search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார். #PMModithreenationtour #PMModiIndonesia
    புதுடெல்லி:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    30-ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

    ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.



    மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார். #PMModithreenationtour #PMModiIndonesia 
    இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. #Indonesiaparliament #tougherantiterrorlaw
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அந்நாட்டின் பிரசித்தி பெற்ற 3 தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய சட்ட வரைவில், பயங்கரவாத அமைப்புகளில் இணைவோர், அமைப்பிற்காக ஆட்களை சேகரிப்போர் ஆகியோர் மீது காவல்துறையே நேரடியாக வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த புதிய சட்டவரைவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பயங்கரவாத இயக்கங்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. #Indonesiaparliament #tougherantiterrorlaw
    பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். #PMModi #ForeignVisit






    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடி விவாதிப்பார் என கூறப்படுகிறது.

    ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்கிரி-லா  உரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ப்ரீத்தி சரண் கூறியுள்ளார். இதில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய தலைவர் மோடி ஆவார்.

    இந்த பயணத்தின் போது  இந்தியா - சிங்கப்பூர் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. இது சிங்கப்பூருக்கு மோடி செல்வது இரண்டாவது முறையும், இந்தோனேசியாவுக்கு செல்வது முதல் முறையும் ஆகும். #PMModi #ForeignVisit
    இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா பகுதியில் நேற்று நிகழ்ந்த டிரக் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Indonesiatruckaccident #CentralJava

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா மாகாணத்துக்கு உட்பட்ட ப்ரிபெஸ் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் சர்க்கரையை எற்றிக்கொண்டு டிரக் ஒன்று ஜகார்த்தா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த அந்த டிரக்கின் பிரேக்கில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு கார், 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 வீடுகள் இந்த விபத்தில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஜாவா பகுதியில் நிகழ்ந்த இதுபோன்ற விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesiatruckaccident #CentralJava
    இந்தோனிசியாவில் எரிமலை ஒன்றில் இருந்து திடீரென புகையை வெளியேறியதால், அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். #Volcanoeruption #IndonesiaVolcano

    ஜகார்த்தா:

    இந்தோனிசியா நாட்டில் உள்ள யோகியகர்டா மற்றும் மத்திய ஜாவா பகுதிகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்குள்ள எரிமலைகள் புகையை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் கடந்ததால், தற்போது இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

    இந்நிலையில், அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மெராபி என்ற மலையில் அமைந்துள்ள எரிமலை ஒன்று திடீரென்று புகையைக் கக்கியது. வெளிவந்த புகையால் வானம் கருப்பாக மாற, இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடினர். 



    கூட்டத்திலிருந்த ஒருவர் அந்த எரிமலை புகையை தனது செல்போனில் படம் பிடித்தார். இந்த சம்பவத்தால், மத்திய ஜாவா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேசியாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 347 பேர் உயிரிழந்ததோடு, 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Volcanoeruption #IndonesiaVolcano
    இந்தோனேசியாவில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். #IndonesiaExplosion
    சுரபயா:

    இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வாகனங்களை ஓட்டி வந்த யாரோ ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.



    இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndonesiaExplosion
    ×