search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம்"

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சி தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

    இதேபோல், திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்றார்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குசாவடிக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு எந்திரத்தை பொருத்துவதில் தாமதம் ஆகிய குறைபாடுகள் உள்ளது.

    தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதில் காட்டும் அக்கறையை வாக்குச்சாவடிகளில் காட்டியிருந்தால் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டு இருக்காது. மதசார்பற்ற முற்போக்கு தலைமையிலான அணிகள் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி வரை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


     
    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
     
    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #PChidambaram #DelhiHighCourt
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நேற்றைய வழக்கு விசாரணைக்குப்பின் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Chidambaram #INXMedia
    ஏர்செல் மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடைசியாக டிசம்பர் 18-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிலரை வழக்கில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 11ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். அதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    சிதம்பரம் அருகே குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி அருகே உள்ள வெளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்குமரன்(வயது25). அதேபகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ்(28). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மது குடித்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் நடுரோட்டில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

    மேலும் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட தமிழ்குமரன், கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர்.

    முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #PChidambaram #CentralGovernment
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    முதலில், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், “பணமதிப்பு நீக்கம், பெருமளவு அதிர்ச்சி அளித்த முடிவு” என்று தனது மவுனத்தை கலைத்து கூறினார். பிறகு, சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், பணமதிப்பு நீக்கம், தேர்தல்களில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவில்லை என்று கூறினார்.



    இப்போது, வடக்கு பிராந்திய ராணுவ தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற டி.எஸ். ஹூடா, ராணுவ துல்லிய தாக்குதல் பெரிதுபடுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்படுவதாக கூறியுள்ளார்.

    முக்கிய பதவிகளில் இருந்தவர்கள், தங்களது அச்சத்தை களைந்து மவுனத்தை கலைத்து அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PChidambaram #CentralGovernment
    ரிசர்வ் வங்கியில் இருந்து தேர்தலுக்காக பணம் கேட்டு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துவருவதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். #Modi #RBI #PChidambaram
    கொல்கத்தா:

    பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேர்தல் செலவுகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.

    மேலும், தனக்கு வேண்டிய நபர்களை ரிசர்வ் வங்கியின் முக்கிய பதவிகளில் மத்திய அரசு பணி அமர்த்தி இருப்பதாகவும், அதன் மூலம் வரும் 19-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வைத்து, ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பா.ஜ.க. அரசு முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



    இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளில்  எது நடந்தாலும் அது ரிசர்வ் வங்கியின் புனிதத்தை சீர்குலைக்கும் எனவும் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Modi #RBI #PChidambaram
    பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.
    * ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்).

    * பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

    * சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளை கொண்ட அற்புத தலம் இது.

    * இங்குள்ள நடராஜ பெருமானின் சன்னிதிக்கான, கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

    * இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் இறைவன் அருள்பாலிக்கிறார். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    * சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி, தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

    * திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிதம்பரம் திருத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். எனவே அந்த நால்வரின் குரு பூஜையும், இந்த ஆலயத்தில் பெரிய திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    * சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா மிகவும் முக்கியமானது.

    * முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, நட ராஜரை துதித்து வழிபடுவார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுப்பாராம்.

    * சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.

    * சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்த குளம் அருகில் சிறு தூண் நடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால், ஆலயத்தின் 4 ராஜ கோபுரங்களையும் தரிசிக்க முடியும்.

    * சிதம்பரம் ஆலயம் என்றதுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த ஆலயத்தின் மூலவர் நடராஜர் என்பதாகத்தான் நினைப்பு வரும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்ததும் நடராஜரைத் தேடியே ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆலயத்தின் மூலவர், லிங்க வடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். #Chidambaram #RahulGandhi
    சென்னை:

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமே பாஜகவை ஒழித்து, முன்னேற்றமிக்க ஒரு ஆட்சியை மத்தியில் அமைப்பது என தெரிவித்தார்.

    மேலும், பிரதமர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி ஏதும் இல்லை எனவும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



    தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி கட்சிகளே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    தேர்தல் பிரச்சாரங்களில் கூட்டணி கட்சிகளும், மக்களும் விரும்பினால் பிரதமராக தயார் என ராகுல்காந்தி கூறி வந்த நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Chidambaram #RahulGandhi
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #ED
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. 

    இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக முறைகேடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 6 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கால அவகாசம் முடிந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மேலும் சில ஆதாரங்களை திரட்ட வேண்டியது இருப்பதால் கால அவகாசம் வழங்கும் படி கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். 
    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    கடலூர்:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு குழு என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒத்திகை பயிற்சியில் முதலில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.

    சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நீச்சல் வீரர்கள் மாநில பேரிடர் மீட்புக்குழு, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் மற்றும் கடலூர் மாவட்ட போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து படகு, லைப்ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு சிதம்பரம் சாமியார்பேட்டை உள்ளிட்ட சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடங்களுக்கு சென்றனர்.

    ×