search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கெட்"

    விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் ரஷ்யாவின் ராக்கெட்டை மின்னல் தாக்கியது.

    ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி  என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி தள்ளிவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது.

    இதை உறுதிசெய்த அதிகாரிகள், ``ராக்கெட்டுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, திட்டம் வெற்றிதான்" என்று தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கிய  வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இதுபோல் 1969-ல் நாசாவின் அப்பல்லோ 12 மிஷனில் பயன்படுத்தப்பட்ட சனி- 5 ராக்கெட் ஒன்றை இருமுறை மின்னல் தாக்கியது. இது மனிதர்களைக் கொண்டு சென்ற ராக்கெட். இது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அப்போதும் பெரிய பாதிப்புகள் இல்லை.

    ராக்கெட்களை கட்டமைக்கும் விஞ்ஞானிகள் அதில் இருக்கும் உலோகங்கள் மின்னல்களை ஈர்க்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடியே அவற்றை வடிவமைக்கின்றனர். இதனால் மின்னல்கள் ராக்கெட்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது கிடையாது. 
    ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. #ISRO #PSLVC45
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோவின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கலாம்.

    வருகிற 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதை பொதுமக்கள் தனி அரங்கில் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசிக்கலாம்.

    இதுகுறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் விவேக் சிங் கூறியதாவது:-



    ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் தனி அரங்கு பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கேமரா, போன்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். புகைப்படத்துடன் கூடிய அரசின் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

    இதில் இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வரும் காலத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அரங்கு விரிவுப்படுத்தப்படும். மேலும் அங்கு விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இனி ‘விண்வெளி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியரை சென்றடைய வேண்டும் என்ற இஸ்ரோ தலைவர் சிவனின் எண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராக்கெட் ஏவுகணை பொதுமக்கள் நேரில் பார்ப்பதால் குறைந்தபட்சம் சிலர் இந்திய விண்வெளி திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #PSLVC45
    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் நாளை மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. #GSLVF11 #GSAT7A #ISRO
    சென்னை:

    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ இன்று தொடங்குகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது.

    3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

    ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று(செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணி அளவில் தொடங்குகிறது.

    49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

    மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.  #GSLVF11 #GSAT7A #ISRO
    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. #ISRO #PSLVC43
    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

    அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.



    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

    இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை 5.57 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO #PSLVC43
    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. #PSLVC43 #Rocket
    சென்னை:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.

    இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (புதன்கிழமை) காலை 5.57 மணிக்கு தொடங்குகிறது.

    மேற்கண்ட தகவலை விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    இஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் 26 மணிநேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக்கொண்டு இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. #GSLVMark3D2 #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.



    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.

    ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி, 8 நிமிட நேர ‘கவுண்ட் டவுன்’ நேற்று பகல் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதன் மூலம் ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கி செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைகோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது.

    இந்த செயற்கைகோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்காக பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது’.

    வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், ‘கஜா’ புயல் தமிழகத்தில் உள்ள கடலூருக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்து இருந்தனர். பின்னர் புயல் திசை மாறியதால் ராமேசுவரம் அருகில் உள்ள பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்து உள்ளனர். ராக்கெட்டும், ஏவுதளமும் அனைத்துவிதமான காலநிலையை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டதால் புயல் பற்றி கவலைப்படவில்லை.

    வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், ராக்கெட் விண்ணில் செல்வதை சென்னையில் கண்டு களிக்க முடியும்.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #GSLVMark3D2 #ISRO 
    ‘ஜிசாட்-29’ தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. #GSLVMark3D2 #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

    இந்தநிலையில் இஸ்ரோ, உயர்நுணுக்கமான தகவல்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.



    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட்டாகும். இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.

    தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது. இதில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன சக்தி கொண்ட ‘கா.கு.பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

    தொலைத்தூரத்தில் உள்ள தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு க்யூ, வி என்ற நவீனதொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகள், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு இதமான காலநிலை நிலவும் பட்சத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். இந்த செயற்கைகோள் மூலம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் விரைவாக இணையதள சேவையை பயன்படுத்த உதவும்.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டுக்கான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு அது விண்ணில் ஏவப்படுகிறது. #ISRO #PSLVC42
    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

    இதற்காக 3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது.

    இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (சனிக்கிழமை) பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி 7 நிமிடங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், சென்னைவாசிகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்வதை காணலாம்.

    வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும்.

    மேற்கண்ட தகவலை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  #ISRO #PSLVC42
    பூமி கண்காணிப்பு செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்துவதற்காக 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

    மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட 20 முதல் 30 செயற்கைகோள்களையும் இணைத்து வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவிடம் அளித்து உள்ளனர். இவற்றை செலுத்துவதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு ஏவப்படும் 4-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-42 ஆகும். அதில் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 3-வதாக உள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து வரும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவுவதற்காக 20 முதல் 30 செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து உள்ளது.

    தகவல் தொடர்புக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘ஜி.சாட்- 11’ செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து ஐரோப்பிய நாட்டு ராக்கெட்டில் விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட சோதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. விரைவில் இதை விண்ணில் செலுத்தும் தேதி அறிவிக்கப்படும்.

    இஸ்ரோ இதுவரை 237 வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

    அதேபோன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட்டுகள் ஆய்வு செய்யும் ஆய்வகம் ரூ.630 கோடியிலும், ராக்கெட் ஒருங்கிணைப்பு வசதி கொண்ட மையம் ரூ.475 கோடி மதிப்பிலும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் நடப்பாண்டு இறுதியில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அதற்கு பிறகு முதல் ஏவுதளத்தில் இருந்து 15 ராக்கெட்டுகளையும், 2-வது ஏவுதளத்தில் இருந்து 11 ராக்கெட்டுகளையும் ஏவும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெறும்.

    இந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். 
    ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.#Chinese #OneSpace #rocket
    பெய்ஜிங்:

    சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் கொண்டது. இது மணிக்கு 38, 742 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது. அதாவது ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்தது.

    5 நிமிடத்தில் 273 கி.மீட்டர் தூரம் பறந்து செல்லும். அந்த அளவு அதிகதிறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் வயர்லஸ் தகவல் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை ‘ஒன் ஸ்பேஷ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஷு சாங் தெரிவித்தார்.



    மேலும் அவர் கூறும் போது, ‘‘எங்கள் நிறுவனம் முதன் முறையாக வணிக ரீதியிலான ராக்கெட் தயாரித்துள்ளது. இதன்மூலம் செயற்கைகோள்களை அனுப்ப பல நாடுகள் எங்களை தொடர்பு கொண்டுள்ளன’’ என்றார்.#Chinese #OneSpace #rocket
    ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில் சமூக அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் முன்னிலை வகித்தார்.

    இன்னர்வீல் சங்கத் தலைவி நர்மதா ரஞ்சன் குத்துவிளக்கு ஏற்றினார். மாணவர் அறிவியல் பேரவை நிறுவனர் வாசன் வரவேற்றார். பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: -

    விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆக்கப்பூர்வ செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் மாணவர் அறிவியல் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. உண்மையை தேடும் முயற்சியே விஞ்ஞானம். விஞ்ஞான தொழில்நுட்பத்தை தனக்கு மட்டும் என்றோ, குறிப்பிட்ட துறைக்கு என்றோ உரிமை கொண்டாட முடியாது.

    சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும்போது விஞ்ஞானம் உயிர் பெறுகிறது. இயற்கை வளம் சுரண்டல், தனி நபர் ஏகபோகமாக அனுபவிக்க விஞ்ஞானம் பயன்படுவதை அனுமதிக்கக் கூடாது. ஆக்க பூர்வ செயல்களுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்த மாணவர்கள் மூலம் சமூக மாற்றம் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாணவர் அறிவியல் பேரவையின் நோக்கமாகும்.

    விண்வெளியில் செயற்கை கோள் ஏவும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிற நாடுகளின் துணையின்றி ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது.

    செவ்வாய் கிரகம் மட்டுமின்றி அண்டைய கோள்களை காணும் தொலைநோக்கு பார்வை என இந்தியா விண்வெளி சாதனையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

    இயற்கை வளம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற வருத்தம் உள்ளது.

    விஞ்ஞானிகள் இதை இன்றைய தலைமுறையினரிடம் சொல்லமால் சென்றுவிட்டால் எதிர்கால சந்ததிகள் நிலை குறித்து கவலையும் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளம் விஞ்ஞானி சிவகாசி மாணவர் ஜெயக்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) சிவசுப்ரமணியன், பிரண்ட்ஸ் சப்போர்ட் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், டாக்டர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர் அறிவியல் பேரவை செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.
    ×