search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    கோவை, திருப்பூர், நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation
    கோவை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் வேலை நிறுத்த போராட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய மருத்துவமனைகள் பங்கேற்றுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து இந்திய மருத்து கவுன்சில் உறுப்பினர் டாக்டர் தங்கவேலு கூறியதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 450-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 3500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டுப்பாளையத்தில் 10 தனியார் மருத்துவமனைகளும் 20 கிளீனிக்குகளும். சிறுமுகையில் 5 மருத்துவமனைகளும் 10 கிளீனிக்குகளும். காரமடையில் 4 மருத்துவமனைகளும் 5 கிளீனிக்குகளும் உள்ளன.

    இங்கு பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனால் போராட்டத்தில் பிரசவம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டது.

    புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை என்று சங்கதலைவர் திப்பையன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதேபோன்று திருப்பூர், அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 450 தனியார் டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் பாரதி, செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கூறும்போது, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றகோரி இதற்கு முன்பு ஒருநாள் போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் இன்னும் கோரிக்கைகளின் மீது எந்த நடவக்கை எடுக்கவில்லை. அதனை கண்டிக்கும் வகையில் இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கமாட்டார்கள். அதே சமயம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்படும். ஆனால் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி, கிளீனிக்குகளில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டது.  #IndianMedicalAssociation

    திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.

    கண்காட்சியை மேகாலயா மாநில அம்பத்தி மாவட்ட கலெக்டர் ராம்குமார் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விழா மலரை சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.

    அதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் மாநில தலைவர் தில்லை ராஜன், மாநில துணைத்தலைவர் ராகவன், மண்டல தலைவர் சாமிநாதன், தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் சங்க தலைவர் சிவன் பாலசுப்ரமணியம், கண்காட்சி தலைவர் தணிகைவேல், கண்காட்சி செயலாளர் ராஜமாணிக்கம், கண்காட்சி பொருளாளர் மோகன்ராஜ், பொறியாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் பாரதி, பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந் ஆகியோர் செய்து செய்தனர்.

    இந்த கண்காட்சியில் நவீன கிச்சன், புதிய கண்டுபிடிப்பு அலங்கார வளைவு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட 136 அரங்குகள் உள்ளன. 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தினமும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இன்று மாலை சிலம்பாட்டம், பரத நாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
    திருப்பூரில் 2 கடைகளில் இருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் நேற்று காலை உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

    இதேபோல் மற்றொரு கடையிலும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறினார்கள். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    கோவை:

    கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது.

    கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை வழங்கினார். அவரது நம்பிக்கைக்குரிய மாவட்டமாக திகழ்ந்ததால் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதில் அனைத்து கட்சியினரும் குறியாக உள்ளனர். குறிப்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன் இந்த மாதத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மேலும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தார்.

    கொங்கு மண்டலத்தில் கால் பதிப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனையில் அவர் இருப்பதால் கோவை சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்.


    இதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் ஏற்பாடாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் தாங்கள் முத்திரை பதிக்க ரஜினி, கமல்ஹாசன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வும் தற்போது களத்தில் குதித்துள்ளது.

    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்ட விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மாநாட்டை அறிவித்திருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமலை தொடர்ந்து விஜயகாந்தும் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குமா? அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வரும் மழை காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரியில் அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதனால் பவானி, நொய்யல், சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன.

    தொடர்மழை காரணமாக கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 15 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 24 அடியாக உயர்ந்துள்ளது.

    2 நாட்களில் மட்டும் 9 அடி அதிகரித்துள்ள நிலையில் இன்றும் சிறுவாணி அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 100 அடி கொண்ட அணையின் நீர் மட்டம் நேற்று 97.25 அடியை எட்டியது. இரவில் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

    160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6273.50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையோர பகுதியில் 115 மில்லி மீட்டர் மழை பதிவாக உள்ளது.

    120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 58.40 அடியாக இருந்தது. வினாடிக்கு 240 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 34 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.90 ஆக உள்ளது. வினாடிக்கு 1988 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 7 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடி ஆகும். இன்று காலை அணை நீர்மட்டம் 12.74 அடியாக இருந்தது. வினாடிக்கு 15 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2482 அடி கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 14 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கெத்தை அணை முழு கொள்ளளவான 89 அடி உயரத்தை எட்டியது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பரளி மின் வாரியத்தை அடைகிறது.

    தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டியில் பாறை குழி அடையாளம் தெரியாத வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டியில் பாறை குழி உள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பாறை குழிக்குள் இறங்கி வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    வாலிபர் உடலை போலீசார் சோதனை செய்த போது அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து பிணத்தை பாறை குழியில் வீசி சென்றது தெரிய வந்தது.

    பாறை குழி பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது அங்கு ரத்த கறை படிந்து இருந்தது. மேலும் அருகில் இரும்பு சங்கிலியும் கிடந்தது.எனவே இரும்பு சங்கிலியால் கழுத்தை நெரித்து பின்னர் அறுத்து கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கொலை நடந்த இடத்தை துணை போலீஸ் கமி‌ஷனர் உமா பார்வையிட்டார். மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடைபெற்ற இடத்தில் மோப்பம் பிடித்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நின்றது. கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவரை வெளி இடங்களில் இருந்து யாராவது இங்கு கடத்தி கொண்டு வந்து கொலை செய்து பாறை குழியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலை செய்யப்பட்டவர் யார்? என்பதை கண்டு பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் யாராவது மாயமாகி உள்ளதாக புகார் வந்துள்ளதா? என தகவல்களை சேகரித்து வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூரில் பள்ளி சென்று திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் கோவில்வழியை சேர்ந்தவர் சிவகுமார். ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. பனியன் தொழிலாளி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சுபத்ராவும் பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு சென்ற சுபத்ரா மாலையில் வீடு திரும்பினார். அவரை தொடர்ந்து அவரது பெற்றோரும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்து பார்த்த போது மகள் சுபத்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பின்னர் இது குறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

    கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.

    அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.

    ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது வேன் மோதிய விபத்தில் 8-ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர் பாளையம் குமரன்நகர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவர் முரளிகிருஷ்ணனை அவரது அண்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது வரும் வழியில் அம்மம்பாளையம் என்ற பகுதியில் எதிரே வந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாணவர் முரளிகிருஷ்ணன், அவரது அண்ணன் ஆகியோர் தவறி ரோட்டில் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் மாணவர் முரளிகிருஷ்ணன் மீது மோதியது.

    இதில் பலத்த படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் முரளிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூர் அருகே 6-ம் வகுப்பு மாணவன் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள அங்கேரிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. பனியன் தொழிலாளி. இவரது மகன் அசோக் (11). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் அசோக் தனது நண்பர்களுடன் செட்டிப் பாளையம் வெங்கமேடு பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றான்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். அவன் தண்ணீரில் தத்தளித்தான். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங் கள் என சத்தம் போட்டான். அவனது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    குட்டையில் மூழ்கி அசோக் இறந்தான். இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அசோக் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் நேற்று இரவு வரை தேடியும் உடலை மீட்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது அசோக் உடல் சிக்கியது. அதனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்மார்ட் செல்போன் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை பால குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் திருப்பூர் அருகே மங்கலம் வேட்டுவபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகள் அகிலா (22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலா தனது தந்தையிடம் கல்லூரி மாணவிகள் அதிகம் பேர் ஸ்மார்ட்செல்போன் வைத்துள்ளனர்.

    தனக்கும் ஸ்மார்ட் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை அய்யாதுரை தற்போது பண கஷ்டத்தில் இருக்கிறேன். பின்னர் வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார்.

    அகிலா கண்டிப்பாக ஸ்மார்ட் செல்போன் வாங்கி தரும்படி அடம் பிடித்துள்ளார். இதனால் அவரை கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

    இதில் மனம் உடைந்த அகிலா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அகிலா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    கடன் தொல்லையால் ஆயுதப்படை போலீஸ்காரர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 29). திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காராக வேலைபார்த்து வந்தார்.

    இவரது மனைவி ரமா (25). இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி மோகன் பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே வந்த ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திபோது, கடன் தொல்லையால் போலீஸ்காரர் மோகன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×