என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாத்தூர்"
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னக்காமன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது27), டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார்.
சென்னையில் வேலை பார்த்த இவர், கடந்த ஆண்டு ஊர் திரும்பினார். அதன் பிறகு எட்டூர்வட்டம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை கார்த்திகேயன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கார்த்திகேயன் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காட்டுப் பகுதியில் அவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.
சம்பவ இடத்திற்கு சாத்தூர் போலீசாரும், உறவினர்களும் சென்று பார்த்தனர். அங்கு தலை நசுங்கிய நிலையில் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது தலையில் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி பஞ்சாயத்து. இங்குள்ள ஆலம்பட்டி விலக்கு அருகே அணைக்கரை பட்டியை சேர்ந்த அழகர் என்பவருக்கு தோட்டமும், பம்புசெட்டும் உள்ளது.
இன்று காலை அங்கு சென்றவர்கள் மோட்டார் அறையில் கருகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அம்மாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
எரிந்த நிலையில் கிடந்த வருக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாக இருக்கும் என தெரிகிறது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவரை யாராவது கடத்தி வந்து எரித்துக்கொலை செய்தார்களா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என தெரிய வில்லை. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சி கூட்டரங்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 30 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமாக மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளில் ரூ.404 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து பணிகள் தொடங்க அறிவிக்கப்பட உள்ளது.
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தில் மாவட்டத்தில் 4,210 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.126 கோடியே 30 லட்சம் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 பேருக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பாராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்