search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்படம்"

    ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகை, ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக எடுத்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
    டொராண்டோ:

    கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பைரோ. இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர் அண்மையில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்தார். அவர் அங்குள்ள பறவைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அப்போது, ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகு ஒன்றை புகைப்படம் எடுக்க தயார் ஆனார்.

    பொதுவாக இதுபோன்ற புகைப்படங்களை எடுக்கிறபோது, பறவைகள் அந்த இடத்தில் இருந்து பறந்து சென்றுவிடும் அல்லது அப்படியே இருக்கும். ஆனால் ‘புரூஸ்’ கழுகு, ஸ்டீவ் பைரோ தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்தது, அவரை நோக்கி பறந்து வந்தது. நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும் தண்ணீரில் உரசியபடி‘போஸ்’ கொடுப்பது போல நேர்த்தியாக பறந்து வந்தபோது, ஸ்டீவ் பைரோ அதனை தத்ரூபமாக படம் பிடித்தார். அதன் பின்னர் அவர் அந்த படத்தை ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைத் தளங்களில் பதிவிட்டார்.

    தற்போது அந்த படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் ஸ்டீவ் பைரோவுக்கு பெரும் பெயரும், புகழும் கிடைத்துள்ளது.

    இது குறித்து அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதை நான் இன்னும் அறியவில்லை” என்றார்.

    உலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். #blackhole



    அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் நிறைவேறியிருக்கிறது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

    கருந்துளையின் முதல் புகைப்படத்தை கருந்துளை பற்றி பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சமர்ப்பணமாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் எட்டு தொலைநோக்கிகள் பயன்படுத்தி கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

    விர்கோ கேலக்ஸி கிளஸ்டர் அருகில் மெசியர் 87இன் மத்தியில் மாபெரும் கருந்துளை கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



    ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும். 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக கருந்துளையை புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

    கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்திருக்கிறோம். 200-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருக்கின்றனர் என திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார்.

    இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஈவென்ட் ஹாரிசான் டெலஸ்கோப் (Event Horizon Telescope - EHT) என்பது உலகம் முழுக்க நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ டெலஸ்கோப்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரேமாதிரி இயங்கும். இது பூமியின் அளவு கொண்டிருக்கிறது. இதனாலேயே கருந்துளையின் நிழலை பதிவு செய்ய முடிந்தது. 

    புதிய அறிவியல் புரட்சி ஆறு கட்டுரைகள் வடிவில் வானியற்பியல் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
    சி விஜில் ஆப் மூலம் பணப்பட்டுவாடா குறித்து 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக 1011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருப்பூர், தேனி, மதுரை மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

    பொதுமக்கள் தேர்தல் கமி‌ஷனுக்கு புகார் அளிக்கக் கூடிய சி விஜில் செயலி (ஆப்) மூலம் 968 புகார்கள் வந்துள்ளன. அதில் 622 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. 314 புகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


    பணம் விநியோகம் சம்பந்தமாக 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன. மதுபானங்கள் வழங்குவதாக 11 புகைப்படங்கள் வந்துள்ளன. இதுவரை வாகன சோதனையில் ரூ.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மதுமகாஜன் நாளை சென்னை வருகிறார். ஓட்டுரிமை இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓட்டுபோட வேண்டுமானால் இங்கு வந்து தான் ஓட்டுபோட முடியும். வெளிநாட்டில் இருந்து கொண்டே ஓட்டு போட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார். #ElectionCommission #ElectionCampaign #SoldiersPhoto
    புதுடெல்லி:

    அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. 
    பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கன்னியர் சபை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

    இப்புகார் குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல், வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோட்டயம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய போலீசார் தாமதம் செய்வதாக கூறி கன்னியாஸ்திரியின் ஆதரவாளர்கள், உறவினர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 8-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்திற்கு பெண் உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகைகள் ரீமா கல்லிங்கல், பாக்கிய லெட்சுமி ஆகியோரும் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆயர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரி பற்றி, அவர் பணியாற்றி வந்த கன்னியர் சபை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது.

    இது தொடர்பாக நேற்று கன்னியர் சபை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கன்னியாஸ்திரி மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டதோடு, கன்னியாஸ்திரியும், ஆயர் பிராங்கோ முல்லக்கல்லும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டது.

    இந்த புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியானது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்திய சட்ட விதிகளின் படி, பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள், சிறுவர்கள் குறித்த புகைப்படங்கள், விவரங்களை வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கன்னியர் சபை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலர் புகார் செய்தனர். அதன் பேரில் கேரள போலீசார் இது தொடர்பாக கன்னியர் சபை மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். #tamilnews
    கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்த வழக்கில் கைதானவர் முதலமைச்சருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#fakecurrency #TNCM
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31). இவர் தனது நண்பர்களான கிதர் முகமது, சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டார். இதையடுத்து ஆனந்த், கிதர் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுந்தர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த நிலையில் ஆனந்த், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுடன் எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அதில் கள்ளநோட்டுகள் கும்பலுடன் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சருடன் ஆனந்த் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படம் உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அத்துடன் அந்த புகைப்படத்தில் இருக்கும் மற்ற நபர்களிடமும் இது உண்மையாக எடுக்கப்பட்டதா? அப்படி என்றால் எப்போது எடுக்கப்பட்டது? அங்கு ஏன் ஆனந்த் வந்தார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்தால், புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #fakecurrency #TNCM
    ×