search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ்புக்"

    ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொது தேர்தலையொட்டி போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. #Facebook



    இந்திய பொது தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 

    போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் ஊடகம் மற்றும் தனியார் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதுதவிர பயனர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது வேட்பாளர்களின் 20 விநாடி வீடியோக்களை பார்க்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் கேன்டிடேட் கனெக்ட் எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.



    இத்துடன் பயனர்கள் தேர்தலில் வாக்கு செலுத்தியதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள ஷேர் யு வோட்டெட் (Share You Voted) எனும் அம்சத்தை துவங்கியிருக்கிறது. பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் கூகுள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கவும், பயனர் விவரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.

    இந்திய அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வாக்காளர்களை கவர முயற்சித்து வருகின்றனர். இந்தியாவில் பொது தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் நடைபெற இருக்கிறது. 

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய பொது தேர்தலுக்கென கேன்டிடேட் கனெக்ட் மற்றும் ஷேர் யு வோட்டெட் என இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் மூலம் பயனர்கள் தங்களது வேட்பாளர்கள் பற்றி அறிந்து கொள்ளவும், வாக்கு செலுத்தியதை மற்றவர்களுக்கு தெரிவித்து மகிழ முடியும்.
    வாட்ஸ்அப் செயலியின் ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்திற்கு இரண்டு பெரிய அப்டேட்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் இன்-ஆப் பிரவுசிங் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இரு அம்சங்களும் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிய பயனர்களுக்கு வழி செய்யும். 

    இந்நிலையில், ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியில் ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சம் கொண்டு போலி தகவல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாட்ஸ்அப் இரண்டு பெரிய அம்சங்களை செயலியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இரு அம்சங்களும் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இருஅம்சங்களும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    இந்த பகுதியை இயக்க பயனர் அனுப்பிய குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பின் இன்ஃபோ ஆப்ஷனை குறிக்கும் (i) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது சாட் விண்டோவின் மேல் காணப்படும். இந்த அம்சம் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய ஃபார்வேர்டெட் மெசேஞ்களில் மட்டுமே வேலைசெய்யும். 

    உங்களுக்கு வரும் ஃபார்வேர்டெட் மெசேஞ்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதே குறுந்தகவலை நீங்கள் உங்களது காண்டாக்ட்களுக்கு ஃபார்வேர்டு செய்து மெசேஞ் இன்ஃபோ பகுதியில் அது எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஃபிரீக்வென்ட்லி ஃபார்வேர்டெட் அம்சத்தில், ஒருவர் குறுந்தகவலை நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.  

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் அடுத்த பீட்டா அப்டேட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா 2.19.80 ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஓ.எஸ். தளங்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள நிறுவனங்கள் மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. #Socialmedia



    சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவை தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் உத்தரவுகளை பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளன. 

    அதன்படி தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் சமூக வலைதளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கக்கோரும் பதிவுகளை மூன்று மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் நடைபெற்ற சந்திப்பில் கையெழுத்தானது.



    இந்தியாவில் பொது தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் துவங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான தேர்தல் பரப்புரைகளுக்கும் தடை அமலாகியிருக்கும். 

    தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் வாட்ஸ்அப், கூகுள், ஷேர்சாட் மற்றும் டிக்டாக் போன்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

    சமூக வலைதளங்கள் அனைத்தும் சின்கா கமிட்டி பரிந்துரையின் படி சட்டத்திற்கு புறம்பானதாக மேற்கோள் காட்டப்படும் பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் நீக்குவதாக உறுதியளித்துள்ளன. சட்டப்பிரிவு 126 இன் படி தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்வது குற்றமாகும்.
    ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடி மறைக்க ஃபேஸ்புக் முயற்சித்ததா? என்ற கோணத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதற்கென ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்க தனி ஊழியர்களை நியமித்ததா என ஃபெடரல் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை முழுமையாக மறைக்க முயற்சித்ததாக ஃபெடரல் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் தொடர்புடைய கிரிஸ்டோபர் வைல் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என ஃபெடரல் அதிகாரிகள் கருதுகின்றனர். 



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் கிட்டத்தட்ட 8.7 கோடி பேரின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் கைமாறியைது தனக்கு தெரியாது என்றவாக்கில் அந்நிறுவனம் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்ட பயனர் விவரங்களை கொண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளித்து, விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது பல்வேறு அரசு துறைகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீதான விசாரணைக்கு ஃபேஸ்புக் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை தெரிவித்து வருகிறது.
    ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் சில மணி நேரங்கள் முடங்கியதை தொடர்ந்து டெலிகிராம் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. #Telegram



    ஃபேஸ்புக் சேவை முடங்கியது டெலிகிராமிற்கு நல்லதாக அமைந்தது. ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் உலகம் முழுக்க முடங்கியதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் டெலிகிராம் பயனர் எண்ணிக்கை முப்பது லட்சம் வரை அதிகரித்தது. 

    பிரிட்டனை சேர்ந்த டெலிகிராம் செயலியை கடந்த ஆண்டு வெளியான நிலவரப்படி உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் மட்டுமே டெலிகிராம் பயனர் எண்ணிக்கை அதிகரித்தது என கூற முடியாது.

    எனினும், 24 மணி நேரத்தில் இத்தனை லட்சம் பயனர்கள் டெலிகிராமில் இணைந்திருப்பது எதேர்ச்சியான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. புதிய பயனர்கள் சேர்ந்திருப்பதை டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்திருக்கிறார். 



    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் முப்பது லட்சம் புதிய பயனர்கள் டெலிகிராம் சேவையில் இணைந்திருக்கின்றனர். நாங்கள் உண்மையாகவே தனியுரிமை மற்றும் அனைருக்கும் வரம்பற்ற முறையில் இடமளிக்கிறோம் என துரோவ் தனது டெலிகிராமில் பதிவிட்டிருக்கிறார். 

    டெலிகிராம் சேவையும் வாட்ஸ்அப் போன்று முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட இலவச மெசேஜிங் சேவையாகும். இதில் வாய்ஸ் கால்களுக்கு முழுமையான என்க்ரிப்ஷன் மற்றும் ரகசிய சாட்களுக்கு முழுமையான என்க்ரிப்ஷன் வசதி தனியே வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் போன்று டெலிகிராமில் அனைத்து சாட்களும் என்க்ரிப்ட் செய்யப்படுவதில்லை.

    டெலிகிராம் செயலிகள் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., மேக் ஓ.எஸ்., லினக்ஸ், விண்டோஸ் போன் மற்றும் விண்டோஸ் என்.டி. உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை டெலிகிராம் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் சேவை முடங்கியதற்கான காரணம் அது கிடையாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook



    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்று்ம மெசஞ்சர் சேவை நேற்றிரவு சில மணி நேரங்களுக்கு முடங்கியது. இந்நிலையில், சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

    உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் குறுந்தகவல் அனுப்புவதில் பயனர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதே போன்று ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவைக்கும் தடங்கல் ஏற்பட்டது. பயனர்கள் சேவை முடக்கம் பற்றி வலைதளங்களில் தெரிவிக்க துவங்கினர்.



    இதற்கு ஃபேஸ்புக் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் சிலவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த பிரச்சனையை மிக விரைவில் சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் சேவை முடங்கியதிற்கு டிஸ்ட்ரிபியூட்டெட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பிரச்சனையை விரைவில் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என எண்ணியவர்களுக்காக ஃபேஸ்புக் தகவல் வழங்கியிருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகள் சீராக வேலை செய்தாலும், போஸ்ட்களை அப்லோடு செய்வதில் சில பயனர்கள் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். பிரபல சமூக வலைதளங்களின் சேவை முடங்கியதை தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர்.
    ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் பல்வேறு செயலிகள் பயனரின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Apps



    தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு செயலிகள் பயனரின் விவரங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களின் விவரங்களையும் ஃபேஸ்புக் பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனரின் போன் மற்றும் இணைய நடவடிக்கைகளை சேகரிக்க வழி செய்யும் செயலியை இன்ஸ்டால் செய்ய ஃபேஸ்புக் இளம் பயனர்களுக்கு பணம் கொடுத்திருந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ்புக்கிற்கு வழங்கியிருந்த சிறப்பு அனுமதிகளில் சிலவற்றை திரும்ப பெற்றது. 

    வெளியீட்டு முன் பணியாளர்களின் மத்தியல் சோதனை செய்யப்பட வேண்டிய அம்சம் மூலம் செயலியை இடையூறு செய்து ஃபேஸ்புக் ஆப்பிள் நிறுவன விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது. ஆப்பிள் இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு பயனர் விவரங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



    இந்த செயலிகள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் வளர்ச்சி முணையத்தின் (எஸ்.டி.கே.) வழியே பயனர் விவரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த முணையம் செயலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கின் எஸ்.டி.கே.வில் ஆப் டெவலப்பர்களை பயனர் டிரெண்ட்களை அறிந்து கொள்ள உதவுகிறது. 

    இவைதவிர ஃபேஸ்புக்கிற்கு மிகமுக்கிய விவரங்களை வழங்கிய செயலிகள் அனைத்தும் கஸ்டம் ஆப் ஈவென்ட்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. 

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் மீது விசாரணை செய்ய நியூ யார்க் நகர நிதி துறைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவன சேவையில் பேக்கிரவுண்டு லொகேஷன் டிராக்கிங்கை பிளாக் செய்வதற்கென புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறது. சர்ச்சைகளில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவிக்கும் ஃபேஸ்புக் தற்சமயம் புதிய செட்டிங்களை தனது சேவையில் இணைத்திருக்கிறது. 

    முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய செட்டிங்களை கொண்டு பயனர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க முடியும். செட்டிங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள், பயனர் செயலியை பயன்படுத்தாத சமயத்தில் இரண்டடுக்கு முறையில் உங்களது இருப்பிட விவரங்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும். 



    முதலாவதாக பயனர் தனது இருப்பிட விவரங்களை இயக்க ஃபேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் இரண்டாவதாக பின்னணியில் தகவல்களை சேகரிக்கலாமா என ஃபேஸ்புக் பயனரிடம் கேட்கும். சேவையை பயன்படுத்தாத போது ஏன் பின்னணி தகவல்களை சேகரிக்க வேண்டும் என்கிறீர்களா?

    இவ்வாறு தகவல்களை சேகரிப்பதன் மூலம் அருகாமையில் இருக்கும் நண்பர்கள், செய்ய வேண்டியதற்கான பரிந்துரைகள் மற்றும் குறிப்பாக பனர்களின் அருகாமையில் இருப்பவர் பற்றி பரிந்துரைக்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு, ஆப்பிள் பின்னணியில் தகவல்களை சேகரிக்கும் வசதியை வழங்கியிருக்கிறது. இதனால் ஃபேஸ்புக் இதற்கென தனியே அப்டேட் வழங்கி வேண்டிய அவசியம் எழவில்லை. எனினும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களின் லொகேஷன் செட்டிங்களை மாற்ற வேண்டுமா என கேட்கப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புதிய செயலி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    சமூக வலைதளத்தை மேலும் வளர்க்கவும், பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஃபேஸ்புக் புதிய செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. லொல் (LOL) என்ற பெயரில் உருவாகி வந்த செயலியில் பயனரை மகிழ்விக்கும் நோக்கில் மீம், ஜிஃப் போன்றவை இடம்பெற்றிருக்கும். 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் லொல் செயலியை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குறைந்தளவு பயனர்களுடன் சோதனை முறையில் துவங்கப்பட்ட லொல் திட்டம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை.

    லொல் செயலியை ஃபேஸ்புக் 100 மாணவர்களுடன் இயக்கி வந்தது, பின் செயலியில் ஃபேஸ்புக் ஊழியர்களில் 100 இளைஞர்களை சேர்த்துக் கொண்டது. ஃபேஸ்புக் இனி மெசஞ்சர் கிட்ஸ் செயலியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மெசஞ்சர் கிட்ஸ் செயலி 13 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.



    ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட்ஸ் செயலி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை குழந்தைகள் தங்களது பெற்றோர் அனுமதிக்கும் நண்பர்களுடன் உரையாட முடியும். எனினும், இந்த செயலியை பயன்படுத்துவதால் குழந்தைகளின் உறக்க முறை மற்றும் சுயமரியாதையை குறைக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    “தளத்தில் வரும் தரவுகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், குழந்தைகளுக்கென பிரத்யேக சமூக வலைதளம் துவங்குவது நல்லதல்ல. சர்வதேச அளவில் குழந்தைகள் ஸ்கிரீனினை பார்க்கும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஃபேஸ்புக் அவர்களை ஸ்கிரீனினை பயன்படுத்த செய்கிறது,” என சமூக வலைதள வல்லுநரான அனூப் மிஸ்ரா தெரிவித்தார்.
    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. #Facebook



    இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரங்களில் விசேஷ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி ஃபேஸ்புக்கில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களை யார் வழங்கி இருக்கின்றனர், அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்துள்ளனர் போன்ற விவரங்களை அனைவரும் பார்க்க முடியும்.

    ஒவ்வொரு விளம்பரத்திலும் விளம்பரதாரர்கள் தங்களை அடையாளப்படுத்த அவர்கள் இயக்கும் ஃபேஸ்புக் பக்கம், அல்லது நிறுவனம் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வழங்க வேண்டும். 

    விளம்பரங்களை வழங்கும் போது மற்ற நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடும் போது விளம்பரதாரர் சார்பில் ஃபேஸ்புக்கிற்கு மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கூடுதலாக வழங்க வேண்டும்.



    முன்னதாக இதே திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிவித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் அரசியல் விளம்பரங்களை தெளிவாக கண்டறிய முடியும். புதிய விதிமுறைகள் ஃபேஸ்புக் சார்பில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவை பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் அமலாகும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    அரசியல் விளம்பரங்களை பயனர் க்ளிக் செய்யும் போது ஆட் லைப்ரரி எனும் பக்கம் திறக்கும். இங்கு விளம்பரம் தோன்றும் தேதி மற்றும் அவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற விவரங்களும், இதற்கு விளம்பரதாரர் செலவிட்டிருக்கும் தொகை உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி ஒருவழியாக வழங்கப்பட்டுள்ளது. #Facebook #Messenger



    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. மெசஞ்சரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது. 

    வாட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் செயலியிலும் குறுந்தகவல்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய குறுந்தகவலை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட குறுந்தகவல் இருந்த இடத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது. மெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.



    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மெசஞ்சரில் குறுந்தகவல்களை அழித்தபின், இந்த அம்சம் உருவாக்கப்படுவதை ஃபேஸ்புக் உறுதி செய்திருந்தது. குறுந்தகவல்களை பயனர் தங்களுக்கு மட்டும் அழித்துக் கொள்ள குறுந்தகவல்களை தேர்வு செய்து “Remove for You” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் குறுந்தகவல் பயனருக்கு மட்டும் அழிக்கப்பட்டு விடும். ஃபேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். #Instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அவரவர் ஃபாளோவர்களிடம் தெரிவிக்க ஏதுவாக ஸ்டோரிஸ் அம்சம் சேர்க்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அம்சத்தை தற்சமயம் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார்.

    ஃபேஸ்புக் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டு பேசிய மார்க் சூக்கர்பர்க், "இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்," என தெரிவித்தார். 

    இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தினர். அந்த வகையில் ஆறு மாதங்களில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்திருக்கிறது.



    இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளிலும் ஸ்டோரிஸ் அம்சம் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை ஸ்டோரிக்களாக பதிவு செய்யலாம்.

    முன்னதாக இதேபோன்ற அம்சம் ஸ்னாப்சாட் செயலியில் மெமரிஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் இந்த அம்சத்தை கொண்டு வருவாய் ஈட்டத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் விளம்பரங்கள் தோன்ற துவங்கின. #Instagram #Apps
    ×