search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    மணல் குவாரி அமைக்காததை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மாட்டுவண்டி மணல் குவாரிகளை இயக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாட்டுவண்டிகளோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையின் இருபுறமும் மாட்டுவண்டி மற்றும் மாடுகளை நீண்ட வரிசையில் நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நகரசெயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்டப் பொருளாளர் மோகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

     ஒன்றியச் செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி , ராமகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்ட அமைப்பாளர்கள் ராமசந்திரன், ராஜகுரு, ராதாகிருஷ்ணன், நகர நிர்வாகிகள் காளியப்பன், அன்பழகன், செல்வரத்தினம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்பேது அவர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சொத்துவரியை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சுபாசு, சூடாமணி, அவை தலைவர் கலையமுதன், செல்வகணபதி, துணை செயலாளர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் அண்ணாமலை, ரகுபதி, தாமரை கண்ணன், லலிதா சுந்தரராஜன், பகுதி செயலாளர்கள் சாந்த மூர்த்தி, குமரவேல், முருகன், ராமச்சந்திரன், நாசர்கான், கிச்சிப்பாளையம் ஜெய், கே.டி.மணி, பச்சியப்பன், ஜபீர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடியில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுந்தரம், ஒன்றிய செயலாளர் நிர்மலா, அம்மாசி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முல்லை பன்னீர் செல்வம், நகர செயலாளர் பால சுப்பிரமணி, வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் செழியன், முருகேசன், சக்கரவர்த்தி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம் மற்றும் பழனிசாமி, அகிலன், இளைஞர் அணி அமைப்பாளர் சந்திர மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #DMK
    கோவை:

    சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பொறுப்புகுழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், மெட்டல் மணி, குமரேசன், குப்புசாமி,உமா மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவை லோகு, பகுதி பொறுப்பாளர்கள் மார்க்கெட் மனோகரன், சேதுராமன், கோவிந்தராஜ், மற்றும் மகளிர் அணி மீனா லோகு, நிர்வாகிகள் முருகவேல், கார்த்திக் செல்வராஜ், மகுடபதி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர்கள் திருமலை ராஜா, கேபிள் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் திராவிட மணி, தினேஷ், டாக்டர் கணேஷ், கோபிநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சொத்துவரி உயர்வுக்கு எதிராககோ‌ஷம் எழுப்பபட்டது. முன்னதாக கார்த்திக் எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறியதாவது-

    தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் படி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சொத்துவரி உயர்வை 50 சதவீதமாக குறைத்தாலும் கூட வரி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லைஎன்றால் மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் என்றார்.

    சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் செயலாளர் மேங்கோ பழனிசாமி, இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், வெங்கடேஷ் உள்பட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். #DMK
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கும்பகோணம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கண்ணள், மாநில குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கவுரவ தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர்கள் கார்த்தி கேயன், ஜெயம் பிள்ளை, நகர தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், ஜெயக்குமார், நகர பொருளாளர் பாண்டித்துரை உள்பட பலர் பேசினர்.

    பெட்ரோல், டீசல் மற்றும் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். நல வாரிய செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும். மத்திய அரசு கொண்டு வர துடிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் வசூல் செய்யும் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு முறை சரி செய்யும் வரை பழைய முறையையே பின்பற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் இந்த சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமஜெயம், கந்தசாமி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், நல்லம்பள்ளி கிளை துணைத்தலைவர் முருகன், நிர்வாகிகள் உஷாராணி, ருக்மணி, சீனிவாசன் ஜம்பு, லலிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பொதுவினியோகத்திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன்கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ரேஷன்கடைபணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விரைவுபோக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.சம வேலைக்கு சம ஊதியமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவேண்டும். ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்குரிய ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். எடை குறைவு இல்லாமல் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
    கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஹால்துரை, மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் எட்வின் கூறியதாவது:-

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்தி வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களால் நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தின் போது ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-2013-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்துவதுடன், பணியாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
    இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாமக்கல்:

    இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

    மாவட்டப் பொருளாளர்கள் ஆறுமுகம், சின்னஅப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இம்மானுவேல் சேகரன் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கக் கோரியும், குரு பூஜை விழாவை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் அர்ச்சுணன், பழனிவேல், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலளளர் காமராஜ், துணைத்தலைவர் சையத்பயாஸ் அகமத், ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகண்ணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.  #tamilnews
    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம்:

    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    ஊராட்சி செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது.

    அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட பொருளாளர் கட்டக்குடி டி.முருகேசன் தலைமை தாங்கினார். வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசினார்.

    இதில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி முருகையன், கணினி உதவியாளர்கள் சங்க நிர்வாகி மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ராஜா, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி எழுத்தர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கி அரசாணை வழங்கிட வேண்டும். கணினி உதவியாளர்கள் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணி மேற்பார்வையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. 
    நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #NEET
    சென்னை:

    நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளூவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருமாவளவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் பேசியதாவது:-

    நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவிகள் மருத்துவ கல்வியை எளிதில் பெற முடியவில்லை. மருத்துவ கல்வியை பெற கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்களே உள்ளனர் என்ற காரணத்தை கூறி அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.

    மாநில உரிமையை பறிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. சமூக நீதியை காக்க வேண்டும். குருகுலக்கல்வி திட்டத்தை திணிக்க கூடாது.

    ஆதி திராவிட மாணவர் விடுதிகளின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். தமிழக அரசின் உரிமைகளில் மத்திய அரசின் தலையீடுகளை வன்மையாக கண்டிக்கிறோம். நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இதுவரை 3 மாணவிகள் உயிர் இழந்துள்ளனர். நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக திணித்து வருகிறது.

    8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களை கைது செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலாஜி, செல்லத்துரை, ரா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #NEET
    ×