search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    திருப்பூரில் திருமண மண்டபத்தில் இருந்து தப்பிய புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராயபுரம், சூசையாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). பனியன் கம்பெனி ஊழியர். இவருக்கும் பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 27-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி இரவு பழனியில் உள்ள திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணும், மணமகனும் வந்தனர். உறவினர்கள் தங்கள் குடும்பத்துடன் இரவில் தங்கினர். காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென புதுமாப்பிள்ளை சந்தோஷ் நள்ளிரவில் மாயமாகி விட்டார்.

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியபோது அவர் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருமண மண்டபம் களை இழந்தது. விசாரணையில் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும் இது மணமகனுக்கு தெரியவந்ததும் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரியவந்தது.

    இதனிடையே இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெரியோர் தலையிட்டு இதுவரை நடந்த செலவை பாதி பாதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதின்பேரில் இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் மணக்கோலத்திலேயே பெண் வீட்டுக்கு சென்றார்.

    சந்தோசின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் திருப்பூர் வந்தனர். இங்கு வந்து பார்த்தபோது இங்கும் சந்தோஷை காணவில்லை.

    இந்நிலையில் கடந்த 31-ந்தேதி இரவு சந்தோஷ் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டியதாக தெரிகிறது. எதுவும் பேசாமல் தனது அறைக்கு சந்தோஷ் தூங்க சென்றார்.

    காலை கதவை திறந்து பார்த்தபோது சந்தோஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலையரசி மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மாணவி திருச்சி மாவட்டம் துறையூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூர் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    திருப்பூர் ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(22) என்ற பனியன் தொழிலாளி மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதையடுத்து மாணவியை அடையும் நோக்கத்தில் அவரை கடத்த திட்டமிட்டார். அதன்படி கடந்த 29-ந்தேதி மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட நாகராஜ் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ஜீவா(20), மணிகண்டன்(20) மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

    காங்கயம் வரை ஆட்டோவில் சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாணவியை கடத்தி சென்றனர். அப்போது வாலிபர் நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜ் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜீவா, மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். நாகராஜ் உள்பட 3 பேர் கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மாணவியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tamilnews
    திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் மேரி (வயது 25). இவர் திருப்பூர் ஸ்ரீநகரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து டோரிஸ் மேரியும், மணிகண்டனும் திருமணம் செய்து கொண்டனர்.

    புதுமணத்தம்பதி அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் சிவகுமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினர். காதல் கைகூடிய மகிழ்ச்சியில் புதுமணதம்பதி சந்தோ‌ஷமாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமை மணிகண்டன் சென்னை செல்வதாக கூறிவிட்டு சென்றார். சென்னையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு மணிகண்டன் திருப்பூர் திரும்பினார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்போடப்பட்டிருந்தது. மணிகண்டன் கதவை தட்டிப்பார்த்தார்.

    வெகுநேரமாகியும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது டோரிஸ் மேரி தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி பிணமாக தொங்குவதை பார்த்த மணிகண்டன் கதறி அழுதார்.

    மணிகண்டனின் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டோரிஸ் மேரியின் உடல் அழுகிய நிலையில் தொங்கியது.

    இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக டோரிஸ் மேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் திருமணம் செய்த கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல சென்னை சென்று விட்டார் என்ற அச்சத்தில் இறந்தாரா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் பல்வேறுகோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தவிர திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews
    தாராபுரம் அருகே சினிமா படபாணியில் குளத்தை காணவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் தாளக்கரை செல்லும் ரோட்டில் செட்டிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை வெட்டி தூர்வாரி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் குளம் வெட்டப்படவில்லை.

    கடந்த 18-ந் தேதி தெக்கலூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செட்டிகுளத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் செலவில் குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர். வெட்டாத குளத்துக்கு அதிகாரிகள் அறிக்கை வாசித்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நஞ்சியம்பாளையம் ஊராட்சி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது குளம் வெட்டியதாக அரசு பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று கிராம மக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் கிராமத்தில் இருந்த குளத்தை காணவில்லை. எனவே அதனை கண்டுபிடித்து தரும்படி புகார் மனு அளித்தனர்.

    வடிவேலு பட பாணியில் கிராமக்கள் குளத்தை காணவில்லை என புகார் மனு அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி பொது மக்களுக்கு பதில் அளிப்பதற்காக தாராபுரம் ஊராட்சி ஒன்றிய மதிப்பீட்டாளர் சக்திவேல், உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயல் அலுவலர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், நாகேந்திரன் ஆகியோர் கிராமத்துக்கு வந்தனர்.

    அப்போது அங்கு இருந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை சிறை பிடித்தனர். தங்கள் ஊரில் வெட்டிய குளத்தை காட்டினால் தான் விடுவிப்போம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் பொதுமக்கள் இடையே 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சிறைபிடித்த அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். #Tamilnews

    திருப்பூரில் சிலை அலங்காரத்தை மாற்றியதால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15.வேலம் பாளையம் சோலி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். பனியன் தொழிலாளி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் சிகை அலங்காரத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். தலை முடியை ஸ்டைலாக அடிக்கடி மாற்றி வந்தார். கோடை விடுமுறையையொட்டி தற்போது புதிய ஸ்டைலில் முடி வெட்டி இருந்தார். இதை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.

    வரும் 1-ந்தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ளது. வித்தியாசமாக முடிவெட்டி இருப்பதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். முடியை அழகாக வெட்டிக்கொள் என்று தந்தை கூறி வந்தார். ஆனால் மகன் மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மகனை கட்டாயமாக சலூன் கடைக்கு அழைத்துச்சென்று முடியை பள்ளிக்கு செல்லும் அளவுக்கு வெட்டுமாறு கூறினார். கடைக்காரரும் அப்படியே வெட்டினார். தனக்கு பிடித்த ஸ்டைலில் வைத்திருந்த முடி போய்விட்டதே என்று மாணவர் நவீன்குமார் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.880 கோடி செலவில் 4-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பெரியார் காலனியில் பெரியார்நகர் குடியிருப்போர் சங்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை முழுமையாக செலுத்தி வீடுகளுக்கான பத்திரங்களை பெற்று கொண்டுள்ளனர். ஆனால் அந்த குடியிருப்புகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக குடியிருப்போர் சங்கம் சார்பில் பலமுறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கப்பட்டது.

    மேலும் உடனடியாக பட்டா வழங்கக்கோரி பெரியார்நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் கடந்த 2-ந்தேதி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் சங்கத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 185 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரியார் காலனியில் நேற்றுகாலை நடைபெற்றது. இதில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.880 கோடி செலவில் 4-வது குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு மாநகராட்சி பகுதிக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதேபோல் மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், 1-வது மண்டல முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், வளர்மதி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    திருப்பூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து கதறிய தந்தை இனி மது குடிக்க மாட்டேன் என்று கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் அருமை காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவரதுமனைவி பேபி (34). இவர்களுக்கு ஹரிஹரன் (14) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    பிரகாஷ் தினமும் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதைப்பார்த்த மாணவர் ஹரிஹரன் தன் தந்தையிடம் உங்களுக்கு நாங்கள் 2 பிள்ளைகள் உள்ளோம்.

    நீங்கள் மது குடித்து விட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்தால் நாங்கள் எப்படி படிக்க முடியும். ஏன் இப்படிசெய்கிறீர்கள் என்று கூறிவந்தார். பல முறை மாணவர் ஹரிஹரன் தன் தந்தைக்கு அறிவுரை சொல்லியும் அவர் கேட்ட பாடில்லை.

    சம்பவத்தன்றும் பிரகாஷ் வேலை முடிந்து குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வழக்கம்போல் தனது மனைவி பேபியிடம் தகராறு செய்தார்.

    அப்போது அங்கு வந்த மாணவர் ஹரிஹரன், தனது தந்தையிடம் பல முறை நான் சொல்லியும் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றார். ஆனால் அதை பிரகாஷ் கண்டு கொள்ளவில்லை.

    தொடர்ந்து அவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென மாணவர் ஹரிஹரன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    பின்னர் மாணவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதையடுத்து பிரகாஷ் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது மாணவர் பிரகாஷ் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுப்பற்றி 15 வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் தற்கொலை குறித்து போலீசார், பிரகாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது-

    நான் குடித்து விட்டு வருவதை என் மகன் தினமும் கண்டித்து வந்தான். மேலும் குடியை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவந்தான். இதை நான் பொருட்படுத்தவில்லை.

    நேற்று முன்தினம் நான் மனைவியிடம் சண்டை போட்ட போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இனி நான் சத்தியமாக குடிக்கவே மாட்டேன் என்று கூறினார்.

    தொடர்ந்து பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த குவாட்டர் மது பாட்டிலை வெளியே கொண்டு வந்து வீசி உடைத்தார். மேலும் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவர் குடிப்பழக்கத்தால் நான் என் மகனை இழந்து விட்டேனே என்று கூறியப்படி கதறி அழுதார். #Tamilnews
    திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ. 200 கோடிக்கு பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் அறிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பனியன் நகரமான திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. அவைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள அனுப்பர் பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக திருப்பூரில் ரூ. 200 கோடி பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவனம் அடைக்கப்பட்டதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    திருப்பூரில் பனியன் நிறுவனம் மட்டுமின்றி ஓட்டல்கள், கடைகள், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் புதுமார்க்கெட், அவினாசி ரோடு, கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவினாசி, ஆட்டையாம் பாளையம், கைகாட்டி புதூர், சேவூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அவினாசி தினசரி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    திருப்பூர் பனியன் கம்பெனி விடுதியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    அரியலூர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகள் செம்பருத்தி (வயது 17).

    இவர் திருப்பூர் மண்ணரையில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த செம்பருத்தி கடந்த வாரம் ஊருக்கு சென்றார். அப்போது அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக அவரது பெற்றோர் கூறினர்.

    ஆனால் செம்பருத்தி திருமணத்திற்கு மறுத்து வந்தார். ஆனாலும் பெற்றோர் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் செம்பருத்தி திருப்பூருக்கு வேலைக்கு வந்து விட்டார். நேற்று விடுமுறை என்பதால் செம்பருத்தி மட்டும் விடுதியில் தங்கியிருந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவரின் நடமாட்டம் இல்லாததால் அவரது தோழிகள் விடுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது செம்பருத்தி தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செம்பருத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பூரில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அரசு பஸ் மோதி பனியன் கம்பெனி சூப்பர் வைசர் பலியானார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் கார்த்திக் (27). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை 10.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். திருப்பூர் வலம்பாலம் என்ற இடத்தில் சென்ற போது சேலத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் வந்தது. இதனை மேட்டூரை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டி வந்தார். இந்த பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் கார்த்திக் பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இதனால் அப்பகுதி பொதுக்கள் ஆத்திரம் அடைந்தனர். அங்கு 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் பஸ்சை முற்றுகையிட்டனர். டிரைவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு உருவானது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் பஸ் மோதி பலியான சூப்பர் வைசர் கார்த்திக் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் சோளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் லோட்டஸ் கார்டன் பகுதியில் உள்ள நிரஞ்சன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது முகவரிக்கு சென்னையில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதை பிரித்து படித்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் ‘இறை இல்ல பிரச்சினையில் உன் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து நீ விலகவில்லை எனில் கோவை சசிகுமார் மரணத்தை விட அகோரமாக உன் மரணம் அமையும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

    இது குறித்து ராஜா 15.வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சென்னை மடிப்பாக்கம் தபால் நிலையத்தில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் கோழிக்கடை உரிமையாளர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியா பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணி என்கிற பெரியசாமி (27). பல்லடத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராக்கியாபாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் மணி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது மணியின் கழுத்தில் பாட்டிலால் குத்தியதற்கான காயம் இருந்தது. அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.

    எனவே மணி நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×