search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேக்"

    தளபதி 63 படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக இந்த படத்திற்காக மெனக்கிடவிருப்பதாகவும், அட்லியின் ரசிப்புத் தன்மையையும் பாராட்டினார். #Thalapathy63 #ARRahman
    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,

    இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும். 



    இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி.

    இவ்வாறு கூறியிருக்கிறார். #Thalapathy63 #Vijay63 #ARRahman #Atlee #Nayanthara

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படத்திற்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு படம் ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கிய நிலையில், படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Vijay63 #Thalapathy63KickStarts
    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. முதல்கட்டமாக அனல்அரசு இயக்கத்தில் சண்டைக்காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்டது. விஜய் அதில் நடித்தார்.

    படத்தில் வில்லனாக முன்னணி கதாநாயகர் ஒருவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில், அது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மலையாள பட உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதுதிவர படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63KickStarts

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கிய நிலையில், படக்குழுவில் மேலும் 3 நடிகர்கள் இணைந்துள்ளனர். #Vijay63 #Thalapathy63Pooja #Thalapathy63KickStarts
    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், பாடலாசிரியர் விவேக், கதிர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அந்த புகைப்படத்தில் நடிகர்கள் ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோரும் உள்ளனர். இதன்மூலம் இவர்களும் படத்தில் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. இவர்கள் மூன்று பேருமே வில்லன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்ராஜ் மட்டும் தற்போது காமெடி கலந்த வில்லத்தனத்தில் நடித்து வருகிறார்.



    இவர்களை தவிர்த்து கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கனிக்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Atlee #Thalapathy63Pooja #Thalapathy63KickStarts

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கவிருக்கிறது. #Vijay63 #Thalapathy63Pooja #Thalapathy63KickStarts
    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கனிக்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Atlee #Thalapathy63Pooja #Thalapathy63KickStarts

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை துவங்கவிருக்கிறது. #Vijay63 #Thalapathy63Pooja
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜய்யின் 63 படம் விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி உருவாகவிருக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் நாளை துவங்க இருக்கிறது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கவனிக்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Atlee #Thalapathy63Pooja

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கதிர் கூறினார். #Vijay63 #Thalapthy63 #Kathir
    விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அட்லி இயக்கும் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

    இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’ஒரு நடிகராக, விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட பழகிய பிறகு, அவருடைய கேரக்டரும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. சிறந்த மனிதர். நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கிறவர். அவரை எப்போதும் தூரத்திலிருந்து ரசிக்கும் ரசிகன் நான்.

    இதுவரை இப்படி இருந்த சூழலில், அவர்கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது, எனக்குப் பெரிய சந்தோ‌ஷத்தைக் கொடுத்திருக்கு. இந்த வாய்ப்பை வாழ்க்கையில மறக்கவே முடியாது. இயக்குநர் அட்லி அண்ணா எனக்கு நல்ல நண்பர். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. என் சினிமா வளர்ச்சியைப் பற்றி அடிக்கடி பேசும் நபர்.



    நல்ல படங்களில் நான் நடிக்கும்போது, கூப்பிட்டு பாராட்டுவார். விஜய் சார் படத்துல உனக்கும் ஒரு ரோல் இருக்கு’னு சொன்னபோது, அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீண்டு வருவதற்குள் மொத்தக் கதையையும், படத்துல என்னுடைய கேரக்டர் பற்றியும் பேசினார். எனக்கு ரொம்ப சந்தோ‌ஷமாகி விட்டது. ஏதோ வந்துட்டுப் போற மாதிரியான கேரக்டரை அவர் எனக்குக் கொடுக்கவில்லை, படத்துல முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். கதையைச் சொன்னதுமே, ஓகே சொல்லிட்டேன். #Vijay63 #Thalapthy63 #Kathir

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது. 

    படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Kathir

    அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. #Viswasam #AjithKumar #ViswasamFDFS
    அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்வாசம்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    சிவா இயக்க அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமய்யா, விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் நள்ளிரவு 1.30 மணிக்கு சில திரை அரங்குகளில் ரிலீசானது. கண் விழித்து பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் உதவியுடன் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

    வேலூரில் ஒரு திரையரங்கில் சில ரசிகர்கள் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் ரிலீசானதை கொண்டாடியதோடு வெற்றி அடைய பிரார்த்தனை செய்தனர். அதே நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை சீண்டுவதைப் போல், கட் அவுட்டுகளில் வசனங்களையும் ரசிகர்கள் அச்சிட்டிருந்தனர்.



    வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் தியேட்டருக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சியில் படம் பார்க்க சென்றனர்.

    அதிகாலை 4 மணிக்கு காட்சிக்கு ரசிகர்கள் முண்டியடித்தபடி தியேட்டருக்குள் சென்ற போது, பிரசாத்துக்கும், மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் பிரசாத்தை வயிற்றில் குத்தினர். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களிலும் வெட்டினர். இதனை தடுக்க வந்த ரமேசையும் தலையில் கத்தியால் வெட்டினர்.

    இதனை கண்ட ரசிகர்கள் தியேட்டரில் சிதறி ஓடினர். கடும் பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். #Viswasam #AjithKumar #ViswasamFDFS

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara
    கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.

    10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.



    இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார். 

    அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் - நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும் முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.



    நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

    வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.



    டி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம், நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் `விஸ்வாசம்' குடும்பத்தின் தேவை. #Viswasam #ViswasamReview #ViswasamFromToday  #ViswasamFDFS #ViswasamThiruvizha #BlockbusterViswasam #AjithKumar #Nayanthara 

    அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார். #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - சிவா இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இதற்கிடையே இயக்குநர் சிவா, டி.இமான் மாலைமலருக்கு அளித்த பேட்டி:

    படத்தில் தலயோட என்ட்ரி எப்படி இருக்கும்?

    உடனடியாக டி.இமான் செம மாஸாக இருக்கும் என்றார். சிவா கூறும்போது, பல காட்சிகள் அஜித் சாரின் முதல் காட்சி போல் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும்படியாக இருக்கும். மானிட்டரில் காட்சிகளை பார்க்கும் போது அனைவரும் கம்பீரம், பிரமிப்பு, மாஸாக உணர்வார்கள் என்றார்.



    இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? 

    கண்டிப்பாக இணைவோம். 200 சதவீத நம்பிக்கை உள்ளது. அஜித் சாருக்கு என்னுடைய குழுவின் மீதும், உழைப்பின் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எனவே மீண்டும் இணைவோம்.

    மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அவரை பாட வைப்பீர்களா?

    அதற்கான வாய்ப்பில்லை. சார் அதை விரும்ப மாட்டார். ஒவ்வொருவரும் அவரவர் வேலையை சரியாக செய்தாலே சிறப்பாக இருக்கும் என்று நினைப்பவர். எனவே கண்டிப்பாக அவர் பாடுவார் என்ற நம்பிக்கை இல்லை. #Viswasam #AjithKumar #ViswasamPongal #ViswasamThiruvizhaOnJan10 #ViswasamFestivalFromJan10 #ViswasamFromTomorrow

    சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார். #Viswasam #AjithKumar
    விஸ்வாசம் படம் மூலம் அஜித்துடன் 4-வது முறையாக இணைந்துள்ள சிவா அளித்த பேட்டி:

    டிரெய்லரில் அஜித் தன்னை வில்லன் என்று சொல்கிறாரே?

    ஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டும். இந்த கேள்விக்கான பதிலை கதை கொடுக்கும். படத்தில் இருக்கும் முக்கிய திருப்பம் அது.

    இந்த கதையை கேட்டு பிடித்த பிறகே அவர் சம்மதித்தார். படம் முழுக்க அவர் இருப்பார். படத்தில் கதையை சொல்வதே அவர் கதாபாத்திரம் தான்.



    கமர்சியல் படம் இயக்குவதில் இருக்கும் சிரமம் என்ன?

    எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டி இருப்பது தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வருவார்கள். அவர்களை ஒரே மாதிரி திருப்திபடுத்த வேண்டும்.

    பேட்ட பட டிரெய்லருக்கு பதிலாக டிரெய்லர் அமைந்தது பற்றி?

    நாங்கள் அந்த வசனம் பேசும் காட்சியை எப்போதோ படம் பிடித்துவிட்டோம். டிரெய்லரையும் முன்பே தயாரித்துவிட்டோம். நான் சமூகவலைதளங்களில் இல்லை. என் நண்பர்கள் இதுபற்றி சொன்னார்கள். #Viswasam #AjithKumar

    ×