search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    முகப்பேரில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 9 மாத குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசிப்பவர் உதயகுமார் (வயது 54). இவர், அத்திப்பட்டு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், தனது வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    தரை தளத்தில் உள்ள வீட்டில் நடராஜன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர், தனது மனைவி லட்சுமி (45) உடன் சேர்ந்து வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்வது வழக்கம்.

    சுமார் 25 ஆண்டுகள் ஆன அந்த வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    நடராஜன், லட்சுமி இருவரும் நேற்று வழக்கம்போல் வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மாலை 3 மணியளவில் திடீரென வீட்டின் மாடியில் உள்ள பால்கனி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த லட்சுமியின் தலையில் இடிபாடுகள் விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது. நடராஜனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த அவர்களின் 9 மாத பேத்தி லக்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பால்கனி இடிந்து விழுந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற முகப்பேர் 3-வது பிளாக் பகுதியை சேர்ந்த மகேஷ் (24) என்பவர் மீது இடிபாடுகள் விழுந்ததில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குழந்தை உள்பட 4 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். மேலும் நடராஜன், குழந்தை லக்சனா, மகேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள், இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் தொங்கியபடி இருந்த பால்கனி சுவர்களையும், இடிபாடுகளையும் அகற்றினர்.

    சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கவலையில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் உள்ளார். #Brazil #football #neymar
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், நெய்மர் தனது கால் காயம் மற்றும் உலகக் கோப்பை எதிர்பார்ப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், தனது காயம் மிக கடுமையானது என்றும், மூன்று மாதங்களாக விளையாடாமல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

    மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயம் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அறிவுரைகளுக்குப் பிறகு தற்போது மன அமைதி கொண்டுள்ளதாகவும், அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். #Brazil #football #neymar
    மன்னார்குடி அருகே அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழகண்டமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 15 பேர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவில் இணைந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை உண்டாக்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை விலகியவர்கள் பற்றி பரபரப்பாக அந்த பகுதியில் பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தெற்கு தெருவில் சிலர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எப்படி அ.தி.மு.க.வில் சேரலாம்? என்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வந்தனர்.

    இதனால் இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் சோடா பாட்டில், உருட்டுக்கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேல்முருகன் (30), கருணாகரன் (46), சுதாகர்(33), தினேஷ்குமார்(27), ஸ்டீபன் (23), லதா (30) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த முருகதாஸ் (30), இதயா (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 8 பேரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    ×