search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ.ராசா"

    பாராளுமன்ற தேர்தலின் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நீலகிரி தொகுதியின் திமுக வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆ.ராசா, 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 

    இதையடுத்து அப்பகுதியின் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார். #ARaja #DMK
    காரைக்குடி:

    காரைக்குடி பாண்டியன் திடலில் 21-ம் ஆண்டு கலைஞர் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச்சங்க புலவர் தொழில் அதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார். சங்க நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா, நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆ.ராசா தனது சிறப்புரையில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கலைஞரின் அரசியலோடு இலக்கியமும் எப்போதும் இணைந்தே இருக்கும். தந்தை பெரியார், கலைஞரின் இலக்கிய ஆற்றலை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகாலமாக தனது ஆளுமையை நிலை நாட்டி வருபவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்பட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர். இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் நிறைவேற்ற தயங்கிய சட்டங்களை துணிச்சலாக நிறைவேற்றியவர் கருணாநிதி.

    தற்போதுள்ள மாநில அரசு ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், குட்கா ஊழல், சமீபத்தில் ஆளுவோருக்கு வேண்டியவர்களான காண்டிராக்டர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். மத்தியில் மதவெறி கொண்ட ஆட்சியும், மாநிலத்தில் மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காத ஆட்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விழாவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், நகர அவைத்தலைவர் ராகோ அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப.சின்னத்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #ARaja #DMK
    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மகளிரணி மாவட்டச் செயலாளர் மகாதேவி ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

    கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:  

    மகளிரயினர் கட்சிப் பணிகள், சேவைகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாய்மார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் தி.மு.க வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். 

    கூட்டத்தில், மாநில நிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் பிரபாகரன், ஒன்றியச்  செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெயர் பலகை திறந்து, கட்சி கொடியேற்றி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
    ×