search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100878"

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார். #sharadpawar #congress
    மும்பை :

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பேசுகையில், “நாட்டின் பிரதமர் போட்டியில் தான் இல்லை என்றும், நாட்டின் பிரதமர் ஆகும் கனவு தனக்கு இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ராகுல் சாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி பேசியதாவது:-

    பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ராகுல்காந்தி அறிவித்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் இவர்களை(பா.ஜனதா) அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவேண்டும். நாம் ஒன்றாக அரியணையில் அமரவேண்டும்.

    அப்போது எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அவர்கள் பிரதமர் பதவியை கோரலாம்.

    அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத பிராந்திய கட்சிகளுடன் இணைத்து தேர்தலை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

    காங்கிரஸ் கட்சி குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பலமாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் உள்ளனர்.

    அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுபட்டு காணப்படுகிறது. எனவே பிராந்திய கட்சிகளுடன் இணைந்து அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #sharadpawar #congress
    1977-ல் இந்திராகாந்திக்கு எதிராக திரண்டது போல் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவோம் என்று சரத்பவார் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PMModi #SharadPawar #BJP

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் இந்திராகாந்தி அவசர நிலை கொண்டு வந்த போது என்ன நிலை நிலவியதோ அதே நிலை இப்போது நிலவுகிறது.

    அன்று இந்திராகாந்தி செய்தது போலவே பிரதமர் மோடி ஊடகங்களையும், அரசு மற்றும் அரசு ஏஜென்சிகளையும் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

    அன்று இந்திராகாந்திக்கு என்ன எதிர்ப்பு இருந்ததோ அதே போன்ற எதிர்ப்பு இப்போது மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால் மக்கள் அவருக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறார்கள்.

    1977-ல் இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்து வலுவான ஒரு அமைப்பை உருவாக்க முடியுமா? என்ற நிலை இருந்தது. மக்களும் சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

    ஆனால், கட்சிகளும், தலைவர்களும் இதை சவாலாக ஏற்று ஒரு வலுவான அமைப்பை அன்று உருவாக்கினார்கள்.


    அப்போது தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதை மற்ற கட்சி தலைவர்கள் கேட்டார்கள். பல தலைவர்களும் தங்கள் கட்சியை மறந்து விட்டு ஒரே கட்சிக்கு வந்தனர்.

    ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதேபோல் மோடிக்கு எதிராக சோனியா காந்தி, தேவேகவுடா மற்றும் நானும் சேர்ந்து ஒரு வலுவான அணியை உருவாக்குவோம். எங்கள் 3 பேருக்குமே பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை.

    எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக நிற்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே திட்டம்.

    அதே நேரத்தில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவது என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் மேற்கு வங்காளம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.

    எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியில் கொண்டு வரப்படும்.

    நானும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைவர்களிடமும் இது சம்பந்தமாக பேசி கொண்டு இருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பல வகைகளில் முன்னேற்றம் தெரிகிறது. அவரும் என்னுடைய கருத்துக்களுக்கு ஒத்து போகிறார்.

    தேர்தலுக்கு முன்பு யாரையும் தலைவராக முன்னிறுத்த கூடாது என்பதிலும் ராகுல்காந்தி தெளிவான திட்டத்தில் இருக்கிறார். அது சரியான நடவடிக்கை.

    சோனியா காந்தி எப்போதுமே கூட்டணி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பார். அதேபோல் ராகுல்காந்தியும் தாயாரை போல் நடந்து கொள்கிறார்.

    நான் சமீபத்தில் மாயாவதியை சந்தித்தேன். அவர் உத்தரபிரதேசத்தை பொறுத்த வரை சமாஜ்சாடி மற்றும் சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார்.

    அதேபோல் மற்ற மாநிலங்களிலும் தனது கட்சிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறார்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #PMModi #SharadPawar #BJP

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhisharadpawar
    சென்னை:

    உடல்நலக் குறைவால் சென்ன ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிக்க கடந்த 5 நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை பிரபல ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சரத்குமார் ஆகியோர் இன்று காலை வந்து நலம் விசாரித்து சென்றனர்.

    மாலை 5 மணியளவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம்  நலம் விசாரித்தார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் கேட்டறிந்தார். #Karunanidhi #Karunanidhisharadpawar
    ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார்
    சென்னை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாரை நேற்று காலை அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சரத்பவார் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்தார்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், வெளியுறவுத் துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் வருவதாக ஒப்புதல் தந்தார்.

    மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    பாராளுமன்ற- சட்டமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து போட்டியிட போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். #NCP #SharadPawar
    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2004-ல் இருந்து 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் மராட்டியத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இனிவரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்.

    இது சம்பந்தமாக ராகுல்காந்தியும், நானும் 3 தடவை சந்தித்து பேசி இருக்கிறோம். கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாநில தலைவர்களுக்கு நாங்கள் தகவல் சொல்லிவிட்டோம். தொகுதி பங்கீடு குறித்து மாநில தலைவர்கள் பேசுவார்கள்.

    தொகுதி பங்கீட்டை ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடியும். அதில், ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் நாங்கள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வருவோம்.

    பாரதிய ஜனதாவையும், சிவசேனாவையும் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கம். பாரதிய ஜனதாவையும், சிவசேனாவும் ஒரே அணியில் நின்று தேர்தலில் போட்டியிடுமா? அல்லது தனித்து நிற்குமா? என்று தெரியாது.

    ஆனாலும், இப்போதும் சிவசேனா ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் நாங்கள் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு சரத்பவார் கூறினார். #ParliamentElection #NCP #SharadPawar #NationalistCongressParty
    ×