்கு கண் திறப்பு நடந்தது.

    அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். இதில் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், விஸ்வகர்ம மகாஜன சபா அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, நிர்வாகிகள் முத்து, காளிராஜ் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக் கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. 8 மணியளவில் கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம பொற்பணியாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசைக்கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகவும், சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்த விழா வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.

    இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. இன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. 20-ந் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.

    21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    காலை 6 மணிக்கு வடகாவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, மாரியம்மன் 21-ந் தேதி மாலை 3 மணிக்கு கொள்ளிடம் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், அன்று மாலை 3.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும். மறுநாள் (22-ந் தேதி) காலை 5 மணி வரை நடை திறக்கப்படமாட்டாது. பின்னர் காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார். 
    சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகவும், சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது.

    12-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.

    21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    காலை 6 மணிக்கு வட காவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

    தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை செய்து வருகிறார். 
    தமிழகத்தில் அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சில மாரியம்மன் கோவில்களை அறிந்து கொள்ளலாம்.
    மலேசியா மாரியம்மன்

    மலேசியாவில் சிரம்பான் நகரில் புத்திதிம்போ என்ற இடத்தில் 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்யும் போது, மகா சக்தியாக அருள்காட்சி தரும் மாரியம்மன், மதிய வேளையில் கலைவாணியாகவும், இரவு பூஜையின் போது திருமகள் எனப்படும் லட்சுமி தேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.

    கோட்டை மாரியம்மன்

    திண்டுக்கல்லில் பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள மாரியம்மன், மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக தரிசனம் தருகிறாள். மாரியம்மன் சிலையின் அடிப்பகுதி பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதையுண்டு இருக்கிறது. இங்குள்ள பழமையான கோட்டை, இந்த மாரியம்மனுக்கு வேலியாக அமைந்திருப்பதால், ‘கோட்டை மாரியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ராஜ மாரியம்மன்

    கோயம்புத்தூர் ஒள்ளிப்பாளையம் என்ற பகுதியில் ராஜ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் முகப்பில் தலை வெட்டப்பட்ட விநாயகர் தரிசனம் தருகிறார். முன்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த திருடர்களின் அட்டூழியம் குறித்து தன் தாய் மகாமாரியிடம், விநாயகர் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட திருடர்கள், அவரது தலையை வெட்டி வீழ்த்தினர். விநாயகரின் தலை வெட்டப்பட்டதால் கோபம் கொண்ட மாரியம்மன், திருடர்களை சபித்து கல்லாக மாற்றியதாக ஆலய வரலாறு சொல்கிறது.
    மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.
    மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது. இந்த குளத்தைத் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலைதான், முக்குறுணி விநாயகர் என்ற பெயரில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

    இந்த அம்மன் சிரித்த முகத்துடன், கையில்பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொடங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்திருந்துள்ளாள். தவறு செய்து விட்டு, ‘தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்து விடு’ என்று கேட்டால், இந்த அன்னை மன்னிப்பது இல்லையாம். செய்த தவறுக்கு இந்த அம்மனிடம் கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்கள்.

    இருக்கன்குடி மாரியம்மன் தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இங்குதான் பல சிறப்புகளை கொண்ட இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இத்தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம். கோவிலுக்கு தென்புறம் வைப்பாறும், வடபுறம் அர்ச்சுனன் ஆறும் ஓடுகிறது. இரு ஆறுகளும் கங்கைக்கு ஒப்பானவை என்று சொல்லப்படுகிறது.

    இரு கங்கைகள் இணையும் பகுதியில் அம்மன் குடியிருப்பதால் ‘இருகங்கைக்குடி’ என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம் காலப்போக்கில் மருகி ‘இருக்கன்குடி’ என்றானதாக சொல்லப்படுகிறது. ‘இடுக்கன்’ எனப்படும் துன்பத்தை அகற்றும் அன்னை குடியிருக்கும் இடம் என்பதால் ‘இடுக்கன்குடி’ என்று பெயர்பெற்று, அதுவே ‘இருக்கன்குடி’ என்றானதாகவும் சொல்வார்கள்.

    அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்க்க இயலாது. பவுர்ணமி நாளில் நடைபெறும் அபிஷேகத்தை மட்டும் கண்குளிர கண்டு களிக்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் இன்று நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தை மாதம் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம். தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்ற வகையில் ரெங்கநாதர் சீர் வழங்குவதாக ஐதீகமாகும். சீர் வரிசை பெறுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வருவதும் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் பல ஆண்டுகளுக்கு முன் சீர்வரிசை வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருவானைக்காவல் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இந்த சம்பிரதாய நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இன்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு பட்டாடைகள் உள்ளிட்ட வஸ்திரங்கள், மாலைகள் மற்றும் பச்சரிசி, பாசிப்பயறு உள்ளிட்ட நைவேத்திய பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட இருப்பதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு, மேலத்தெரு மற்றும் ஜெகன் நகரில் அமைந்துள்ள புல்லாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு, மேலத்தெரு மற்றும் ஜெகன் நகரில் அமைந்துள்ள புல்லாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

    கடந்த 13-ந் தேதி விநாய கர் பூஜை, வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், கும்பபூஜை, முதல் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு பிரதிஷ்டை சிலையை எடுத்து வைத்தல் மற்றும் மருந்து சாத்துதல் நடைபெற்றது

    14-ந்தேதி காலை புண்ணியாகவாசனம், கோபூஜை, சூரிய நமஸ்காரம் 2-ம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம் யாத்ரா தானம் நடந்தது. பின்னர் கடம் புறப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை சர்வசாதகம் பாபு சாஸ்திரி குழுவினர் செய்திருந்தனர்.
    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இது வரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வள ரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப் போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.

    மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம் மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார்.
    கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது.

    காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
    பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ர மணியர் சந்நதி.

    நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந் தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில், வெகுவிமரி சையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.
    புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு உகந்த இந்த பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    புன்னை நல்லூர் மாரியம்ம்மா
    புவிதனையே காருமம்மா
    தென்னை மரத் தோப்பிலம்மா
    தேடியவர்க் கருளுமம்மா

    வெள்ளைமனம் கொண்ட அம்மா
    பிள்ளை வரம் தாரும் அம்மா
    கள்ளமில்லாக் காளியம்மா
    உள்ளமெல்லாம் நீயே அம்மா

    கண்கண்ட தெய்வம் அம்மா
    கண்நோயைத் தீர்த்திடம்மா
    பெண் தெய்வம் நீயே அம்மா
    பேரின்பம் அளித்திடம்மா

    வேப்பிலையை அணிந்த அம்மா
    வெப்பு நோயை நீக்கிடம்மா
    காப்புதனை அணிந்த அம்மா
    கொப்புளங்கள் ஆற்றிடம்மா

    பாலாபிஷேகம் அம்மா
    பாசத்தினைக் கொடுத்திடம்மா
    காலார நடக்க வைத்தே
    காலனையே விரட்டிடம்மா

    ஆயிரம் பேர் கொண்ட அம்மா
    நோயினின்று காத்திடம்மா
    தாயினது பாசந்தன்னை
    சேய் எனக்கு அருளிடம்மா

    வேனில்கால வேளையம்மா (உந்தன்)
    மேனிதன்னில் வேர்க்குதம்மா
    இளநீரில் குளித்திடம்மா
    இன்னருளை ஈந்திடம்ம்மா

    தேனில் நன்கு குளித்திடம்மா
    வானின் மீது உலவிடம்மா
    வளமார வாழ்ந்திடம்மா
    வாயார வாழ்த்திடம்மா 
    ×