search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பாதியில் நிறுத்தப்பட்ட ஃபேஸ்புக் புதிய ஆப்
    X

    பாதியில் நிறுத்தப்பட்ட ஃபேஸ்புக் புதிய ஆப்

    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புதிய செயலி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    சமூக வலைதளத்தை மேலும் வளர்க்கவும், பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஃபேஸ்புக் புதிய செயலியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. லொல் (LOL) என்ற பெயரில் உருவாகி வந்த செயலியில் பயனரை மகிழ்விக்கும் நோக்கில் மீம், ஜிஃப் போன்றவை இடம்பெற்றிருக்கும். 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் லொல் செயலியை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குறைந்தளவு பயனர்களுடன் சோதனை முறையில் துவங்கப்பட்ட லொல் திட்டம் நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை.

    லொல் செயலியை ஃபேஸ்புக் 100 மாணவர்களுடன் இயக்கி வந்தது, பின் செயலியில் ஃபேஸ்புக் ஊழியர்களில் 100 இளைஞர்களை சேர்த்துக் கொண்டது. ஃபேஸ்புக் இனி மெசஞ்சர் கிட்ஸ் செயலியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மெசஞ்சர் கிட்ஸ் செயலி 13 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.



    ஃபேஸ்புக் மெசஞ்சர் கிட்ஸ் செயலி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை குழந்தைகள் தங்களது பெற்றோர் அனுமதிக்கும் நண்பர்களுடன் உரையாட முடியும். எனினும், இந்த செயலியை பயன்படுத்துவதால் குழந்தைகளின் உறக்க முறை மற்றும் சுயமரியாதையை குறைக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    “தளத்தில் வரும் தரவுகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், குழந்தைகளுக்கென பிரத்யேக சமூக வலைதளம் துவங்குவது நல்லதல்ல. சர்வதேச அளவில் குழந்தைகள் ஸ்கிரீனினை பார்க்கும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஃபேஸ்புக் அவர்களை ஸ்கிரீனினை பயன்படுத்த செய்கிறது,” என சமூக வலைதள வல்லுநரான அனூப் மிஸ்ரா தெரிவித்தார்.
    Next Story
    ×