search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101907"

    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 3 முன்னணி விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். #AUSvIND #Ashwin
    அடிலெய்டு:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பியதால் இந்தியா தடுமாறியது. கடுமையாகப் போராடிய புஜாரா சதம் அடித்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஷமி 6 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் ஹாரிஸ்-கவாஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.



    அணியின் ஸ்கோர் 45 ரன்களை எட்டியபோது, அஸ்வின் பந்தில் ஹாரிஸ் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஷான் மார்சையும் அஸ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் 59 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கவாஜாவுடன் இணைந்த ஹேண்ட்ஸ்காம்ப் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துகளை கையாண்டார். 40-வது ஓவரில் கவாஜாவின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 87/4. முன்னணி வீரர்களை இழந்த ஆஸ்திரேலிய அணியின் வேகம் குறைந்தது. #AUSvIND #Ashwin
    அபு தாபி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் 33 இன்னிங்சில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் யாசிர் ஷா.
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய யாசிர் ஷா, 4-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    2-வது விக்கெட்டை வீழ்த்தும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்தார். யாசிர் ஷா 33 போட்டியிலேயே 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான கிரிம்மெட் 1936-ம் ஆண்டு 36 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப்படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை யாசிர் ஷா முறியடித்துள்ளார்.



    இந்திய அணியின் அஸ்வின் 37 போட்டியில் கைப்பற்றி 3-வது இடத்தையும், 38 போட்டியில் கைப்பற்றி லில்லீ, வக்கார் யூனிஸ் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்’ என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்தார். #Pujara #Ashwin #AustralianTest
    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி இருக்கும் இந்திய அணி ஒருமுறை கூட தொடரை வென்றது கிடையாது. பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இடம் பெறாததால் ஆஸ்திரேலியா பலவீனம் அடைந்துள்ளது. எனவே இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சரித்திரத்தை மாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பந்து வீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. 64 டெஸ்ட் போட்டியில் விளையாடி 336 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அஸ்வின், ஆஸ்திரேலிய மண்ணில் 6 டெஸ்ட் போட்டியில் ஆடி 21 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடிலெய்டில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அஸ்வின் புத்திசாலியான பந்து வீச்சாளர் என்று நான் எப்பொழுதும் சொல்வேன். அவர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை நன்றாக கணித்து செயல்படக்கூடியவர். அவர் தனது பந்து வீச்சு முறையில் நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறார். அது என்ன என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மாற்றங்கள் நிச்சயம் அவருக்கு உதவும். அவர் இந்த ஆண்டில் கவுண்டி போட்டியில் போதுமான அளவில் விளையாடி இருக்கிறார். அத்துடன் வெளிநாட்டு மண்ணில் பல்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. 2014-15-ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் விளையாடி உள்ளார். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவர் நல்ல நம்பிக்கையுடன் இருப்பார்.

    நமது அணியின் வேகப்பந்து வீச்சு உலகின் சிறந்த பந்து வீச்சுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஐ.பி.எல். போட்டியின் மூலம் நமது நாட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது உதவிகரமாக இருக்கிறது. நமது அணியில் ஆடும் லெவனில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர்கள் கூட நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 544 ரன்கள் விட்டுக்கொடுத்தது பெரிய விஷயம் இல்லை. அது டெஸ்ட் போட்டி அல்ல. எனவே அது குறித்து கவலைப்படவில்லை. நமது பவுலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். நமது பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த முறை இங்கு நடந்த தொடரில் விளையாடி இருக்கிறார்கள். எனவே இங்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பந்து வீச்சாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர்.

    பேட்டிங்கில் எங்களுக்கு சில இலக்குகள் உள்ளன. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இருப்பதாக நான் நினைக்கவில்லை. நமது அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் போதுமான அனுபவம் கொண்டவர்கள். கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் சிலரது பந்து வீச்சை நான் சந்தித்து இருக்கிறேன். எனவே அவர்களது பலம், பலவீனம் எனக்கு தெரியும். அந்த அனுபவம் இந்த போட்டி தொடரில் எனக்கு உதவும். ஆனால் இந்த போட்டி தொடர் புதியதாகும். எனவே கடந்த காலங்களில் நான் செய்தது பற்றி அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. நான் நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன். அதேநேரத்தில் எதிரணிக்கும் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

    தற்போது நாங்கள் இந்தியாவுக்கு வெளியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருப்பதால் எல்லா போட்டி தொடரிலும் வெற்றி பெற வேண்டும் என்று தான் எப்பொழுதும் நாங்கள் நினைக்கிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் நல்ல தொடக்கம் காண வேண்டும் என்றும் விரும்புகிறோம். இந்த போட்டி தொடரை நிச்சயம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். அதேநேரத்தில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் தான் எங்கள் கவனம் உள்ளது. ஒவ்வொரு போட்டியாக கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிரணியினரை கோபமூட்டும் வகையில் பேசுவது (சிலெட்ஜிங்) குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு எதிரணியினர் செய்யும் சீண்டல்களில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம். நன்றாக விளையாடி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு புஜாரா கூறினார்.
    ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது முதல் இன்னிங்சில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிட்டால், அதன்பின் ஆட்டம் நம் பக்கம் திரும்பிவிடும் என்கிறார் அஸ்வின். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த முறை இந்தியா தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சுழற்பந்து வீச்சில் அஸ்வின் முன்னணி வீரராக திகழ்வார். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியா மண்ணில் பந்து வீச்சிலும் சிறப்பான வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘பந்து வீசும்போது கூட இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் நாம் ஆட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை உறுதிய முக்கியமான விஷயமாகும். ஒரு பந்து வீச்சாளர் குறைவாகவே அல்லது அதிகமாகவே வைத்து விளையாடும்போது கேப்டனுக்கு உதவிகரமாக இருக்கும்.

    ஆஸ்திரேலியாவில் உங்களின் மூக்கு மேல் நோக்கி இருக்க வேண்டியது அவசியமானது. ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆட்டம் உங்கள் கையை விட்டு விலகிச் செல்லலாம். நாம் சிறந்த பேட்ஸ்மேன்களை வைத்துள்ளோம். அவர்களால் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.

    பந்து வீச்சாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அவர்களை ஆட்டமிழக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சில நேரங்கில் ஆட்டமிழக்கச் செய்யாமல் போகலாம். ஆனால், நீங்கள் அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா? சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா? என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எப்போதும் பிளாட் பிட்ச்-தான் தயார் செய்வார்கள். இது நமக்குத் தெரியும். இதுகுறித்து நாம் எப்போதும் குறை கூறியது கிடையாது. நாம் நம்முடைய திறமையை மீது நம்பிக்கை வைத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.



    பெரும்பாலும் முதல் இன்னிங்ஸ் ரன்கள் மிகப்பெரியதாக இருக்கும். ஆகவே, இந்த தொடர் முழுவதும் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற புரியதலுடன் செல்ல வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    பிட்ச் சற்று ஒத்துழைத்தால் 2-வது இன்னிங்சில என்னால் உதவிகள் செய்ய இயலும். நான் கடந்த முறை இங்கு வந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினே். அது எனக்கு திருப்புமுனையாக இருந்தது. அதேபோல் தற்போதும் இருக்கனும்’’ என்றார்.
    ரஞ்சி கோப்பை தொடருக்கான 3-வது போட்டியை ஸ்கிப் செய்யுங்கள் என்று இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. நாளைமறுநாள் (21-ந்தேதி) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்ல அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் வீரர்கள் யாரும் எந்தவிதத்திலும் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக இருந்து வருகிறது.

    தற்போது இந்தியாவின் முன்னணி முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி நாளை தொடங்குகிறது. ஏற்கனவே டி20 அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், டெஸ்ட் அணி 24-ந்தேதி புறப்படுகிறது. ரஞ்சி போட்டி 23-ந்தேதிதான் முடியும். இதனால் வீரர்களுக்கு ஓய்வு இருக்காது.

    ஆகவே, டெஸ்ட் போட்டியில் புத்துணர்ச்சியுடன் விளையாட ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யும்படி இஷாந்த் சர்மா, அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

    முகமது ஷமி மட்டும் ரஞ்சி டிராபியில் பந்து வீச ஸ்பெஷல் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் 15 ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் கூடுதல் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ரஞ்சி கோப்பையில் தமிழக வீரர் முகமது ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதேசமயம் மத்திய பிரதேசம் 393 ரன்கள் குவித்தது. #RanjiTrophy
    இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான ரஞ்சி டிராபி நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள மத்திய பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் திண்டுக்கல்லில் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற மத்திய பிரதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆரியமான் பிர்லா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அங்கித் டேன் 4 ரன்னில் வெளியேறினார்.

    3-வது வீரராக ராஜத் பதிடார் களம் இறங்கினார். இவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ராஜத் பதிடார் சதம் அடிக்க மத்திய பிரதேசம் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 சேர்த்திருந்தது. பதிடார் 110 ரன்னுடனும், எஸ் ஷர்மா ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஷர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பதிடார் இரட்டை சதத்தை நோக்கித் சென்றார். 142-வது ஓவரை தமிழகத்தின் எம் முகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டுபே 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    144-வது ஓவரை எம் முகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பதிடார் 196 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இரட்டை சதம் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த ஹிர்வானியை டக்அவுட்டில் வீழ்த்த, முகமது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.



    மத்திய பிரதேசம் அணியின் ஸ்கோர் 360 ரன்னாக இருக்கும்போது பதிடார் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மத்திய பிரதேசம் 157.4 ஓவரில் 393 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    தமிழக அணி சார்பில் எம் முகமது, அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது நாள் ஆட்டம் முடியும்போது தமிழ்நாடு 2 ஓவரில் ரன்ஏதும் எடுக்கவில்லை. நாளை 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
    தியோதர் டிராபியில் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘பி’ அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvINDB #DeodharTrophy
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி நேற்று தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பேட்டிங் தேர்வு செய்தது.

    மயாங்க் அகர்வால் (46), ஷ்ரேயாஸ் அய்யர் (41), ஹனுமா விஹாரி (87 அவுட் இல்லை), மனோஜ் திவாரி (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ‘பி’ 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ களம் இறங்கியது, கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் 54 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ 46.4 ஓவரில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியா ‘பி’ அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ‘பி’ சார்பில் மார்கண்டே 4 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இந்தியா ‘ஏ’, இந்தியா ‘சி’ நாளை மோதுகின்றன. இறுதிப் போட்டி அக்டோபர் 27-ந்தேதி சனிக்கிழமை நடக்கிறது.
    இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்டது. #INDvWI #UmeshYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அம்ப்ரிஸ் 20 ரன்னுடனும், ஹோல்டர் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சற்று நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில்தான் ஹோல்டரை 19 ரன்னிலும், அம்பிரிஸை 38 ரன்னிலும் ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்றினார். இந்த ஜோடி 30 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி பரிந்ததும் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. அதன்பின் வந்த வாரிகனை (7) அஸ்வினும், கேப்ரியலை (1) உமேஷ் யாதவும் வெளியேற்ற வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது.

    முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஓட்டுமொத்தமாக 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 72 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஜடோஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 76 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இருவரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் முன்னிலைப் பெற்றால் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும்.
    ஐதராபாத் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வேகப்பந்து வீச்சால் இந்தியா முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 75 ரன்னுடனும், ரிஷப் பந்த் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ரகானே 80 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 2 பந்துகளை சந்தித்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹோல்டர் இந்தியாவின் ரன்குவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



    அதன்பின் வந்த குல்தீப் யாதவ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 92 ரன்னில் வெளியேறினார். இந்தியா இன்று காலையில் 31 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 28 ரன்கள் சேர்க்க இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். ஷர்துல் தாகூர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா இன்று காலை 59 ரன்களுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. மேலும் ஒரு பெரிய வெற்றிக்கு இந்தியா ஆயத்தமாகிறது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (12-ந்தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எளிதில் மீண்டும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டை ‘டிரா’ செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றி விடும்.



    2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. அந்த சாதனை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும் நீடிக்கும். கடந்த டெஸ்டில் கேப்டன் விராட் கோலி, புதுமுக வீரர் பிரித்வி ஷா, ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதேபோல் புஜாரா, ரி‌ஷப் பந்த் ஆகியோரும் சாதித்தனர். பந்து வீச்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆடா விட்டால் ரகானே கேப்டனாக பணியாற்றுவார். கோலி இடத்தில் மயாங்க் அகர்வால் இடம் பெறலாம்.  ராஜ்கோட் டெஸ்டை போலவே இந்த போட்டி யிலும் இந்தியா தனது ஆதிக் கத்தை செலுத்தும்.



    வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அனுபவமற்ற அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடும் சவாலானது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் டெஸ்டை வென்றது கிடையாது.

    காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ஹோல்டர் இந்த டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேற்றம் அடைவது அவசியம். முதல் டெஸ்டில் ‘பாலோ-ஆன்’ ஆகி தோற்ற அந்த அணி இந்த டெஸ்டில் கடுமையாக போராடுவார்கள்.



    இரு அணிகளும் நாளை மோதுவது 96-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 95 போட்டியில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ராஜ்கோட்டில் வெஸ்ட் இண்டீஸை இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 181 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 196 ரன்னிலும் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    இந்த வெற்றிதான் இந்தியாவின் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகும். இதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.



    டாக்காவில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்களிலும், நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.
    ×