search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரத்தநாடு"

    ஒரத்தநாடு அருகே ஓட்டல் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் திருநல்லூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ராமராஜ் (வயது24). இவர் கோயமுத்தூரில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தற்போது ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை ராமராஜ் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பாப்பாநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். சங்கரன்குடிகாடு பகுதி தரைப் பாலத்தில் சென்ற போது, வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டான திருநல்லூர் மேலத்தெரு கண்ணப்பன்(40) மற்றும் அவரது கார் டிரைவர் சங்கர் ஆகியோர் அங்கு மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ராமராஜை கைகாட்டி அழைத்துள்ளனர். ஆனால் இதை கவனிக்காமல் அவரும் கைகாட்டி விட்டு சென்று விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கண்ணப்பன், சங்கர் ஆகிய இருவரும் காரை எடுத்து சென்று ராமராஜை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தடுத்த ராம ராஜிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ராமராஜை அவரது நண்பர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்கு சென்று ராமராஜிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரத்தநாடு அருகே அய்யனார்கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரில் ஏரிக்கரை கூத்தபெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறும். இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைப் பணத்தை திருவிழாவின்போது திறந்து எடுப்பது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார். நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த ரூபாய் ஒருலட்சத்தை டவுசர் பொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடக்கூரில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வனிதா இரவு வீட்டில் படுத்திருந்தபோது மர்மநபர் ஜன்னல் வழியாக அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்றுவிட்டார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசி மற்றொரு வீட்டிலும், நர்சிடமும் டவுசர் கொள்ளையர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து நகைகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரத்தநாடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவரது மனைவி ரேகா (30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சக்திவேல், அடிக்கடி மனைவி ரேகாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேகா, நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ரேகாவின் தாய் வேதவள்ளி பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கும்பகோணம்:

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் (வயது 49) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் பூ வியாபாரிக்கு சொந்தமானது என்றும் அவரிடம் தான் ஊழியராக வேலை பார்த்து வருவதாக சங்கர் தெரிவித்தார். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்படி நேற்று ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஒரத்தநாடு துணை தாசில்தார் (தேர்தல்) செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் அருகே தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாட்டாத்தி கொல்லையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    ஒரத்தநாட்டில் பெட்டி கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு புதூர்கிராமம் ஆர்.வி.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ராஜாங்கம். மாற்றுதிறனாளியான இவர் ஒரத்தநாடு தேர்வுநிலை பேரூராட்சி அருகே சாலையோரம் கடை வைத்து வலையில் மற்றும் பெண்கள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் முடிந்து மாலை 6 மணிக்கு கடையை பூட்டி சென்று விடுவார்.

    அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் 6 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த ராஜாங்கம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரத்தநாடு அருகே கோவில் கதவை உடைத்து துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலை கொள்ளை போய் உள்ளதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று. கும்பாபிஷேக விழா நடந்தது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கோவிலில் இருந்த துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையை திருடினர். மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் கோவிலில் இருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த கிராம மக்கள், கோவில் கதவு உடைக்கப்பட்டு, அம்மன் சிலை கொள்ளை போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளை போன அம்மன் சிலை 3 அடி உயரம் கொண்டதாகும். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே கோவில் விநாயகர்சிலை கொள்ளை போய் உள்ளது. இந்நிலையில் தற்போது துர்க்கை அம்மன் ஐம்பொன் சிலையும் கொள்ளை போய் உள்ளதால், கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பேய்கரம்பன்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு தனது மாடுகளை ஓட்டி சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அப்பகுதியில் புயலால் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில் ஆறுமுகம் எப்படி மின்சாரம் தாக்கி இறந்தார் என்று மின்வாரியத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரத்தநாடு அருகே நிழற்குடை மீது வேன் மோதி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    மன்னார்குடி ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவர் கோழி ஏற்றி செல்லும் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஒரத்தநாட்டில் கோழி ஏற்றுவதற்காக மன்னார்குடியில் இருந்து புறப்பட்டார். அப்போது ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமம் கீழரோடு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி சென்ற லோடு வேன் நிலை தடுமாறி அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதியது.

    இதில் சசிகுமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் லோடு ஆட்டோவின் முன்பகுதியில் சேதமானது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்னம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி தேவ சுந்தரி (வயது 50). இவரது மகள், தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தேவசுந்தரி, 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வேலை முடிந்து அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதனால் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த 6 பவுன் நகை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1¼ லட்சம் ஆகும்.

    பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, வீட்டின் மேல் உள்ள ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுபற்றி அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை மற்றும் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெசலிங்கப்பா. இவரது மனைவி திலகா.

    இந்த நிலையில் நேற்று திலகா ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். அங்கு கொலுசு வாங்கி விட்டு ஒரத்தநாடு- மன்னார்குடி டவுன் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் சாவடி பஸ் நிறுத்தத்தில் திலகா பஸ்சை விட்டு இறங்கிய போது தான் கொலுசு மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் வைத்திருந்த கைபையை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்த கூறினர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், திலகாவிடம் நகை- பணத்தை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து அந்த 3 பெண்களையும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் 3 பெண்களும் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான 3 பெண்களும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும் பிடிபட்ட 3 பெண்களும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ஜெயராணி தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் மாடு மேய்க்க ஜெயராணி சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோப்பில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஜெயராணி பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த மகன் சக்திவேல் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த ஜெயராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் 2 தங்க சங்கிலியை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவை அப்படியே இருந்தது.

    எனவே கொள்ளை சம்பவத்தில் ஜெயராணி கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தோடு, மூக்குத்தி திருட்டு போகாமல் இருந்ததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் முதற்கட்டமாக அவரது மகன் சக்திவேலிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதில் ஜெயராணி மாடு மேய்க்க செல்லும் போது கழுத்தில் 10 பவுன் செயின் போட்டு சென்றாரா? என்று விசாரிக்கப்பட்டது.

    மேலும் ஜெயராணியின் அவரது உறவினர் மற்றும் ஊர் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×