search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல்"

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்து விட்டதால் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் செல்லாயிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பச்ச மலையான் கோட்டை பிரிவு அருகே செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றனர்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இப்பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நகை பறிக்கும் கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    தேவதானப்பட்டி அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கினார்.

    இன்று வீட்டின் முன் தீ எரிந்து கொண்டிருந்துள்ளது. வெளியே கதவு திறந்து பார்த்த போது ஆட்டோ தீ எரிவதை பார்த்து பின்னர் தண்ணீரை வைத்து அணைத்தனர். பின்னர் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தீ வைத்தது யார் என்று தெரியவில்லை?

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் ஆட்டோக்களில் டயர், பேட்டரி, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக தேவதானப்பட்டி விசாரித்து வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவனை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் நேதாஜிநகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி பிரபாவதி இவர்களது மகன் சக்திவேல் (வயது 11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    சக்திவேல் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேனில் வந்த 5பேர் கொண்ட கும்பல் மாணவனை திடீரென கடத்தி சென்று விட்டனர். இதனை கண்ட சக்திவேலின் நண்பன் இது குறித்து அவரது அம்மாவிடம் கூறினார்.

    அதிர்ச்சியடைந்த பிரபாவதி இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே இளம்பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    மேலும் இளம்பெண்ணை கக்கன்ஜி நகரை சேர்ந்த சின்னக்காளை. இவரது மனைவி மற்றும் மகன் சின்னச்சாமி ஆகிய 3 பேரும் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசில் அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் இளம்பெண்ணை கடத்திய 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கம் அருகே வங்கியில் ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு பின்பக்கமுள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். நேற்று அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கியின் ஜன்னல் கம்பிகளை மேலும் வளைக்க முடியாததால் வங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    மதுரை பழங்கானத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகளை பார்க்க கணேசன் முடிவு செய்தார். இதற்காக அவர் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்திருந்தார்.

    இதையொட்டி நேற்று மாலை கணேசன் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை மதுரை பாலரங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் டேனியல்(40) ஓட்டி சென்றார். இரவு 12 மணியளவில் அவர்கள் சென்னை சென்றடைந்தனர்.

    பின்னர் கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார்.

    தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

    பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் கொடுத்தனர். அதன்பிறகு அவர் காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் காரை நிறுத்தம்படி கூறினார்.

    உடனே கிறிஸ்டோபர் டேனியல் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிறிஸ்டோபர் டேனியல் தலையில் தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்பு அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து காரை கடத்தி சென்று விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் டேனியலுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிறிஸ்டோபர் டேனியலை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது குறித்து விழுப்புரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    கார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படை ஒன்று அமைத்தார். தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரை கடத்தி சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை உடையார்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் ஐம்பொன் நகைகள் செய்து விற்று வந்தார். இவரது நண்பர்கள் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன்.

    இவர்களில் ரகுராமகிருஷ்ணன் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நம்பிராஜன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே சுரேஷ்குமார் சமீபத்தில் புதிதாக கார் வாங்கினார்.

    கார் வாங்கியதை கொண்டாடுவதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக சுரேஷ்குமார் தனது நண்பர்கள் ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோருடன் நெல்லை தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு காரில் சென்றார்.

    அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு 3 பேரும் மது அருந்தினர். பின்னர் ஆற்றில் குளித்தனர். இந்த வேளையில் அப்பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரிடம் இங்கு எப்படி காரை நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.

    பின்னர் சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் தடுத்தனர். உடனே ஆத்திரமடைந்த கும்பல் அவர்களையும் தாக்கியது. பின்னர் 3 பேரையும் இழுத்து சுரேஷ்குமாரின் காருக்குள் போட்டனர். பின்னர் சுரேஷ்குமாரிடம் இருந்த கார் சாவியை பறித்து 3 பேரையும் காருடன் கடத்தி சென்றனர். காரை ஒருவர் ஓட்ட, மற்ற 2 பேர் காரில் இருந்தனர். 3 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் சுரேஷ்குமாரும், ரகுராமகிருஷ்ணனும் காரில் இருந்து குதித்து தப்பினர். நம்பிராஜனால் காரில் இருந்து குதிக்க முடியவில்லை. டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது நம்பிராஜனை காரில் இருந்து கீழே தள்ளிய கும்பல் காருடன் தப்பி சென்றது. கடத்தப்பட்ட காரில் சுரேஷ்குமாருக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன. அவற்றுடன் கும்பல் தப்பிவிட்டது.

    இதனிடையே கும்பல் தாக்கியதில் காயமடைந்த சுரேஷ்குமார், ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குபதிவு செய்து காரை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை அருகே வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுதுரை. சம்பவத்தன்று பொன்னுதுரையும், அவரது மனைவியும் நெல்லை மார்க்கெட்டுக்கு வந்துவிட்டனர். வீட்டில் அவர்களது மகள் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பொன்னுதுரையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி பொன்னுதுரையின் மகளை கடத்தி சென்று விட்டனர்.

    வீட்டுக்கு வந்த பொன்னுதுரையும், அவரது மனைவியும் இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    தேனி அருகே கணவன்- மனைவியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ். இவரது மனைவி துர்காதேவி (வயது 25). அதே வீட்டில் 2 மாதத்துக்கு முன்பு கலையரசன் (43) என்பவர் 3 ஆண்டு ஒத்திக்கு வீட்டை எடுத்து அவரது மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    பாக்கியராஜ் மற்றும் கலையரசன் குடும்பத்தினரிடையே மோட்டார் இயக்குவது மற்றும் இ.பி. பில் கட்டுவதில் 2 மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை முன் விரோதமாக மாறி பாக்கியராஜ், கலையரசன் குடும்பத்தினரை வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த முன் விரோதம் கைகலப்பாக மாறியது.

    சம்பவத்தன்று இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கலையரசன் அவரது மனைவி மற்றும் மகன்கள் துர்காதேவியை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பாக்கியராஜூம் தாக்கப்பட்டார்.

    இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து துர்காதேவி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் கலையரசன், அவரது மனைவி மற்றும் மகன்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி அருகே டியூசன் படிக்க சென்ற மாணவனை கும்பல் காரில் கடத்தி சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு மணிகண்டன்(11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று மாலை மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஆசிரியரிடம் டியூசன் படிக்க நடந்து சென்று கொண்டிருந்தான்.

    அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென, மாணவன் மணிகண்டனை குண்டுக் கட்டாக தூக்கி சென்றனர். பின்னர் அவர்கள் மாணவனின் வாயை பொத்தி, காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினான். ஆனால் காரில் பின் இருக்கையில் இருந்த 2 பேர், மணிகண்டனை கெட்டியாக பிடித்து கொண்டனர்.

    இந்த நிலையில் கார், கொள்ளிடம் முக்கூடம் பகுதியில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ரோட்டோரத்தில் நிறுத்தி, கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்தார்.

    அந்த சமயத்தை பயன் படுத்தி மணிகண்டன், திடீரென காரில் இருந்த மற்றொருவரின் கையை கடித்து விட்டு மின்னல் வேகத்தில் காரில் இருந்து தப்பி ஓடினான்.

    இதை சற்றும் எதிர் பார்க்காத கடத்தல் கும்பல், தப்பி ஓடிய மணிகண்டனை பிடிக்க விரட்டி சென்றனர்.

    ஆனால் மணிகண்டன் சத்தம் போட்டப்படி ரோட்டில் ஓடியதால் கடத்தல் கும்பல் பதட்டம் அடைந்தனர். உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் சம்பவம் குறித்து மணிகண்டன், அட்டகுளம் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவன் போலீசாரிடம் ‘தன்னை கடத்தியவர்கள் 4 பேர் கும்பல்’ என்றும், காரில் செல்லும் போது செல்போனில் தன்னை படம் பிடித்ததாகவும் தெரிவித்தான்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கும்பல் கடத்தி சென்றதா? அல்லது மாணவனே கடத்தல் நாடகம் நடத்துகிறானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டுக்கோட்டை அருகே குடத்தால் தாக்கி ரவுடியை கொடூரமாக கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் நேற்று மாலை நசுவினி காட்டாற்று கரை அருகே உள்ள ஒரு வயலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தலையில் காயமும், கழுத்து அறுபட்ட நிலையிலும் அவர் கிடந்தார்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள், பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.


    கொலையுண்ட வாலிபர் உடல் அருகே எவர்சில்வர் குடம் ரத்தக்கறையுடன் கிடந்தது. இதனால் குடத்தால் அந்த வாலிபரின் தலையில் தாக்கி பின்னர் கழுத்தை அறுத்து மர்ம கும்பல் கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

    இதில் கொலையுண்ட வாலிபர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் குட்டி பாம்பு என்கிற ஆறுமுகம் (வயது 36) என தெரியவந்தது. ரவுடியான இவர் மீது பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தன. இதனால் ரவுடி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் கடத்தி வந்து குடத்தால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    ஆறுமுகத்தின் அண்ணன் பெரிய பாம்பு என்ற பட்டபெயருடன் ரவுடியாக இருந்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ரவுடி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு இருப்பது பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

    ரவுடி ஆறுமுகத்தை கொலை செய்த கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் கும்பலுக்கு உதவிய ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.

    இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×