என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 102422"
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுகவின் சார்பில் என் பயணத்தை இன்று 3வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பகுதிக்கும் நான் செல்லும் போதும் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய அளவுக்கு மக்கள் திரண்டு ஆதரவு அளித்து வருகின்றீர்கள். இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.
சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை. இந்த கோட்டையிலே இவ்வளவு மக்கள் ஆதரவு தர மிக முக்கியமான காரணம் மறைந்த வீரபாண்டியார் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு இதே சேலத்தில் கலைஞர் கருணாநிதியின் முத்து விழா மாநாட்டினை வீரபாண்டியார் முன்னின்று நடத்தினார். தோல்வியே அறியாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற சின்னம் தான் உதய சூரியன். திமுக சார்பில் யார் வேட்பாளர் என்றாலும் அவர் கலைஞர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் நமது திமுக ஆட்சியிலே வேலை பெற முடிந்தது. தன்னம்பிக்கை உருவானது. கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. கோட்டை மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் அபீத் தெருவில் தான் தொடக்க காலத்தில் கழக தலைவர் ஒன்றரை ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.
இந்த திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் சேலம் தான். சுயமரியாதை இயக்கம், நீதி கழகம் இணைத்து 1944 ம் ஆண்டு திராவிட கழகம் என மாற்றப்பட்டது இந்த சேலத்தில் தான்.
விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து, மாற்று திறனாளிகளை மேம்படுத்தியது, ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறப்பு, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாறியது என பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.
இந்த சேவைகள் தொடர, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இங்கு நிற்கும், எஸ். ஆர். பார்த்திபனை வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி விட்டன.
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார். வழக்கமாக எந்த தேர்தல் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குவார். வழக்கம் போல இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி கருமந்துறைக்கு செல்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் பேசுகிறார்.
பின்னர் வாழப்பாடியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாலையில் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவாளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்ட மன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami
சேலம்:
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மேற்கு தாசில்தார் வள்ளி தலைமையிலான பறக்கும் படையினர் சேலம் திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காரில் வந்த ஈரோட்டை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மருத்துவ மனையில சேர்த்துள்ள தாயின் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து நண்பரிடம் அந்த பணத்தை வாங்கி வந்ததாக கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதுகுறித்து தாசில்தார் வள்ளி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணிக்கு தகவல் தெரிவித்தார். உடனே கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் போதிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். பணத்தை கொண்டு வந்தவர் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.
இதேபோல் வீரபாண்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.73 ஆயிரம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 59) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பவர்லூம் வைத்திருப்பதாகவும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் ஆவணங்கள் ஏதும்இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 33 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வியாபாரிகள் தொழில் அதிபர்கள் அத்தியாவசிய தேவைக்குகூட பணத்தை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வெயில் வாட்டி வதைத்தது. உடலில் நெருப்பை அள்ளி போட்டதை போல வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு நேரம் கடும் புழுக்கமாக உள்ளது.
இதைபோல் இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்விசிறியை பயன்படுத்தினால் அனல் காற்றாக வீசுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பலர் குடை பிடித்தபடியும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் துப்பட்டாவில் தலை மற்றும் முகத்தை மூடியபடியும் சென்றனர்.
பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை, இளநீர் கடை, மோர் கடை, கம்பங்கூழ், கேழ்வரகு கடை, சர்பத் கடை போன்ற கடைகளை நாடி வருகின்றனர்.
இதனால் ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக இருக்கும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை களை கட்டி வருகிறது.
நுங்குகள், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலை ஓரமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.
சேலம்-கோவை, சேலம்-சென்னை, சேலம்-பெங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலையோரமாக இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவது கிடையாது.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் சேலம் - நாமக்கல் மாவட்டங்கள் உள்பட சில பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கு வியாபாரிகள் வந்துவிட்டனர். இதனால் பொதுமக்களும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதும் கிடையாது, கொடுப்பதும் கிடையாது.
தற்போது சேலத்தில் 5 ரூபாய் நோட்டுக்கும் சிக்கல் வந்துவிட்டது. இந்த ரூபாய் நோட்டை வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.
இதனால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. 5 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பது ஏன்? என்று வியாபாரிகளிடம் கேள்வி கேட்டால் இந்த ரூபாய் செல்லாது, எனவே நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெளியூரில் இருந்து சேலத்துக்கு வரும் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். எல்லா ஊரிலும் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டு செல்லும்போது இங்கு மட்டும் ஏன் செல்லாது என்று அவர்கள் பஸ் கண்டக்டர் மற்றும் ஓட்டல்களில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தினம் இந்த காட்சிகளை பார்க்க முடிகிறது.
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, சேலத்துக்கு மட்டும் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டை வாங்கக்கூடாது என்று தனி சட்டமா இருக்கிறது? யாரோ விஷமிகள் இதுபோன்ற செய்தியை பரப்பி பொதுமக்களை குழப்பி வருகின்றனர்.
இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வியாபாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 10 ரூபாய் நாணயம் , 5 ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசு எதுவும் அறிவிக்கவில்லை. இதை வியாபாரிகள் வாங்க மறுப்பது கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சேலம்:
பெங்களூருவில் இருந்து நேற்று இரவு சேலம் மாவட்டம் வழியாக பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. படுக்கை வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் 28 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ்சை சேலம் மாவட்டம் தாரமங்கலம், நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு பஸ் சேலம் கொண்டலாம் பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி தலைகீழாக பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் பயத்தால் அலறினார்கள்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த திருப்பூர், ஜம் ஜம் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் தனசேகரன் (வயது 42) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் சரவணன், துரைசாமி, அஸ்வின், அபினாஸ், திஸ்முகமது உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
பஸ் இடிபாடுகளில் சிக்கியவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சேர்ந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு முகம், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு இருந்தது. வலியால் அய்யோ, அம்மா என கதறியபடி இருந்தனர். பயணிகள் சிலர் பதட்டத்துடனே இருந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 4 பேர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் 5 கிரேன்கள் மூலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் பஸ்சின் மேற்கூரையில் அதிக பொருட்கள் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
காயம் அடைந்த பயணிகள் கூறுகையில், நாங்கள் எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டோம். கடவுளுக்கு நன்றி கண்ணீர் மல்க என்றனர்.
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தை 5 கிரேன்களைக் கொண்டு தூக்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் புதிய எஸ்.பி. தீபா கானிகேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மேலும் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் சேலத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இதன் அருகே எஸ்.எஸ். பழக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் நேற்று வியாபாரத்தை முடித்த ஊழியர்கள் வழக்கம் போல கடையை பூட்டி சென்றனர்.
இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த கடை ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற கடை உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கல்லாவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்ற விவரத்தை அவர் சொல்ல மறுத்து விட்டார். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் துணிகர கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்தில் 4-வது நாளான நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் நேரு கலையரங்கில் அடைத்து வைத்தனர்.
மாலை 6 மணிக்கு மேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற ஊழியர்கள் தங்களையும் கைது செய்யுமாறு கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஆசிரியர்களின் உறவினர்களும் கலையரங்கம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் இன்று அதிகாலை 1 மணியளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான கோவிந்தன், சிங்கராயன், உதயகுமார், பாரி, ராஜேந்திரன், சந்திரசேகர், முத்துக்குமாரன், சுரேஷ், ராஜேஷ், ஸ்ரீராம், லெனின், லோகு உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர்களை சேலம் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவாரா, அல்லது விடுவிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல நாமக்கல்லில் பூங்கா சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் 72 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாஜிஸ்திரேட் வருகிற 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #JactoGeo
சேலம்:
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவர் நேற்று அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தொளசம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மாரியப்பன் (56) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்தார்.
இது குறித்து பழனிசாமி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர். மாரியப்பன் மீது ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்