search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலதா"

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிக்கும் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. பிரேமலதா தொடங்கி வைத்தார். #DMDK
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது.

    அதன்படி கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் துணை செயலாளர்கள் சுதிஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    பொது தொகுதிக்கு ரூ. 20 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி சென்றனர். சுதீசும் விருப்ப மனுவை பிரேமலதாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    பின்னர் பிரேமலதா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2ம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 மாத சிகிச்சைக்கு பிறகு பிப்ரவரி மாதம் சென்னை திரும்புவார் என்று நிர்வாகிகள் கூறினார்கள். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று திரும்பினார். 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    2017 நவம்பர் இறுதியிலும் சிங்கப்பூர் சென்று இருந்தார். பின்னர் குரல் மோசமானதை அடுத்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

    சில நாட்களுக்கு முன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபகாரன் விஜயகாந்துக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறினார்.


    அதன்படி நேற்று மாலை விஜயகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவரது மனைவியும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதாவும் உடன் சென்றார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் இருவரும் திரும்புவார்கள் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூறினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு வருவதையொட்டி விஜயகாந்த் மீண்டும் உடல் நலத்துடன் வந்து புத்துணர்வுடன் தமிழ்நாடு முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் அவர் உடல்நலம் தேறி வந்த பிறகு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.

    விஜயகாந்தும் பிரேமலதாவும் திரும்பும் வரையில் அவர்களது மகன் விஜய பிரபாகரன் கட்சி பணிகளை கவனிப்பார். #DMDK #Vijayakanth
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க உள்ளதாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth
    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் துறவிக்காடு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட் பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் 1000 நபர்களுக்கு நிவாரண பொருள்களை நேற்று மாலை வழங்கினார்.

    துறவிக்காட்டில் நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து தரவேண்டும்.

    தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி என்பது இதுவரை எந்த ஒரு மக்களுக்கும் வந்து சேரவில்லை. புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை மத்திய அரசு பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து, தமிழக அரசுக்கு உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும். அதற்கு முன்னதாக, தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி முதல் கட்ட நிவாரண உதவியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

    ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இதுவரை மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை தொண்டு நிறுவனங்கள்தான் உதவிகள் செய்து வருகின்றன. தே.மு.தி.க. சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை 4 மாவட்டங்களிலும் வழங்கி வருகிறோம்.

    அடுத்தகட்டமாக 1 லட்சம் தென்னங்கன்றுகளை வாங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். இதற்காக அரசு மானிய விலையில் தரமான தென்னங்கன்றுகளை வழங்கவேண்டும். மேலும் தென்னைக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை என்பது விழுந்த மரத்தை அகற்றவே போதாது. எனவே குறைந்தபட்சமாக ஒரு தென்னைக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth

    சர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார். #Sarkar #Vijay #PremalathaVijayakanth
    வேலூர்:

    வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சர்கார் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை பார்க்காமல் அதை பற்றி கருத்து கூறுவது தவறாகும். சர்கார் படம் குறித்த பிரச்சினையை நான் கவனித்து வருகிறேன். சினிமாவை, சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடுவது வேதனை அளிக்கக்கூடியது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்துக்கு தடை விதிக்க முடியாது. படம் வெளியே வந்து விட்ட பின் மீண்டும் காட்சிகளை நீக்குவது என்பது தணிக்கை குழு எதற்கு?, தணிக்கை செய்தவர்கள் தவறாக தணிக்கை செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது.

    திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு படத்தை சர்ச்சைக்குள் கொண்டு சென்று படத்தை ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் அண்மை காலமாக விஜய் நடிக்கும் படங்களும் அவ்வாறு தான் வருகிறது. இனிவரும் காலங்களில் யோசித்து செய்ய வேண்டும்.

    விஜயகாந்த் தலைமையில் தான் இயக்குனர் முருகதாசுக்கு திருமணம் நடந்தது. விஜய் நடித்து முருகதாஸ் இயக்கிய படத்துக்கு சர்ச்சை வந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும். தணிக்கை செய்த படத்துக்கு அ.தி.மு.க. தடை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே குளிர்விட்டு போன மாதிரி தான் இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா?, நடனம் ஆடினார்களா? அல்லது தீபாவளிக்கு வீடு, வீடாக சென்று இனிப்பு வழங்கினார்களா? என்றால் இல்லை.

    டெங்கு, பன்றிக்காய்ச்சல், வேலையின்மை, குடிநீர் பிரச்சினை போன்ற அதிக அளவு மக்கள் பிரச்சினை இருக்கும்போது அதை எல்லாம் தீர்க்க வேண்டிய அமைச்சர்கள் ஒரு திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்று பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓட்டு போட்டு வெற்றிபெற செய்த மக்களுக்கு அமைச்சர்கள் நல்லது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Sarkar #Vijay #PremalathaVijayakanth


    தமிழகத்தில் நடைபெற்று வரும் அவல ஆட்சியை கவிழ்க்க முக ஸ்டாலின் முயற்சி செய்யவில்லை என்று தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். #premalatha #mkstalin #tngovt

    சென்னை:

    தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக் கூட்டத்தில், அக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவையும் எதிர்க்கட்சியான தி.மு.கவையும் கடுமையாகச் சாடினார். அவரது பேச்சு வருமாறு:-

    தமிழகத்தில் நிலையில்லாத அவல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியின் அவலத்தை தட்டிக்கேட்கும் இடத்தில் தி.மு.க. இருக்கிறது 98 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள ஸ்டாலின் என்ன ஆக்கபூர்வமான பணிகளைச் செய்தார்? எதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் தொடர வைக்கிறார் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வி.

    20 தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உண்மையிலேயே, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொறுப்பு இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதைவிட்டுவிட்டு நாங்கள் பின்புற வழியாக வந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை என சப்பைக் காரணத்தைக் கூறுகிறார்.


    உடனடியாக இந்த ஆட்சியை ஸ்டாலின் அகற்ற வேண்டும். பொறுப்பில்லாத ஆட்சி நடந்து கொண்டிருப்பதால்தான் தமிழகம் தற்போது அவலநிலையில் உள்ளது. குட்கா ஊழல், சி.பி.ஐ ரெய்டு என ஊழல் அரசாங்கம் நடைபெற்று வருகிறது.

    வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லையே என்று கேட்டால், கஜானாவில் காசு இல்லை என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு அமைச்சர் வீட்டு கஜானாவிலும் கோடிகள் புரளுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார். #premalatha #mkstalin #tngovt

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்னும் 15 நாளில் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.#Vijayakanth #PremalathaVijayakanth #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகத்தில் இன்று பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது பிரேமலதா பேசியதாவது:-

    இப்போது எல்லோரும் ‘மீடூ’ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் ‘மீடூ’ எப்படி வரும்.

    தே.மு.தி.க.வை குடும்ப கட்சி என்று சொல்வார்களோ? என்று யாரும் நினைக்க வேண்டாம். அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை.



    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அவர் வெளிநாடு செல்வார்.

    அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சி தே.மு.தி.க. தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார். #Vijayakanth #PremalathaVijayakanth  #DMDK
     
    தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் நடைபெற்றது, இதில் தேமுதிக பொருளாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK

    சென்னை:

    கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா, மாநில நிர்வாகிகள் மோகன்ராஜ், பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவேன், மாவட்ட செயலாளர்கள் தினகர், அனகை முருகேசன், மதிவாணன். பிரபு, ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சிலரது பொறுப்புகளை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்த டாக்டர் இளங்கோவன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்தும், அவைத் தலைவராக இருந்து வந்த அழகாபுரம் மோகன்ராஜ் கொள்கைபரப்பு செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

    புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பா.ஜ.க., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரேமலதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பிரேம லதாவுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    பிரேமலதா இதுவரை கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் கட்சி பொதுக் கூட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK

    இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ பிரேமலதா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சிபிஎஸ்சி மாணவி 12 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மிகவும் மோசமான இந்த நிகழ்வு குறித்து பலதரப்பட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அரியானா மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி அளித்தனர். அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சில பா.ஜ.க.வினர் பேசும் கருத்துக்கள் சர்ச்சைக்கு பெயர் போனவை என்றாலும், பெண் வன்கொடுமை குறித்து ஒரு பெண் எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்து தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்று தே.மு.தி.க. மகளிரணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘வரலாற்றில் மட்டுமே படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஒரு அவமான சின்னம் தமிழ்நாட்டின் கருப்பு நாள் மே.22.

    ஒரு மானை சுட்டால் கூட தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் மனிதர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. முடக்க வேண்டியது இணைய தளங்களை அல்ல. ஆட்சியை தான்.

    தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தால் எந்த மாற்றமும் வராது. மாற்ற வேண்டியது இந்த அரசை தான். 100 நாள் அறவழியில் மக்கள் போராடினார்கள். பேரணிக்கு ஏன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது திட்டமிட்ட படுகொலை. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் 50 ஆயிரம் மக்கள் கூடும் பேரணியில் பாதுகாப்பு பணிக்கு ஏன் அதிக அளவில் போலீசார் போடவில்லை.

    உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் என வழங்குகிறது. ஒரு உயிரின் மதிப்பு ரூ.10 லட்சம் தானா? இந்த அரசு எதை செய்தாலும் காசு கொடுத்து வாயை அடைக்கலாம் என கருதுகிறது.

    மக்களுக்கு பாதுகாப்பு தராமல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் அதன் முதலாளிக்கும் அரசு பாதுகாப்பு அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒரு நாளைக்கு 4 முறைபேட்டி அளிக்கின்றனர். தூத்துக்குடி மக்களை நேரடியாக சந்திக்கவில்லை.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏன் மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. படுகொலைக்கு பின்னால் பணம் விளையாடி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று தூத்துக்குடியில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி பிரேமலதா கூறினார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி பிரேமலதா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூட்டினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துவருகிறோம். தற்போது அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் காட்டு மிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #SterliteProtest
    ×