search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101584"

    டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.

    இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.

    தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

    ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.

    கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
    மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    மும்பை:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.



    இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.

    ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர்.


     
    பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வருகை தந்தனர்.



    இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே உள்பட பலரும் வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்தனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் முறையாக இன்று பங்கேற்றார். #Congress #PriyankaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
     
    வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.



    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்தது.

    இதற்கிடையே, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் முறையாக இன்று பங்கேற்றார். #Congress #PriyankaGandhi 
    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  

    இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.



    நேற்றே பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இன்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

    தலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #MamataBanerjee  #Megarally
    உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனைகளில் 7 பேர் பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் பங்கேற்க உள்ளனர். #BrisbaneInternational #ElinaSvitolina
    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வரும் டிசம்பர் 31-ம்தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் இத்தொடரில், உலகின் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று திறமையை நிரூபிக்க உள்ளனர்.

    இந்நிலையில் உலக டென்னிஸ் தர வரிசையில் உள்ள டாப்-10 வீராங்கனைகளில் 7 வீராங்கனைகள் பிரிஸ்பேன் தொடரில் பங்கேற்க உள்ளனர். எலினா ஸ்விடோலினா, நவோமி ஒசாகா, ஸ்லோனே ஸ்டீபன்ஸ் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.



    உலக தர வரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஸ்விடோலினா, டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்ற நிலையில், பிரிஸ்பேன் பட்டத்தையும் தக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #BrisbaneInternational #ElinaSvitolina

    பெரம்பலூரில் 2-வது நாளாக நடந்த தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழில்நுட்ப துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் 4 பிரிவுகளுக்கும், சீனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என மொத்தம் 952 பேர் பங்கேற்றனர்.

    அதே கல்லூரியில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து தட்டச்சு தேர்வுநடந்தது. இதில் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும், சீனியர் கிரேடில் 3 பிரிவுகளுக்கும், உயர் வேகத்தேர்வு 2 பிரிவுகளுக்கும், ஜூனியர் கிரேடில் 2 பிரிவுகளுக்கும் நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர். 
    தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த இப்தார் விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உள்பட பலர் பங்கேற்றனர். #IftarParty #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் முக்தார் அப்பாஸ் நக்வி.

    இவர் தலைநகர் டெல்லியில் இன்று இப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  மற்றும் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



    முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்க்காகவே இந்த இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #IftarParty #MukhtarAbbasNaqvi
    டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர். #Congress #IftarParty #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதல் முறையாக இன்று இப்தார் விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    இந்த இப்தார்  விருந்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல்  மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஷீலா தீட்சித், அகமது படேல்,  சீதாராம் யெச்சூரி, கனிமொழி, சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



    மேலும், ரஷ்யா நாட்டு தூதர் நிகோலய் குகஷேவ் உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். #Congress  #Congress #IftarParty #RahulGandhi 
    தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனை காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அவர்களுடன் காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    நேற்று தி.மு.க. நடத்திய மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனால் நேற்று அவர்கள் சட்டசபைக்கு வரவில்லை.

    இன்று காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். #TNAssembly
    புதுவையில் வங்கி ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு 1.11.2017 முதல் நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூக முடிவு எட்டவில்லை. 2 சதவீத உயர்வுதான் அளிக்க முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் சார்பில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இதன்படி இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் புதுவையில் உள்ள 256 வங்கி கிளைகள் மூடப்பட்டு கிடந்தது. இதில் பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் யூகோ வங்கி முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க பொறுப்பாளர்கள் முனுசாமி, கருணாகரன், பிரேம்ராஜ், சுந்தரவரதன், பாலகிருஷ்ணன், திருமாறன், ரவி, கதிர்வேல், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசின் பண மதிப்பிழப்பு சமயத்தில் வங்கி ஊழியர்கள் இரவு- பகல் பாராமல் பணி செய்து அரசின் பாராட்டுகளை பெற்றோம்.

    ஆனால், எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. வேலை நிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வேலை நிறுத்தத்தால் புதுவையில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறினர்.

    கிருஷ்ணகிரி அணை நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக ஆற்றில் கலக்க செய்யாமல் அதை மக்களுக்கு பயன்படும் வகையில் ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், மாநில துணை தலைவர் மேகநாதன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகை சரி செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அணையில் இருந்து வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்காததை கண்டித்தும், அணையின் நீரை 52 அடியாக உயர்த்தி உடனடியாக மதகு அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகு உடைந்து தண்ணீர் வீணாகி சென்றது.

    அணையின் நீர்மட்டம் 52 அடியாக இருந்ததை மதகு உடைந்ததின் காரணமாக 42 அடியாக்கி உள்ளார்கள். தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தண்ணீரை வீணாக்க கூடாது. மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு அணைகளை கட்டவில்லை. கால்வாய்களை வெட்டவில்லை.

    இருக்க கூடிய அணையை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் முதல் கட்டமாக 28 ஏரிகளையும், அடுத்த கட்டமாக 25 ஏரிகளையும் நிரப்பிட வேண்டும். குறிப்பாக போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். எண்ணேகொல்புதூர் திட்டத்தை படேதலாவ் ஏரியுடன் இணைக்க வேண்டும்.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொடியாளம் அருகில் தடுத்து பக்கத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பினால் சூளகிரி சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், பா.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×