என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 100477
நீங்கள் தேடியது "slug 100477"
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசனும், வில்லனாக சோனு சூட்டும் ஒப்பந்தமாகி உள்ளனர். #Thamizharasan #VijayAntony
கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் மற்றும் விஜய் ஆண்டனி, சோனு சூட் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
முதல்முறையாக விஜய் ஆண்டனி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுவில் இளைராஜா நிகழ்ச்சிகான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் நாளை மறுநாள் இளைராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் இளைராஜா 75 இசை நிகழ்ச்சியை ஏன் ஒத்திவைக்கக் கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #Ilayaraja75 #Vishal
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் இருவரும் விஷால் மீது இன்று மதியம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி கே.ராஜனிடம் கேட்டபோது ‘தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்திய விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளையராஜா இசை நிகழ்ச்சியை அவர் நடத்தக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம். இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. அரசு தரப்பில் இருந்து ஒருவரை நியமித்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் அதில் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு பழைய கணக்கை காட்டக்கூடாது’ என்று கூறினார். #Ilayaraja75 #Vishal
‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஒரு தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Ilayaraja75 #ProducersCouncil
சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கம், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை வருகிற பிப்ரவரி 2-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு பணிகளுக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளனர். இந்த நிதி எவ்வாறு திரட்டப்பட்டது? என்பது தெரியவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் ரூ.7 கோடி நிதி திரட்டப்படும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கூறினாலும், அதற்கு உறுதியான திட்டம் அவர்களிடம் இல்லை.
தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த பணத்தை டெபாசிட் செய்யாமல், இந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். #Ilayaraja75 #ProducersCouncil
விஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் நிலையில், விஜய் ஆண்டனியின் நீண்டகால ஆசையை இந்த படத்தின் மூலம் இளையராஜா நிறைவேற்றி வைக்கிறாராம். #Thamizharasan #VijayAntony
`கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தில் விஜய் ஆண்டனி, சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போது நிறைவேறி இருக்கிறது” என்றார். ஏற்கனவே பல படங்களில் பாடியிருக்கும் ரம்யா நம்பீசனும் சொந்த குரலில், ஒரு பாடலை பாடுகிறார்.
படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, நடைபெற்று வருகிறது. அசாம், கொல்கத்தா ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #Ilayaraja
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா, அந்த படத்தின் மூலம் கல்லூரி மாணவிகள் 9 பேரின் ஆசையை நிறைவேற்றி வைத்தார். #Thamizharasan #VijayAntony #Ilayaraja
இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் பல கல்லூரிகளில் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அந்த இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.
அதன்படி, எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் `தமிழரசன்' படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார். #Thamizharasan #VijayAntony #Ilayaraja
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Thamizharasan #VijayAntony
கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி அடுத்ததாக தமிழரசன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. முதல்முறையாக விஜய் ஆண்டனி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
#VijayAntony's Next Film Titled As #Tamilarasan !
— Vanquish Media (@VanquishMedia__) January 17, 2019
Here's The First Look Poster ! #IlayarajaMusical ! @vijayantony ! @rdrajasekar ! @ActionAnlarasu ! @mrsvijayantony ! @VanquishMedia__ ! pic.twitter.com/4Vvqd3Xdi7
எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாவதாக மோகன் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். #Thamizharasan #VijayAntony
பிப்ரவரி மாதம் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, நடிகர் ரஜினிக்கு விஷால் நேரில் சென்று அழைப்பு வைத்திருக்கிறார். #Ilayaraja75 #Rajini
இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது இசை சாதனையை பாராட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 2, 3-ந்தேதிகளில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
இது தொடர்பாக விஷால் கூறுகையில், “பிப்ரவரி 2-ந்தேதி அனைத்து மொழி கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழாவாக நடத்தப்படுகிறது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுசீலா, ஜானகி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுப்போம்” என்றார்.
இதையடுத்து விஷால் இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ‘இளையராஜா-75’ இசை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். இதே போல் மற்ற பிரபலங்களையும் விஷால் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்காக 10 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள். #Ilayaraja
2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா 75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 2, 3 தேதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என நடக்க இருக்கிறது. 'இளையராஜா 75' டீசர் பல உருவாக்கப்பட்டது. அதை, ஒரே நேரத்தில் விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்கள்.
பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். இதை அவர் விழா காண வந்துள்ள ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்க இருக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் இசைஞானி இளையராஜா பாடகியாக அறிமுகம் செய்துவைக்கிறார். #Ilayaraja
இசைஞானி இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின்கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அந்த இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்து இருக்கிறார்.
இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர். #Ilayaraja
இசையமைப்பாளர் இளையராஜா தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை கிண்டல் அடித்து கங்கை அமரன் பதிவு செய்துள்ளார். #Ilayaraja
இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அவரும் விழாக்களில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியும், பாடி, இசையமைத்தும், தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்த இளையராஜா, இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று தெரிவித்ததாக செய்தி பரவியது. இது சர்ச்சையானது.
இதற்கு இயக்குனரும் இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கைஅமரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலை பதிவிட்டார்.
இளையராஜா தெரிவித்ததை அப்படியே பதிவிட்டுள்ள அவர் தன்னுடைய பதிவாக, ’மன்னிக்கவும், நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இளையராஜா பேசியதன் முழு வீடியோ வெளியாகி அவர் அந்த பொருளில் சொல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் கங்கை அமரனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் விமர்சனங்களை பதிவிட தொடங்கினார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘நானாவது அண்ணனை மிஞ்சுவதாவது. நானும் அண்ணனும் இப்படி அடிக்கடி கிண்டல் செய்து பேசிக்கொள்வோம். அவர் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை. அம்மா’ என்று கூறி இருக்கிறார். #Ilayaraja
பொறியியல் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா, புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இளையராஜாவுக்கு இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆண்டிப்பட்டி பொறியியல் கல்லூரிக்கு இளையராஜா வந்தார்.
கல்லூரி மாணவ-மாணவிகளுடன் இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இசையின் மேன்மை பற்றியும், இசைத்துறையில் தன்னுடைய அனுபவத்தை பற்றியும் மாணவ-மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்த சில பாடல்களை மாணவ-மாணவிகள் முன்பாக பாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
‘‘அறிவார்ந்த சிந்தனைகளால் மனிதர்களிடத்தில் வேற்றுமை இல்லை. மனிதனுடைய அனைத்து செயல்களும் இறைவன் அருளாசியுடன்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் ஆசியுடன்தான் நான் இந்த அளவுக்கு இசையமைக்கிறேன். என் புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை.
மாணவ-மாணவிகள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி, திடமான நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’
இவ்வாறு இளையராஜா பேசினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X