search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ்புக்"

    ஃபேஸ்புக் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை வழங்குகிறது. #WhatsApp


    ஃபேஸ்புக் இன் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து சோதனை துவங்கப்பட்டது. 

    இந்நிலையில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.



    - முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யவும்

    - பின் “add participant” பட்டனை க்ளிக் செய்து பயனர்களை சேர்க்கலாம்

    - நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற கான்டாக்ட்களை சர்ச் பாக்ஸ் மூலம் தேடி, தேர்வு செய்ய வேண்டும்

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் வரும் போது உங்களது திரையில் அழைப்பில் இருப்பவர்களை பார்க்க முடியும்

    - அழைப்பில் இருப்பவர் மற்றும் பட்டியலிடப்பட்டு இருக்கும் முதல் கான்டாக்ட் தான் உங்களை சேர்த்திருக்க வேண்டும்.

    - க்ரூப் வாய்ஸ் கால் செய்யும் போது அதனை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.

    - க்ரூப் வீடியோ கால் செய்யும் போது கேமராவை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது கான்டாக்ட்-ஐ எடுக்க முடியாது. கான்டாக்ட் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் ஹிஸ்ட்ரி அழைப்புகளுக்கான டேபில் பார்க்க முடியும். கால் ஹிஸ்ட்ரியை க்ளிக் செய்து ஒவ்வொரு கான்டாக்ட்டையும் பார்க்க முடியும்.

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது உஙக்ளை பிளாக் செய்தவருடன் இருக்க முடியும், ஆனால் நீங்கள் பிளாக் செய்த அல்லது உங்களை பிளாக் செய்தவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.

    குறுந்தகவல்களை போன்றே வாட்ஸ்அப் க்ரூப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஃபேஸ்புக் இந்த ஆண்டு 42% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #Facebook #socialmedia


    ஃபேஸ்புக் நிறுவன நிதிநிலை அறிக்கை ஜூன் 30, 2018 வரையிலான காலக்கட்டத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 1323 கோடி டாலர்களை வருவாய் ஈட்டியிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் 932 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்த நிலையில், மொத்தம் 42% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    ஃபேஸ்புக் மொத்த வருமானத்தில் அதன் விளம்பர பிரிவு மட்டும் 1303 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. ஜூன் 2018, வரையிலான காலக்கட்டத்தில் தினசரி ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 147 கோடியாகும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% அதிகரித்திருக்கிறது. 

    இதேபோன்று மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜூன் 30, 2918 வரையிலான காலக்கட்டத்தில் 223 கோடி ஆகும். 2018 இரண்டாவது காலாண்டில் மட்டும் ஃபேஸ்புக் மொபைல் விளம்பர பிரிவு வருவாய் அந்நிறுவன விளம்பர வருவாயில் 91% ஆகும். இது 2017 இரண்டாவது காலாண்டில் 87% ஆக இருந்தது.

    ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்களை ஒன்றிணைப்பதில் தொடர்ந்து அர்த்தமுள்ள வழிகளை கட்டமைப்பது மற்றும் மக்களை பாதுகாப்பாக வைப்பதில் தொடர்ந்து முதலீடு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.

    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையிலும் வியாபாரத்தில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
    உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena



    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது. 



    புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற  நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

    புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena 
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் இனி செயலியை இவ்வாறு பயன்படுத்த முடியாது. #WhatsApp #Apps



    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகம் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நாடு முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மாற்றங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்-இல் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களில் புகைப்படம், வீடியோ அல்லது ஜிஃப் போன்றவற்றுடன் ஃபார்வேர்டு பட்டன் நீக்கப்படுகிறது. இத்துடன் ஃபார்வேர்டு மெசேஜ் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது, எனினும் இந்தியாவில் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது.

    இந்தியா தவிர்த்து மற்ற சந்தைகளில் ஃபார்வேர்டு செய்யப்படும் எண்ணிக்கையை 20-ஆக நிர்ணயம் செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா டெஸ்ட் செய்வோருக்கு வழங்கப்பட்டு அதன் பின் மற்றவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய அம்சம் சர்வெர்-சார்ந்த அப்டேட் கிடையாது என்பதால், பீட்டா அல்லத பயனர்களுக்கு சாதாரண ஆப் அப்டேட் போன்றே வழங்கப்படும். இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்தும் தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் எவ்வாறு இருக்கும் போன்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஃபார்வேர்டு லேபெல் சேர்க்கப்பட்டது. நாடு முழுக்க போலி செய்திகள் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தொடர்ந்து போலி செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்கிறது.
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் பயனர்களுக்கு வரும் மெசேஜ் போலி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Facebook
     


    ஃபேஸ்புக்-இன் மெசன்ஜர் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செயய்ப்படுவது தெரியவந்துள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய அம்சம் ஃபேஸ்புக் மெசன்ஜர் இன்பாக்ஸ்-இல் வரும் குறுந்தகவல்களில் அறிமுகமில்லாத கான்டாக்ட், சமீபத்தில் உருவாக்கப்பட்ட அக்கவுன்ட், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறாரா அல்லது போன் நம்பர் மூலம் மெசன்ஜரை பயன்படுத்துகிறாரா, வசிக்கும் நாடு அல்லது பகுதி என்பது போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வழி செய்கிறது. இதுகுறித்து மதர்போர்டு சார்பில் வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அனுப்பியவர் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.

    இத்துடன் கூடுதல் விவரங்களில் குறுந்தகவலை அனுப்பியவர் மெசன்ஜர் செயலியை தனது மொபைல் எண் ரஷ்யாவில் இருந்து உருவாக்கியிருப்பதாகவும், இந்த அக்கவுன்ட் சமீபத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.

    தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டத்தை எதிர்த்து ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  #Facebook #socialmedia
    தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரிட்டன் தகவல் ஆணையம் அபராதம் விதிக்க உள்ளது. #Facebook #databreaches



    கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து பல லட்சம் பயனர்களின் தகவல்களை சட்ட விரோதமாக பயன்படுத்த அனுமதியளித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சட்ட வல்லுநர்கள் முன் ஆஜராகி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் எவ்வாறு கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவிற்கு வழங்கப்பட்டது குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.


    அரசியல் பிரச்சாரங்களில் தகவல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையை தொடர்ந்து ஃபேஸ்புக் மீது 5,00,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட இருப்பதாக பிரிட்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹாம் தெரிவித்து இருக்கிறார்.

    மக்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் தவறவிட்டதாகவும், தகவல் பயன்பாடு மற்றும் மற்றவர்கள் எவ்வாறு தகவல்களை பெறுகின்றனர் என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வழங்கவில்லை எனவும் டென்ஹாம் தெரிவித்திருக்கிறார்.


    கோப்பு படம்

    “சமூக வலைதளத்தின் குறிப்பிட்ட பகுதி பயனர்களை, புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்சார நிறுவனங்களை வாக்காளர்களிடம் தொடர்பு கொள்ள வைக்கின்றன. எனினும், இதுபோன்ற வழிமுறைகள் சட்டத்திற்கு எதிரானது,” என டென்ஹாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் முன் ஃபேஸ்புக் பதில் அளிக்க முடியும். அந்த வகையில் பிரிட்டன் தகவல் ஆணையரின் அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இதற்கு பதில் அளிப்பதாகவும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இதர நாட்டின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை போன்றே பிரிட்டன் தகவல் ஆணையத்துக்கும் வழங்குவோம்.” என ஃபேஸ்புக் நிறுவன மூத்த பாதுகாப்பு அலுவலர் எரின் எகான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.  #Facebook #databreaches
    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரென் பஃபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.



    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக் தளத்தின் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரென் பஃபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 

    தற்சமயம் உலக பணக்காரர்கள் பட்டியல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர். பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் 2.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.

    உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் மூன்றாவது பணக்காரர் ஆன மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு தற்சமயம் 8160 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது வாரென் பஃபெட்-ஐ விட 37.3 கோடி டாலர்கள் அதிகம் ஆகும்.

    எட்டு மாதங்களில் இல்லாத அளவு ஃபேஸ்புக் பங்கு மதிப்பானது மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி வெகுவாக குறைந்து 152.22 டாலர்களாக இருந்தது. அதன்பின்னர் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்ற பங்குச்சந்தையில் ஃபேஸ்புக் பங்கு மதிப்பு 203.23 டாலர்கள் ஆக அதிகரித்து இருக்கிறது.

    உலகில் தொழில்நுட்ப துறை வளர்ச்சி மற்ற துறைகளை விட அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பர்க் தெரிவித்து இருக்கிறது. இந்த பட்டியலில் உலகின் 500 பணக்காரர்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், நியூ யார்க்கில் ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை நிறைவுறும் வேளையில் பட்டியல் மாற்றம் செய்யப்படுகிறது.
    லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஃபேஸ்புக் கைப்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. (Bloomsbury AI) நிறுவனத்தை கைப்பற்றுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் ஃபேஸ்புக்கின் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை ஃபேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. ஃபேஸ்புக்கின் சொந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அல்லது FAIR அமைப்பு டீப் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்து அதிநவீன சென்சார்கள், இயற்கை குரல் செயலாக்கம் மற்றும் இதர துணை பிரிவுகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த பிரிவுக்கென ஃபேஸ்புக் அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வார்த்தைகளை மிக துல்லியமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது. இதை கொண்டு சமூக வலைத்தளம் மற்றும் அதன் இதர பண்புகளை மொத்தமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



    தற்சமயம் ஃபேஸ்புக் தரவுகளை கூர்ந்து கவனிக்க பல்வேறு பணியாளர்களை வெளிநாடுகளில் ஃபேஸ்புக் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த பணியாளர்கள் ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச தரவுகள் என பயனர்கள் குறிப்பிடும் தகவல்கள் அனைத்தையும் ஆய்வு செய்கின்றனர். மேலும் அவை ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறுகிறதா என்ற வகையிலும் தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்காலத்தில் அல்காரிதம்களை பயன்படுத்த ஃபேஸ்புக் தி்ட்டமிட்டுள்ளது. எனினும், இதனை வெற்றிகரமாக செயல்படுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளும் மென்பொருளை ஃபேஸ்புக் கண்டறிய வேண்டும். இந்த மென்பொருள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு கொண்டிருப்பதோடு மிகவும் சிக்கலான பிரச்சனைகளையும் கண்டறியும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
    ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.




    ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம்.  

    ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி, அவர்களின் அருகில் உள்ள ஆடியோக்களை பதிவு செய்யும் - இவற்றில் நீங்கள் மற்றவர்களுடன் உரையாடுவது - அல்லது உங்களின் படுக்கை அறையில் உள்ள ஒலி - உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவற்றை நிறுவனத்துக்கு அனுப்பும்.

    ஜூன் 14-ம் தேதி காப்புரிமை விண்ணப்பம் சார்ந்த விவரங்களை மெட்ரோ பதிவிட்டு இருந்தது. இதில் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களின் மொபைல் போன் மைக்-ஐ தானாக ஆன் செய்து பதிவு செய்கிறது என்ற விவரங்கள் பதிவிடப்பட்டு இருந்தது. 

    அதன்படி ஃபேஸ்புக் அதிக பிட்ச் கொண்ட ஆடியோ சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும், இந்த ஒலி மனிதர்களுக்கு கேட்காது. என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிக்னல் உங்களின் மொபைலில் ஆடியோவை பதிவிட்டு, அவற்றை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பும்.



    இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஃபேஸ்புக், இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவையில்லாத பட்சத்தில் ஏன் இதற்கான காப்புரிமையை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

    இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன பொது ஆலோசகர் ஆலென் லொ மேஷபிள் தளத்துக்கு அளித்திருக்கும் அறிக்கையில், “சில புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமைகளை மற்ற நிறுவனங்களுக்கு முன் பதிவு செய்வது வழக்கமான நடைமுறை தான். இதுபோன்ற காப்புரிமைகள் எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதோடு, இவை மற்ற நிறுவனங்களால் வணிக மயமாக்க முடியும்," என தெரிவித்திருக்கிறார்.

    இதன் மூலம் தற்சமயம் ஃபேஸ்புக் மற்ற நிறுவனங்கள் உங்களின் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது. 

    “இந்த தொழில்நுட்பம் ஃபேஸ்புக்கின் எவ்வித சாதனங்கள் மற்றும் சேவைகளிலும் இதுவரை சேர்க்கப்படவும் இல்லை, சேர்க்கப்படாது" என ஆலென் லொ தெரிவித்திருக்கிறார்.

    புகைப்படம்: நன்றி UNITED STATES PATENT APPLICATION
    இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.




    ஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.

    புதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும். 

    “ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.



    கூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.

    மேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.

    புகைப்படம்: நன்றி @wongmjane
    ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் எனும் புதிய பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும். 

    ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது. 

    அந்த வகையில் ஆன் திஸ் டே அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய மெமரீஸ் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட தேதியில் கடந்த ஆண்டுகளில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட்கள், புகைப்படங்களை பார்க்க முடியும். இத்துடன் மெமரீஸ் பகுதியில் கடந்த வாரம் நீங்கள் தவற விட்ட போஸ்ட்களை உங்களுக்கு பட்டியலிடும்.
    ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அதன் பயனர்கள் பதிவிட்ட போஸ்ட்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்க செய்கிறது.
    புதுடெல்லி:

    உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஃபேஸ்புக்கின் புதிய பிழை (பக்) அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறது. இந்த பிழை ஃபேஸ்புக் போஸ்ட் பிதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப்பாடுகளை செட் செய்திருந்தாலும், அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது.  

    “தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.


    கோப்பு படம்

    புதிய பிழை மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தகவல் அவர்களின் நியூஸ் ஃபீடில் தெரிவிக்கப்படும். “ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வோருக்கு போஸ்ட்களை பொதுவாக போஸ்ட் செய்யக்கோரும் பரிந்துரைகள் தானாக செயல்படுவது தெரியவந்துள்ளது.” என எகன் தெரிவித்துள்ளார். 

    “இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது, இன்று முதல் இந்த பிழை மூலம் பாதிக்கப்போட்டுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பிழையில் ஏற்கனவே பயனர்கள் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. 

    மேலும் பயனர்கள் முன்பை போன்று தங்களது போஸ்ட்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். இந்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். 


    கோப்பு படம்

    இந்த பிழை என்ன செய்யும்?

    ஃபேஸ்புக்கில் பயனர்கள் போஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட போஸ்ட்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யக்கோரும் மெனு தெரியும். இதில் பயனர் பப்ளிக் என தேர்வு செய்யும் பட்சத்தில் போஸ்ட்-ஐ அனைவரையும் பார்க்க முடியும். மற்ற ஆப்ஷன்கள் பயனர் தேர்வு செய்வதற்கு ஏற்ப போஸ்ட்-ஐ பார்ப்போர் பிரிக்கப்படுவர். 

    எனினும் மே 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிகம் பேர் பார்க்கக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்ட போஸ்ட்களையும் ஃபேஸ்புக் தானாக மற்றவர்கள் பார்க்கும் படி செய்துள்ளது. செட்டிங் மாற்றப்பட்டு இருப்பதை பயனர்கள் கவனிக்காத பட்சத்தில், அவர்களின் போஸ்ட் அதிகம் பேருக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

    ஃபேஸ்புக்கின் புதிய பிழை 1.4 கோடி பயனர்களை பாதித்து இருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட போஸ்ட்களுக்கான செட்டிங் மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    கோப்பு படம்

    ஃபேஸ்புக்கின் சமீபத்திய சொதப்பல்கள்

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரம் ஃபேஸ்புக் தளம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஆளானது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள் மற்றும் நிறுவனர் இன்று வரை பதில் அளித்து வருகின்றனர். 

    இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வகையில் ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டது.

    பயனர் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவோ, சேமிக்கவோ இல்லை என்றும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சேவையை மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்டது என தெரிவித்தது.
    ×