என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிங்காநல்லூர்"
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் பங்காரு லே-அவுட்டை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த 1-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சீரடி சாய்பாபா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம், செயின், மோதிரம், வளையல் உள்பட 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம் பாளையம் தாமோதரசாமி நாயுடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 46). இவரது மனைவி சித்ரா(37). இவர்களுக்கு பாலாஜி(14) என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
பாலாஜி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி தனது வீட்டு மாடியில் பரீட்சைக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை துணி காயபோடுவதற்காக மாடிக்கு வந்தார். அவருக்கு உதவியாக பாலாஜி துணியை எடுத்து அங்குள்ள கம்பியில் காய போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் தெரியாமல் கை வைத்து விட்டார். இதில் எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்ககாக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிங்காநல்லூர்:
சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் இருகூர் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆன்லைன் லாட்டரிகள் விற்றதாக அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் (60) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து லாட்டரி நம்பர்கள் எழுதப்பட்டிருந்த 3 அட்டைகள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.
இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் போஸ் ராவத்தூர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக சிங்காநல்லூரை சார்ந்த பால சுப்பிரமணியன் (57) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.950-ஐ பறிமுதல் செய்தார்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் பழனிசாமி வீதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகள் கோமதி (வயது 18). இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக தனக்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
சிங்காநல்லூர்:
சிங்காநல்லூர் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மிதப்பதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர் இருகூர் சின்னியம்பாளையம் ரோட்டில் உள்ள மாணிக்கம் நகரில் வசித்து வந்த சந்திரசேகர் (வயது 70) என்பதும், மனைவி இறந்து துக்கத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
சிங்காநல்லூர் ஆண்டாள் லே-அவுட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிவசுப்பிரமணியம் தினமும் குடித்து விட்டு வருவார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த சிவசுப்பிரமணியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்