search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102622"

    திருவள்ளூரில் ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சிவி நாயுடு சாலை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி ஜான்சிராணி (47) ஆசிரியர்.

    இவர் அரக்கோணத்தில் இருந்து வரும் அம்மாவை அழைத்து செல்ல சென்னை சில்க்ஸ் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மற்றொரு சம்பவம்...

    திருவள்ளூரை அடுத்த புடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (52). இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்திலிருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    திருவள்ளூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ((37). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ராமச்சந்திரன் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டருகே உள்ள முக்குளத்தீஸ்வரர் கோவில் குளத்தில் உள்ள சேற்றில் முகம் அழுத்திய நிலையில் ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ராமச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் அருகில் உள்ள முட்புதரில் கிடந்தது. மேலும் அவரது செருப்பு குளத்தின் கரை ஓரம் இருந்தது.

    எனவே உடன் வந்தவர்களே ராமச்சந்திரனை சேற்றில் முகத்தை அழுத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமச்சந்திரனை அழைத்து சென்ற வாலிபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில் கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

    இக்கோவிலில் நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த பிறகு இரவு கோவிலை பூசாரிகள் பூட்டிச் சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு தனியாக கழற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இக்கோவிலில் பஞ்சலோக சிலைகள் இருந்தன. இங்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பஞ்சலோக சிலைகள் திருப்பாச்சூரில் உள்ள வசிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சலோக சிலைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.

    கடந்த ஆண்டு இக்கோவிலில் கலசம் திருடு போயிருந்தது. தற்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பது கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே 2 கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே காக்கலூர் பூங்கா நகர் உள்ளது. இங்கு சிமெண்ட் கடை வைத்திருப்பவர் செல்வராஜ். இவர் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு ‌ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதே பகுதியில் உள்ள மாருதி நியூடவுனில் செல்போன் கடை வைத்திருப்பவர் பாலாஜி. இவருடைய கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

    இந்த கடையில் இருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம், செல்போன் உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம்.

    இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை - பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பெரிய குப்பம் கே.கே.ஆர். மில்லினியம் சிட்டியில் வசிப்பவர் பழனி. ரயில்வே அர்பன் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி பழனியம்மாள் உடல் நிலை சரியில்லாததால் சென்னை திரு.வி.க நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

    இரவு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த ஏலம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்மன். இவரது மனைவி கீதா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று காலை 2 பேரும் வேலைக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்துகிடந்தது. பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நடத்திய வாகன சோதனையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைதானார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நேற்று இரவு சென்னைதிருப்பதி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் வாகன சோதனை சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் போலீசாரைக் கண்டதும் ஓடத் தொடங்கினார்.

    போலீசார் அவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிடம் கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவரது பெயர் பிரேம்நாத் (23) குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கனகலட்சுமி கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கனகலட்சுமி திரும்பி வர வில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே வீட்டுவாசலில் விளக்கு ஏற்றிய பெண் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 42). நேற்று மாலை அவர் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினார்.

    அப்போது அவரது உடையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் அலறி கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் சசிகலாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவள்ளூரில் இன்று காலை சத்துணவு ஊழியர்கள் மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கடந்த வியாழக் கிழமை முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று காலை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

    திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Nutritionstaff

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகம் முன்பு நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 113 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து அங்கேயே உண்டு உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதி நாதன், உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

    இன்று 3வதுநாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.

    தற்போது திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு ராஜேஷ் (20), முக்கரம்பாக்கம் பாஸ்கர் (38), விநாயகபுரம் முனி கிருஷ்ணன் (22) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர 11 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. இவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 78 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து அறிய பரிசோதனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் அஜிதா (3). மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இந்த குழந்தை குணம் அடைந்துள்ளதாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அஜிதா இன்று பரிதாபமாக உயிர் இழந்தாள்.

    திருவள்ளூரை அடுத்த சின்ன எடப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மகன் நித்திஷ் வீரா (6). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் வழியிலேயே சிறுவன் நித்திஷ் வீரா பரிதாபமாக இறந்தான்.

    டெங்கு காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகள் சமீபத்தில் உயிர் இழந்தனர். இப்போது மேலும் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    இது குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் நிருபரிடம் கூறியதாவது:-

    எந்த அரசாக இருந்தாலும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணப்பயனாக ரூ. 5 லட்சம் வழங்கிடவேண்டும். சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியமாக மாதம் தோறும் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 78 பெண்கள் உள்பட 113 பேர் மீது திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×