search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னேரி"

    பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே சக்திநகரை சேர்ந்தவர் சந்துருகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்தநிலையில் சந்துருகுமாரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார்.

    இதுபற்றி சந்துருகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    சந்துரு வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    நேற்று பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போனது. பொன்னேரி பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. தற்போது சசிகலா கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சசிகலா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவர் பொன்னேரி புதுவாயல் சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் அங்கு சென்று பூபாலனை பிடித்து சிறையில் அடைத்தார். கைதான பூபாலன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    பொன்னேரி அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த விடதண்டலம் கிராமத்தைச்சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி .

    இவரது மனைவி தங்கம் (36) வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து உடலில் பரவியது.

    உடல் கருகிய நிலையில் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்குசிகிச்சைபலனின்றி தங்கம் இறந்துவிட்டார். இது குறித்து பொன்னேரி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தனசேகர் (வயது 13). பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை அவர் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றார். பொன்னேரி தேரடி பகுதியில் நின்று புறப்பட்டபோது தனசேகர் ஓடும் பஸ்சில் தாவி ஏறினார்.

    இதில் நிலைதடுமாறிய தனசேகர் கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொன்னேரி பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம், பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் பொன்னேரி பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் செல்லவில்லை.

    இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று திரும்பிய பயணிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி போலீசார், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பொன்னேரி பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் கூறும்போது, ‘பஸ் சரியாக குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. அதிகாரிகளை கேட்டால் சரியாக பதில் கிடையாது. நிறுத்தப்பட்ட பஸ்கள் குறித்து அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவது கிடையாது. மேலும் பஸ்களை மாற்றி இயக்கப்படுகின்றன’ என்றனர்.

    பொன்னேரியில் மணப்பெண் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கள்ளூர் புதுகுப்பம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவுத்ரா (23). இவர் ஆந்திரா தடா அருகில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் பவுத்ராவின் பெற்றோர்கள் சென்னைக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பவுத்ராவை காணவில்லை.

    இது குறித்து திருப்பாலை வனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பெண் காணாமல் போனதால் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஜீவா தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (43). கூலித் தொழிலாளி. இவர் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். கல்மேடு பகுதியில் அவர் வரும் போது பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு சென்ற பழவேற்காட்டை சேர்ந்த யூசுப் (26) என்பவரது மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.

    இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்துவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் மரக்கிளையை வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி அறிந்ததும் சுப்பிரமணியின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பொன்னேரி- செங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் உரிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பணியாளர்களை வேலை வாங்கி வருவதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

    இதனிடையே பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அவ்வழியே வந்தார்.

    அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கல்லூர் கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் காளி அம்மன் கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

    இன்று காலை, கோவிலுக்கு சாமி கும்பிட சிலர் சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

    கோவில் இருந்த குத்து விளக்கு, வெள்ளி பூஜை பொருட்கள், பட்டுப் புடவைகள், ஆம்ளிப்பர், ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே கார்-வேன் மோதல்லில் 10 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள சுப்பா ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று இரவு பெரும்பேடு குப்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மீஞ்சூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    வேனை ராஜேந்திரன் என்பவர் ஒட்டி வந்தார். பொன்னேரி அடுத்த சாணார்பாளையம் என்ற கிராமத்தின் அருகே வேன் வந்தது. அப்போது மீஞ்சூரில் இருந்து எதிரே வந்த கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. சஞ்சீவி (50), பிரசாந்த் (24), ரித்தீஷ் (24) ஆகிய மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் 3 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சோமஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் சோபனா (வயது 15).

    கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற சோபனா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி நகரைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சரிதா (19). வீட்டில் இருந்து வெளியே சென்ற சரிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டகாலனியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி புனிதா (22) கடந்த 23-ந் தேதி புனிதா உடல்நிலை சரிஇல்லாததால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    சம்பத் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது புனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் புனிதா எங்கு சென்றார். என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    மாயமான 3 பெண்களும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மாயமானார்கள். தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவம் குறைந்து இருந்தது.

    இப்போது பெண்கள் மீண்டும் மாயமாகும் சம்பவம் அதிகரித்து இருப்பது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. #Tamilnews
    ×