search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவம்"

    இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPolice
    புதுடெல்லி:

    பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிர்மலா சீதாராமன். இந்திய ராணுவத்தில் பெண்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத் துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதன்படி மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPolice
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் உளவுப்பிரிவின் பொறுப்பாளரான செதிக் யர் உள்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
    வங்காளதேசத்தில் நாளை மறுதினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #BangladeshGeneralElection
    டாக்கா:

    வங்காளதேசத்தில் டிசம்பர் 30-ம் தேதி (நாளை மறுதினம்) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஷேக்  ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இதற்கிடையே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள  தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத் தேர்தலை சீர்குலைக்க  முயல்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள  தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள்  புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
    #BangladeshGeneralElection
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் நடந்த என்கவுண்டரில், பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.



    அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. #JKEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaEncouter #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #PulwamaEncouter #JKEncounter
    போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் சேர 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கல்வி சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது தர்மபுரியை சேர்ந்த பரத், பெருமாள் ஆகியோரின் கல்வி சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

    அவர்களது சான்றிதழை சரி பார்த்தபோது போலியானது என்பது தெரிய வந்தது. வேறு சிலரின் சான்றிதழ்களை அவர்கள் போலியாக தயாரித்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது குறித்து ராணுவத்திற்கு ஆள் தேர்வு இயக்குனர் ரேனி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரத், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்களது வயது முதிர்வு அடைந்து விட்டதால் வயது குறைவானவர்களின் கல்வி சான்றிதழை கொடுத்ததாக தெரிவித்தனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் போலி சான்றிதழ் கொடுத்தாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஏராளமான பெண்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். #BJP #NirmalaSitharaman
    சென்னை :

    சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்’ சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பிலான சிறந்த கல்வி மற்றும் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் குழும பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுவதுடன் மரத்தால் ஆன நாற்காலிகள், மேசைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கற்றல் திறன் குறைபாடு உடைய மாணவிகளுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்பின்’ கவர்னர் பாபு பேரம், தலைவர் ஆர்.எம்.நாராயணன், உலகளாவிய திட்டத் தலைவர் திவ்யா சித்தார்த், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யா பீடத்தின் செயலாளர் சுவாமி சுகதேவானந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-



    பெண்களுக்கு கல்வி என்பது புது சிந்தனை அல்ல. நம் நாட்டில் பெண்கள் கல்விக்கு எப்போதும் வாய்ப்பு இருந்து இருக்கிறது. குறிப்பாக வேதங்களில் பழமையான ரிக் முதலான வேதங்களை வழங்கியவர்களில் 22 பேர் பெண்கள். அந்த வகையில், சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணரே அன்னை சாரதா தேவியை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும். எனவே, அறிவை வளர்ப்பதில் பெண்களின் பங்கு நம் நாட்டில் எப்போதும் இருந்து இருக்கிறது.

    எனவே, தற்போதைய நவீன கல்வி யுகத்தில், கல்வி கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளையும் சக மாணவிகளுடன் வைத்து கற்றுக் கொடுத்தால், அவர்களும் சமூகத்தில் சமமாக இருக்க முடியும். அதன் முதற்கட்டமாக அவர்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். படிக்கிற மாணவிகளுக்கு மட்டும் கல்வியை கொடுத்து நல்ல மதிப்பெண் வாங்கினார்கள் என்று கூறுவதை விட இதே போன்று கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளுக்கும் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்து உள்ளதை வரவேற்கிறேன்.

    தற்போது இது போன்ற உதவிகளை பெறும் மாணவிகளாகிய நீங்களும், இதனை மனதில் வைத்துக் கொண்டு பெரியவர்களான பிறகு உங்களுக்கான வாய்ப்புகள் வரும் போது இது போன்ற உதவிகளை செய்ய வேண்டும். அவரவரால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும். மாணவிகளுடன் ½ மணி நேரம் இருந்தாலும் நான் ஊக்கம் பெற்றதாக கருதுவேன். இன்று மாணவிகளுடன் அதிக நேரம் இருந்தமையால் முழு ஊக்கம் பெற்றதாக கருதுகிறேன்.

    14 லட்சம் எண்ணிக்கை கொண்ட நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே உங்களில்(மாணவிகள்) நிறைய பேர் ராணுவத்தில் சேர வேண்டும். இன்று பள்ளிக்கூட சீருடையில் பார்க்கும் உங்களில் நிறை பேரை இன்னும் 5 வருடங்கள் கழித்து விமானப்படை சீருடையிலோ, கப்பல்படை சீருடையிலோ, ராணுவ சீருடையிலோ பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் சாரதா தேவி வேடம் அணிந்து இருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் முன்னதாக சாரதா வித்யாலயா பள்ளி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #BJP #NirmalaSitharaman
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிகுன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டை நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #JKEncounter
    குடியேறிகளை தடுப்பதாக கூறி எல்லைப்பகுதியில் 5 ஆயிரம் ராணுவத்தினரை குவித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அரசியல் ஸ்டன்ட்’ அடிப்பதாக முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    எல் சவடோர், ஹோன்டுராஸ், குவட்டெமலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதற்காக மெக்சிகோ நாட்டின் வழியாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இந்நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை  'அரசியல் ஸ்டன்ட்’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

    ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா, ‘அமெரிக்காவை நோக்கி அடைக்கலத்துக்காக வரும் ஏழை அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக தற்போது அரசு கூறுகிறது.

    கைகளில் குழந்தைகளுடன் பலநூறு மைல்கள் நடந்துவரும் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நமது வீரம்மிக்க ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரத்தில் நமது ராணுவத்தை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் இவர்களின் அரசியல் ஸ்டன்ட்டுக்காக எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவா நாட்டுப்பற்று? இது நாட்டுப்பற்றில்லை. வெறும் அரசியல் ஸ்டன்ட் மட்டும்தான்.

    தேர்தல்கள் வரும் காலத்தில் இதுபோல் பேசுவதும், தேர்தலுக்கு பின்னர் இதை எல்லாம் மறந்து விடுவதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #JammuAndKashmir #PulwamaEncounter
    புல்வாமா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கும்படி பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். நேற்று இரண்டு நபர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பாப்கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    இதில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகூர் அகமது என்பதும், ராணுவ வீரராக இருந்து, பயங்கரவாதியாக மாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JammuAndKashmir #PulwamaEncounter

    தேனி அருகே ராணுவத்தில் சேர தந்தை வற்புறுத்தியதால் வி‌ஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி வீரபாண்டி போலீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 21). கடந்த சில வருடங்களாகவே தந்தை விக்னேஷ்குமாரை ராணுவத்தில் சேர வற்புறுத்தி வந்துள்ளார்.

    இருப்பினும் தனக்கு ராணுவத்தில் சேர விருப்பம் இல்லை என்று தந்தையிடம் பல முறை தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தன்று தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் தனது தந்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த விக்னேஷ்குமார் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்துக்கு வைக்கும் வி‌ஷ மாத்திரையை தின்று விட்டு பின்னர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த தந்தை கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் குமாரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafale #Modi #AnilAmbani #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.



    இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான விஷயம்.

    ஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

    ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.

    மோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.

    அவர், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். Rafale #Modi #AnilAmbani #RahulGandhi 
    ×