search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியபாளையம்"

    பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியபாளையம்:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா (வயது 39). இவரது மனைவி பெயர் ஜோதி பிரியா (34).

    பிரியாவின் தாய்வீடு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மேந்திரா தனது மனைவியுடன் காரில் சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்த உடன் சென்னை திரும்பினார்கள். தர்மேந்திரா காரை ஓட்டி வர முன்னிருக்கையில் ஜோதி பிரியா அமர்ந்து வந்தார்.

    சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரியபாளையத்தை அடுத்த தானா குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது கார் தர்மேந்திராவின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. சாலை தடுப்பில் பயங்கர சத்தத்துடன் மோதியது.

    இந்த விபத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த ஜோதி பிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மேந்திரா படுகாயமடைந்தார்.

    தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

    ஜோதி பிரியாவின் உடல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த தர்மேந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பெரியபாளையம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளுடன் மாயமான பெண் சென்னையில் மீட்கப்பட்டார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தூட்டார் தெருவைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (38). ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (31). இவர்களுக்கு 9 வயது, 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் பாக்யராஜூக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், கடைக்கு வந்த பாக்யராஜ் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் 9 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார். குழந்தையிடம் பாக்யராஜ் விசாரித்தபோது ஜெயலட்சுமி தனது 2-வது மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றதாக கூறினார்.

    இதனால் ஜெயலட்சுமியையும் தனது மகளையும், பாக்யராஜ் உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தருமாறு பாக்யராஜ் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது, ஜெயலட்சுமி சென்னை அனகாபுத்தூரில் இருப்பதை போலீசார் அறிந்து விரைந்து சென்றனர். கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது சித்தி வீட்டிற்கு ஜெயலட்சுமி வந்ததை போலீசார் அறிந்தனர்.

    பின்னர், ஜெயலட்சுமியையும் அவரது மகளையும் மீட்டு ஆரணிக்கு அழைத்து வந்து பாக்யராஜிடம் ஒப்படைத்தனர். கணவன்- மனைவிக்கு போலீசார் அறிவுரை வழங்கி சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

    மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பேட்டை மேடு கிராமம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் தரணி பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பெரியபாளையம்- வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டை மேடு கிராமம் சர்ச் அருகே சென்ற போது திடீரென சாலையில் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் தரணி மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய தரணி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம் அருகே விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 16). இவர் பெரியபாளையம் நோக்கி செல்வதற்காக நடந்து சென்றார்.

    அப்போது வட மதுரையில் இருந்து வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ‘லிப்’ கேட்டு ஏறினார்.

    வடமதுரை கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே மற்றொரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பரத்குமார் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் விழுந்த பரத்குமார் மீது ஏறி இறங்கியது.

    சம்பவ இடத்திலேயே பரத்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரிய வில்லை. தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரியபாளையம் அருகே கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவர் டிராக்டருக்கு பயன்படுத்தும் ஐட்ராலிக் எந்திரத்தை பழுது பார்க்க அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் கொடுத்து இருந்தார். அதனை மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுதொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த ராஜை கைது செய்தனர்.

    பெரியபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் ஆரணி பஜார் வீதிக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் விசாரணை செய்து வந்தனர்.

    இதுதொடர்பாக திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த பலராமன், மணிகண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 2 பேரையும் போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் - கன்னிகைபேர் நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வடமதுரை கூட்டுச் சாலை அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்தது மற்றும் ஜெயபுரம் கூட்டுச்சாலையில் மோட்டார் சைக்கிள் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    அவர்கள் செங்குன்றத்தை அடுத்த கார்த்திக், காவாங்கரை ஸ்ரீநாத் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் 5 கால்கள் உடைய மாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டிற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் புதுவாயல் - பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் வளாகத்தில் திடீரென 5 கால்கள் உடைய பசு மாடு ஒன்று புகுந்து சுற்றி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பசுமாடு யாருடையது என்று தெரியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் நின்ற 5 கால் உடைய பசு மாட்டை பார்த்து சென்றனர்.

    அந்த மாட்டுக்கு புன்னாக்கு, தவிடு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தனர். மேலும் பெண்கள் மாடுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூஜை செய்து வணங்கினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கால்கள் உடைய பசுமாடு எப்படி ஊருக்குள் வந்தது. அதன் உரிமையாளர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.
    பெரியபாளையம் அருகே மதுபாட்டில் பதுக்கிவிற்ற 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். #arrest

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மொண்ணவேடு, எரையூர் சுற்று வட்டார பகுதிகளில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவுப்படி மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், அழகேசன் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற மொண்ணவேடு பேட்டை பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்ற கருப்பாயி, சுமதி, வெங்கட்டம்மாள், எரையூர் பகுதியை சேர்ந்த மோகனா, ஜெயந்தி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 5 பேரையும் போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    சென்னை அருகே பெரியபாளையத்தில் பக்தர்களின் பாவம் போக்கும் வகையில் பவானி அம்மன் அருளாட்சி செய்து வருகிறாள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சென்னை அருகே பெரியபாளையத்தில் பக்தர்களின் பாவம் போக்கும் வகையில் பவானி அம்மன் அருளாட்சி செய்து வருகிறாள். இங்கு அம்பிகையின் கட்டளைப்படி அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பெரியபாளையத்து அம்மனுக்குத் கோவில் ஒன்றினை எழுப்பினார்கள். மூலக் கர்ப்பக்கிரகத்தில் உள்ள அம்பிகையின் தலைப்பகுதியில் வளையல்கார வியாபாரி இரும்புக் கம்பி கொண்டு துழாவியதால் உண்டான வடுவை இன்றும் காணலாம்.

    சுயம்பு முர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் அன்னையானவள் கவசம் இடப்பட்டு முன்புறமாய் அமர்ந்து இருக்க, பின்புறமாய் அன்னையின் திரு உருவம் சுத வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகமானது குடை பிடித்திடும் வண்ணம் அன்னையின் சந்நிதி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.

    உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் வண்ணம் அன்னையானவள் நான்கு கரங்கள் கொண்டு திகழ்கின்றாள். வலது முன்புறக் கரத்தில் சக்தி ஆயுதமும் பின்புறக் கரத்தில் சக்ராயுதமும் ஏந்தப்பட்டுள்ளன.

    இடது முன்புறக் கையில் கபாலமும் பின்புறக் கையில் சங்கும் ஏந்தப்பட்டுள்ளன. இடது முன்புற கையில் ஏந்தப்பட்டுள்ள கபாலத்தில் மூன்று தேவிகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.

    பவானி அம்மனின் முக அமைப்பு எல்லோரையும் கவர்ந்து இழுத்திடும் வண்ணம் அமைந்துள்ளது. எடுப்பான மூக்கும், அதில் மின்னி ஒளிர்ந்திடும் மூக்குத்தியும், இதழ்களில் தவழும் புன்னைகையும், அன்னையைப் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கிறது. அவளுக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் பட்டுப்புடவையும், ஆபரணங்களும் அவளின் தெய்வீக எழில் தோற்றத்துக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றன.

    அம்பிகையின் பக்தர்கள் தங்கள் திருமணத்தின்போது ஒரு புதிய சடங்கு ஒன்றினை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டிய தாலியைக் கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக்கொண்டு, அதனை, அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்வதை இன்றும் காண முடிகிறது.

    இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் அன்னையாக பவானி அம்மன் திகழ்கின்றாள்.
    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பெரியபாளையம்:

    ஆந்திர மாநிலம் மதனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 20). கடந்த வாரம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

    இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான கார்த்திக் (20), தினேஷ் (25) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.

    பெரியபாளையம் அருகே சென்னை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கன்னிகைபேரில் உள்ள மின்வாரியம் அலுவலகம் அருகே வந்த போது எதிரே குஜராத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிலம்பரசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அவர்களை கிராம மக்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்து போனார். அவர் நண்பர்கள் கார்த்திக், தினேஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #Tamilnews
    பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே லாரி மோதியதில் குடிநீர் வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 39). மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் வந்த போது திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி திடீரென சாலை தடுப்பை தாண்டி எதிர் திசையில் தாறுமாறாக ஓடி சேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சேகரை மீட்டு வெள்ளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது டாக்டர் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து சேகரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வெள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததே சேகர் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வெள்ளியூர் ஆஸ்பத்திரி முன்பு சேகரின் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரபாகரன், துணை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #Tamilnews
    ×