search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவனியாபுரம்"

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, வி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப் பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு,

    பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட விவரம் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு, அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 92 வீரர்கள் காயம் அடைந்தனர். #Jallikattu #AvaniyapuramJallikattu
    மதுரை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசாமி கோவில் ஆற்று மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியை காண கோவில் மைதானத்துக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே பார்வையாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்கும் வீரர்கள், காயம் அடையாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த காளைகளுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு போட்டியை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    பின்னர் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 567 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்குவதற்காக 739 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள். காளைகளை அவர்கள் ஆர்வத்துடன் அடக்கினார்கள்.

    போட்டியின் போது காளைகள் முட்டியதில் வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 48 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.

    சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரின் காளை முதல் பரிசான காரை தட்டிச் சென்றது.

    சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரபாகரனுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. பிரபாகரன் மொத்தம் 10 காளைகளை பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவில் மைதானத்தில் பொங்கல் தினமான நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மதுரை ஐகோர்ட்டு நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவின் வழிகாட்டுதலின்படி அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    மொத்தம் 641 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 476 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளுடன் மல்லுக்கட்டினர். ஜல்லிக்கட்டின் போது சீறிப்பாய்ந்து வந்த மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள், வீரர்கள், மாடு வளர்ப்போர் என 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் நடந்த போட்டிகளில் காளைகள் முட்டியதில் மொத்தம் 92 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

    திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்தனர்.

    பெரிய சூரியூரில் காளைகளை அடக்குவதற்காக களத்தில் நின்ற மாடுபிடி வீரர்களுக்கு இடையே அவ்வப்போது மோதலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. #Jallikattu #AvaniyapuramJallikattu
    அவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். #Jallikattu
    அவனியாபுரம்:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும்.

    பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பால மேட்டிலும், மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான நாளை (15-ந் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 வாரமாக காளைகள், வீரர்கள் பதிவு, வாடிவாசல் அமைக்கும் பணி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் மேற்பார்வையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் நடராஜன், நகர் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை காலை இவர்களுக்கு 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 570 காளைகள் களம் காண்கின்றன.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு கேலரி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மைதானத்தில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க தென்னை நார் போடும் பணி நடந்து வருகிறது.

    காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.

    இதனிடையே முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. இதற்காக பதிவு செய்த இளைஞர்கள் இன்று அவனியாபுரத்தில் தங்கள் ஆவணங்களை கொடுத்து இன்சூரன்ஸ் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்தது. #Jallikattu


    அவனியாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த முன்வர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது. #HCMaduraiBench #Jallikattu
    மதுரை:

    மதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜனவரி 15-ல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த நிலையில், மேலும் சிலர் வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

    அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வரும் நிலையில், கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை.

    யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.


    இந்த நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிக்கட்டினை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா, ஜல்லிக்கட்டு சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக போராட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்க விரும்பவில்லை.

    அவனியாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டு விழா கமிட்டியை ஐகோர்ட்டு நியமிக்கும்.

    இது தொடர்பான விதிமுறைகளை ஆலோசிக்க இன்னும் 1 மணி நேரத்தில் மதுரை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். #HCMaduraiBench #Jallikattu
    அவனியாபுரத்தில் மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஆண்டவர் மற்றும் போலீசார் ஈசனோடை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிலைமானில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். லாரியின் உரிமையாளரான பனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தனை விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×