search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101506"

    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    சென்னை:

    இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.



    அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. #ChennaiMetroWater
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேமிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் முன் ஏற்பாடுகளை செய்யும் வகையில் பொதுமக்களை தயார் படுத்தி வருகிறது.

    வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு மையங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

    கிகி விளையாட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது போல சென்னை மக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை எடுத்து போட்டால் சிறந்த கட்டமைப்புகளுக்கு பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை சீர் செய்தல், மாடிகளை சுத்தம் செய்தல், கூழாங்கல் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது போன்ற புகைப்படங்களை எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், மற்றும் சென்னை குடிநீர் வெப்சைட் ஆகியவற்றில் போடலாம் என்று குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


    சென்னையில் 8 லட்சத்து 93 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வீடுகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பருவ மழைக்கு முன்பாக சீரமைத்து மழை நீர் வீணாக்காமல் சேமித்தாலே நகரின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவ மழை தொடங்க இருக்கின்ற இக்கால கட்டத்தில் வீடுகளில் மழை சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

    சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு படத்தினை எடுத்து வெளியிடலாம்.

    இதில் 25 அயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறந்த புகைப்படத்திற்கு சாம்பியன் பேட்ஜ் வழங்கப்படும்.

    இது தவிர குடிநீர் வாரிய என்ஜினீயர்கள், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை பார்வையிடுகிறார்கள். தினமும் 10 முதல் 20 வீடுகளை ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு குறித்த விதிமுறைகளை விளக்கி கூறுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்கள், 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார்கள்.

    மேலும் கோயம்பேட்டில் மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #ChennaiMetroWater
    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்னும் புதிய திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றின் கவர்களை தனியாக பிரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்திய 10 பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கடைகளில் வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்படும். அதில் உள்ள பரிசுத் தொகையை பொருட் கள் வாங்கும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இதற்காக கடைகளில் தனியாக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி மாநகராட்சியால் முதன் முதலாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் ஆகும்.

    இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி சுடலை காலனியில் நடந்தது. நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, பொதுமக்கள் இந்த பரிசுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வாங்கும் நபர்களுக்கு இலவசமாக சாம்பார் தூக்குவாளி வழங்கும் நிகழ்ச்சி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொடங்கி வைக்கப்பட்டது. 
    கீரனூரில் பிரண்ட்ஸ் பாய்ஸ் அணியின் சார்பில் 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
    கீரனூர்:

    கீரனூரில் பிரண்ட்ஸ் பாய்ஸ் அணியின் சார்பில் 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் 16 அணிகள் கலந்து  கொண்டன. போட்டியின் இறுதியில் நீர்பழனி எஸ்பிசிசி அணியினர் முதலிடம்  பிடித்தனர். முதலிடம்  பிடித்த நீர்பழனி எஸ்பிசிசி  அணியினருக்கு, கீரனூர் நகரம் அம்மாமக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முத்து, மாநில இணைச் செயலாளர் கார்த்திக் பிரகாஷ், ஒன்றிய இணைச் செயலாளர் கேபிள் சங்கர் ஆகியோர் முதல்பரிசுக்கான தொகை ரூ.10010 மற்றும் கோப்பையும்  வழங்கினர்.

    இரண்டாம் பரிசு தொகை ரூ.7007- கீரனூர் பிரண்ட்ஸ் அணியினர் பெற்றனர். இதனை  எம்.முத்து வழங்கினார்.  மூன்றாம் பரிசு ரூ.5005- கீரனூர் பாய்ஸ் அணியினர் பெற்றனர். இதனை ராஜேஷ் வழங்கினார். நான்காம் பரிசு ரூ.3003 -ஏதினிப்பட்டி அணியினர்  பெற்றனர். இதனை ராஜ்குமார் வழங்கினார். 

    ஜந்தாம் பரிசு ரூ.2002 - உடையாளிப்பட்டி அணியினர் பெற்றனர். பரிசளிப்பு நிகழ்ச்சியில் அம்மா மக்கள்  முன்னேற்ற கழக கீரனூர் நகர செயலாளர் சுப்பிர மணியன்,  ரஜினி மக்கள் மன்ற  குன்றாண்டார்கோவில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தொழிலதிபர் தங்க மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு சென்றார். இந்தியாவின் பரிசாக அந்த நாட்டுக்கு 200 பசுக்களை வழங்குகிறார். #Rwanda #Cow #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ருவாண்டா அதிபர் பால் ககமே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்தார். இப்போது பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு சென்று இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். ருவாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.



    ருவாண்டா அரசு, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்துக்கு இந்தியாவின் சார்பில் இலவசமாக 200 பசுக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு பசுக்களை வழங்குகிறார்.

    ருவாண்டாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) உகாண்டா செல்லும் பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.

    பின்னர் உகாண்டாவில் இருந்து நாளை தென் ஆப்பிரிக்கா செல்லும் மோடி அங்கு 27-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் 10-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ராமபோசாவை சந்தித்து பேசுகிறார்.

    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #Rwanda #Cow #Modi #tamilnews 
    சூலூர் தொகுதியில் நகை பறிப்பவர்களை பிடித்து கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கனகராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

    சூலூர்:

    சூலூர் பகுதியில் அடிக்கடி வீடுகளில் திருட்டு, நகைபறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இதில் அங்கிருந்த இலவச சீருடைகள், காலணிகள் எரிந்து நாசமாயின. இதனால் இந்த பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பெற்றோர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில், அந்த பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் நடமாடி வருவதாக சூலூர் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ், பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தீப்பிடித்து எரிந்த அறைகளுக்கு சென்ற அவர், சூலூர் வட்டார கல்வி அதிகாரி நேசமணியிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், சூலூர் தொகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து தந்தாலோ அல்லது உரிய தகவல் தெரிவித்தாலோ அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசும், சங்கிலி பறிப்பு குற்றவாளிகளையும், நகைகளையும் மீட்கும் போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக கொடுப்பேன்.

    மேலும், தீயினால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு என் சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் தரப்படும். பள்ளியின் அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ஆகும் தொகையை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையுடன் இணைந்து அரசிடம் கேட்க ஆவன செய்யப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக எம்.பி அறிவித்துள்ளார். #Aurangzeb #ParveshSahibSinghVerma #ManjinderSirsa
    புதுடெல்லி:

    கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர் அவுரங்கசீப் கடத்திக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், ராணுவ வீரர் அவுரங்கசீப் மரணத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளனர். 

    இதுதொடர்பாக, மேற்கு டெல்லி தொகுதியின் பாஜக எம்.பி பர்வேஷ் சாகிப் சிங் மற்றும் டெல்லியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மஜிந்தர் எஸ் சிர்சா ஆகியோர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ வீர்ரை கடத்திக் கொன்ற பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு  வழங்கப்படும் என பதிவிட்டுள்ளனர். #Aurangzeb #ParveshSahibSinghVerma #ManjinderSirsa
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு மட்டும் இவ்வளவு தொகை பரிசாக கிடைக்கும். #FIFO2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2697 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 256 கோடி பரிசாக கிடைக்கும்.

    2-வது இடத்துக்கு ரூ. 188 கோடியும், 3-வது இடத்துக்கு ரூ. 161 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ. 148 கோடியும் கிடைக்கும்.

    கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ. 107 கோடியும், 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 80 கோடியும், ‘லீக்’ சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ. 50 கோடியும் பரிசாக வழங்கப்படும். #FIFO2018
    வருமான வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடுவோர் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கும் வகையில் திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. #TaxEvasion #Rewards
    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பண ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக வருமான வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள் குவிப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

    மத்திய அரசின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் பரிசுத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி வரி ஏய்ப்பு, பினாமி சொத்து பரிமாற்றம் மற்றும் கருப்பு பணம் பதுக்குவோர் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிப்போருக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பரிசுத்தொகையை மாற்றியமைத்து புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ‘வருமான வரி தகவல் அளிப்போர் பரிசுத்திட்டம் 2018’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் கீழ் 3 வகையிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி வருமானம் மற்றும் சொத்து (வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் ஏலமிடத்தக்கது) வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். இந்த முறைகேடு குறித்த கணிசமான தகவல்களை வருமான வரித்துறையின் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கைக்கு உதவலாம்.

    இதைப்போல பினாமி சொத்துகள் பரிமாற்றங்கள் குறித்து, பினாமி தடுப்பு பிரிவு இணை அல்லது கூடுதல் ஆணையர்களிடம் தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்பு பணம் மற்றும் சொத்துகள் குறித்து கணிசமான தகவல் அளிப்போருக்கு ரூ.5 கோடி வரை பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    இந்த தகவல்களை வெளிநாட்டினர் உள்பட யாரும் வழங்கலாம் என்று கூறியுள்ள வருமான வரித்துறை, இவ்வாறு தகவல் அளிப்போரின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளது. #TaxEvasion #Rewards #Tamilnews 
    ×